என் மலர்
நீங்கள் தேடியது "3 பேரிடம்"
- கண்காணிப்பு காமிரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
- இருசம்பவங்கள் குறித்தும் காட்டூர் மற்றும் வெரைட்டிஹால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது
கோவை
கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள மாவட்ட பா.ஜனதா அலுவலகம் மற்றும் ஒப்பணக்கார வீதியில் செயல்பட்டு வரும் லட்சுமணன் என்ப வருக்கு சொந்தமான துணிக்கடையில் நேற்று இரவு ஒரே நேரத்தில் மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டை வீசி னர்.
இந்த இருசம்பவங்கள் குறித்தும் காட்டூர் மற்றும் வெரைட்டிஹால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பா.ஜ.க அலுவலக பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராவில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வருவதும், அவர்கள் பெட்ரோல் நிரப்பிய திரியுடன் கூடிய பாட்டிலை பா.ஜ.க அலுவலகத்தின் எதிரே வி.கே.கே.மேனன் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு வீசி விட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. ஆனால் அதில் அவர்களின் முகம் தெளிவாக பதிவாக வில்லை.
இருப்பினும் அவர்கள் வந்த ேமாட்டார் சைக்கிளின் அடையாளத்தை வைத்து அவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே ஒப்பணக்கார வீதியில் உள்ள கண்காணிப்பு காமிராவை வெரைட்டிஹால் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது,அதில் 3 பேர் கடையின் மீது பெட்ரோல் குண்டினை வீசி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதில் மர்மநபர்களின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. அதனை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் துணிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கோவையை சேர்ந்த 3 பேரை பிடித்து ெவரைட்டிஹால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களிடம் எதற்காக பெட்ரோல் குண்டை வீசினீர்கள்? யாருடைய தூண்டுதலின் பேரிலும் இதில் ஈடுபட்டீர்களா? எனவும் அவர்களிடம் விசாரணை மேற்துகொண்டனர்.
மேலும் இவர்களே பா.ஜ.க அலுவலகம் மீதும் பெட்ரோல் வெடிகுண்டை வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்திலும் அவர்கள் 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.