என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணம் செய்து"

    • சிறுமியின் வீட்டிற்கு இளங்கோவன் வந்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் இளங்கோவனை கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி யின் 16 வயது மகள் 8-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் டி.ஜி.புதூர் பகுதியை சேர்ந்த இளங்கோ வன் (22). கூலி தொழிலாளி. இவர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் பழகி வந்ததை சிறுமியின் தாயார் கண்டித்தார்.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சிறுமியின் தாயார் வேலைக்கு சென்று விட்டார். அப்போது சிறுமி யின் வீட்டிற்கு இளங் கோவன் வந்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 15-ந்தேதி இளங்கோவன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இளங்கோவன் டி.ஜி. புதூர் பகுதியில் வாடகை வீட்டில் அந்த சிறுமியுடன் தங்கி இருந்தார்.

    இந்நிலையில் நேற்று அந்த சிறுமி மயக்கம் அடைந்தார். இதனால் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்த தகவல் சிறுமியின் தாயிக்கு கிடைத்தது. இதையடுத்து சிறுமியின் தாய் ஆஸ்பத்தி ரிக்கு சென்று பார்த்த போது சிறுமி கர்ப்பமாக இருநதது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய் பங்களாப் புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இளங்கோவன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் இளங்கோவனை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடை த்தனர்.

    ×