என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருட வீதி"

    • திருப்புவனம் அருகே உள்ள கொந்தகை பெருமாள் கோவிலில் கருட வீதி உற்சவம் அடுத்த மாதம் 5-ந் தேதி நடக்கிறது.
    • வைணவ திவ்யதேச தலங்களில் ஒன்றும் ஆகும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோவில் உள்ளது. இது திருமலையாழ்வாரின் அவதார திருத்தலம் ஆகும். வைணவ திவ்யதேச தலங்களில் ஒன்றும் ஆகும்.

    தென்கலை வைணவ மரபின் முதன்மை ஆச்சாரியார் மணவாளமாமுனிகள், குரு திருவாய்மொழி பிள்ளையிடம் உபதேச சாரங்களை கற்று தெளிந்தது இந்த கோவிலில் தான். இங்கு கோவில் கொண்டுள்ள பெருமாளை வழிபடுவோர் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.

    இறைவனை பூரம் நட்சத்திரத்தில் வணங்கி வழிபடுவோருக்கு திருமணத்தடைகள் நீங்கும்.பதவி உயர்வுகள் கிட்டும் என்பது ஐதீகம் ஆகும்.

    கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோவிலில் அடுத்த மாதம் 5-ந் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு ஸ்தபன, விசேட திருமஞ்சனமும், 11.30 மணிக்கு விசேட தீபாராதனை, தீர்த்த கோஷ்டி பிரசாதம் வழங்குதலும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தெய்வநாயகப் பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி புறப்பாடு நடக்கிறது.

    ×