என் மலர்
நீங்கள் தேடியது "the old woman died. சிகிச்சை பலனின்றி"
- கயிறு திரிக்கும் தொழிலாளி . இவர் இரவு கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார்.
- மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள அழகுசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி ராஜாமணி (வயது 55), கயிறு திரிக்கும் தொழிலாளி . இவர் இரவு கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது சேலத்தில் இருந்து தாரமங்கலம் நோக்கி பெரியசோரகை சீரங்கனுர் பகுதியை சேர்ந்த தனசேகரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு மூதாட்டியை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்தார்.