என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அரசு திட்டங்கள் குறித்து பா.ஜனதாவினர் ஆய்வு"

    • பாரதீய ஜனதா கட்சி ஆலோசனைக்கூட்டம் கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டியில் நடைபெற்றது.
    • பாரதீய ஜனதா கட்சி மேலிட பார்வையாளர் டாக்டர் சுதாகர ரெட்டி கலந்து கொண்டு பேசினார்.

    கொடைரோடு:

    நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி ஆலோசனைக்கூட்டம் கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை தாங்கினார்.

    நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பள்ளபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் நாகேந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி மேலிட பார்வையாளர் டாக்டர் சுதாகர ரெட்டி கலந்து கொண்டு பேசினார்.

    மேலும் பள்ளபட்டி ஊராட்சி பகுதியில் மத்திய அரசு திட்டப்பணிகள், விவசாயிகளுக்கு மானியம், பிரதமர் வீடு கட்டும் திட்டம், ரேஷன் கடைகளில் மத்திய அரசு நலத்திட்டங்கள் முறையாக கிடைக்கிறதா? என மக்களிடம் கேட்டறிந்தார். தூய்மை பணியாளர்களிடம் குறைகேட்டு அவர்களுக்கு சால்வை, இனிப்புகள் வழங்கினார்.

    ×