என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாரசந்தை"
- திருப்பத்தூர் வாரசந்தையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
- முத்திரையிடாத எடைகற்கள், தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை,காளையார் கோவில், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் சென்னை தொழி1லாளர் ஆணையம் மற்றும் சட்டமுறை எடை யளவு கட்டுப்பாடு அலுவலகம் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணைய அமலாக்க பிரிவு அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் முன்னதாக திருப்பத்தூரில் வாரச்சந்தை மற்றும் வணிக வளாக வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் வியாபாரிகள் பயன்படுத்தும் தராசுகள், எடைகற்கள், மின்னணு தராசுகள், விட்ட திராசுகள் முதலியவற்றிக்கான முத்திரைகள், வணிக நிறுவனம் நடத்துவதற்கான அரசு சான்றிதழ்கள், பொட்டலங்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யும் பொருட்களுக்கான விலை நிர்ணய பட்டியல், நுகர்வோர் குறை தெரிவிக்க வேண்டிய புகார் எண், தயாரிப்பு தேதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் முத்திரை வைக்கப்படாத மின்னணு தராசுகள், மேஜை தராசுகள் உட்பட 29 எடை அளவு இயந்திரங்களை பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து சிவகங்கை மற்றும் காளையார் கோயில்களில் பொட்டல பொருட்கள் மற்றும் சட்டமுறை எடை அளவு சட்டத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அரசின் முறையான வழிகாட்டுதலை பின்பற்றாத காரணத்தினால் அந்நிறுவனங்களுக்கு அபதாரம் விதிக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து வியாபாரிகள் மத்தியில் மின்னணு தராசுகளுக்கு வருடத்திற்கு ஒரு முறையும் ஏனைய மற்ற தராசுகளுக்கு 2ஆண்டுகளுக்கு ஒரு முறையும் முத்திரை வைக்க வேண்டும் என்றும் அதற்கான சான்றிதழ்களை அதனுடன் இணைத்து வைக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் 5000ரூபாய் அவதாரம் விதிக்கப்படும் என்றும் வியாபாரிகள் மத்தியில் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த ஆய்வில் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் இ.முத்து, துணை ஆய்வாளர் வேலாயுதம், உதவி ஆய்வாளர்களான தீன தயாளன், வசந்தி மற்றும் திருப்பத்தூர் நகர் காவல் நிலைய காவலர்கள் ஆகியோர் இருந்தனர்
- வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.
- கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள். இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.25, கத்தரிக்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.25 சின்ன வெங்காயம் ரூ. 40. உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.60, புடலை காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.25, பீன்ஸ் ரூ.100, கேரட் ரூ.60, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.160, அவரைக்காய் ரூ.120, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது. இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.
- தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல ஆயிரம் பேர் வந்து செல்லும் பெரிய சந்தை ஆகும்.
- வாரசந்தையில் குவியும் கோழி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சியில் வருவாய் இனங்களாக உள்ள வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் கூடுகிறது.
இங்கு தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல ஆயிரம் பேர் வந்து செல்லும் பெரிய சந்தை ஆகும்.
இந்நிலையில் சந்தைப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் கறிக்கோழி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால் கடை வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் வியாபாரிகளின் வருகை குறைந்து வருவாய் இழப்பு ஏற்படுவதால் .சந்தையை சுத்தப்படுத்த வேண்டுமென குத்தகைதாரர்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும் சந்தை பேட்டையில் உள்ள கழிவறை கட்டிடத்தில் இருந்து முறையற்ற மின்சார இணைப்பை கறி கோழி கடைகளுக்கு வழங்கி வருவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர் .
இதுபற்றி வாரசந்தையின் குத்தகைதாரர் பெரியசாமி கூறுகையில், வாரச்சந்தை பகுதியில் குத்தகை காலம் முடிந்தும் இயங்கி வரும் கறிக்கோழி கடைகளுக்கு வழங்கப்பட்டு வரும் முறையற்ற மின்சார இணைப்பை துண்டித்து, கடைகளை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும். சந்தை பகுதி வளாகத்தை தூய்மை படுத்தி தொற்றுநோய் பரவாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் .
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்