என் மலர்
நீங்கள் தேடியது "பாகிஸ்தான் பிரதமர்"
- பிரதமர் லி உட்பட சீன உயர்மட்டத் தலைவர்களை சந்திக்க செரீப் திட்டம்.
- பாகிஸ்தான் பிரதமருடன், அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக்குழுவும் பயணம்
பெய்ஜிங்:
சீன அதிபராக ஜி ஜின்பிங் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் செரீப் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ளார். பிரதமராக பதவியேற்ற பிறகு செரீப் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
சீனப் பிரதமர் லீ கெகியாங்கின் அழைப்பின் பேரில் சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமருடன், அந்நாட்டு அமைச்சர்கள் பிலாவல் பூட்டோ சர்தாரி,இஷாக் தார், அக்சன் இக்பால், மரியம் ஔரங்கசீப்,சாத் ரபீக் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக்குழுவும் பங்கேற்றுள்ளது. தலைநகர் பெய்ஜிங் விமான நிலையத்தில் செரீப்பை சீன மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.
தமது பயணத்தின் போது அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் லி உட்பட சீன உயர்மட்டத் தலைவர்களை சந்திக்கும் பாகிஸ்தான் பிரதமர் இரு தரப்பு உறவுகள், அந்நாட்டுடனான வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
குவாதார் துறைமுகத்தை மேம்படுத்த சீனாவின் ஒத்துழைப்பு மற்றும் பல பில்லியன் டாலர் மதிப்பில் செயல்படுத்தப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் குறித்தும் இந்த பேச்சுவார்த்தையின்போது ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
- தனது தாயை இழந்து தவிக்கும் பிரதமர் மோடிக்கு எனது அனுதாபங்கள்.
- உலகத்தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இஸ்லாபாத் :
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அனுதாபம் தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "ஒருவருக்கு அவரது தாயின் இழப்பைக் காட்டிலும் பெரிதான இழப்பு என்று எதுவும் இருந்து விட முடியாது. தனது தாயை இழந்து தவிக்கும் பிரதமர் மோடிக்கு எனது அனுதாபங்கள்" என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே என உலகத்தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
- ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு நேரத்தையும், வளத்தையும் வீணடிப்பாதா? என்பது நம் கைகளில் தான் உள்ளது.
- இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால், மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்
இஸ்லாமாபாத்:
கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தடைசெய்யப்பட்ட அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்களை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவுடன் நடந்த போரில், பல பாடங்களை கற்றுக் கொண்டோம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக 'அல் அரேபியா' டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:
பாகிஸ்தான் அமைதியையே விரும்புகிறது. நம்மிடம் பொறியாளர்கள், டாக்டர்கள் மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். இந்த விலைமதிப்பற்ற சொத்துகளை முறையாக பயன்படுத்தி, வளர வேண்டும் என்பது எங்களது விருப்பம். அமைதியாக வாழ்ந்து வளர்ச்சி பெறுவதா அல்லது ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு நமது நேரத்தையும், வளத்தையும் வீணடிப்பாதா? என்பது நம் கைகளில் தான் உள்ளது.
நாங்கள் இந்தியாவுடன் மூன்று போர்களை நடத்தியுள்ளோம், மேலும் அவை மக்களுக்கு அதிக துன்பம், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றை மட்டுமே கொண்டு வந்துள்ளன. போரின் மூலம் பல பாடங்களை நாங்கள் கற்றுக்கொண்டோம்.
அமைதியாக வாழ்ந்து, இந்தியாவுடன் உள்ள பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் வளங்களை, வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் மூலம் வீணடிக்க விரும்பவில்லை. இரு நாடுகளும் அணு ஆயுத நாடுகள் தான். இரு நாட்டு ராணுவங்களிடமும் பல அதிநவீன ஆயுதங்கள் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால், மிகப்பெரிய இழப்பு ஏற்படும். யாராலும் உயிர் பிழைக்க முடியாது. எனவே இந்தியாவுடன் அமைதியான உறவை விரும்புகிறோம். அப்போது தான் இரு நாடுகளும் வளர முடியும். காஷ்மீர் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நேர்மையாக பேச வேண்டும். இந்திய பிரதமர் மோடிக்கு எனது செய்தி என்னவென்றால், காஷ்மீர் போன்ற பிரச்சினைகளை தீர்க்க நேர்மையான பேச்சுக்களை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இம்ரான்கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கைது செய்வதற்கான தடை தற்காலிகமாக நீட்டிப்பு.
- பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் நான்கு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. இது தொடர்பான ஒரு வழக்கில் அவர் ஆஜராகாததால் இஸ்லாமாபாத் நீதிமன்றம் அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.
ஆனால் அவர் வழக்கில் ஆஜராகவில்லை. இதனால் நேற்று முன்தினம் இம்ரான்கானை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக களமிறங்கினர்.
அதன்படி நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்கள் அவரது வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். இதனையறிந்த அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட வன்முறையில் அவரது ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. அதில் ஏராளமான போலீசார் காயம் அடைந்தனர்.
இம்ரான்கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அவரை கைது செய்வதற்கான தடையை தற்காலிகமாக நீட்டித்து லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இம்ரான்கான், அவரது நெருங்கிய உதவியாளர் ஷா மெக்மூத் மற்றும் ஏராளமான தொண்டர்கள் மீது பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் நான்கு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- காரில் இருந்து ஷெபாஸ் ஷெரீப் இறங்கியதும் அவருக்கு பெண் அதிகாரி குடையை பிடித்தார்.
- சில பயனர்கள் பெண் அதிகாரியை மழையில் நனைய விட்டதற்காக பிரதமரை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாரீசில் நடைபெறும் 2 நாள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று பிரான்ஸ் சென்றடைந்தார். அப்போது அங்கு மழை பெய்து கொண்டு இருந்தது. உடனே பெண் அதிகாரி, பிரதமர் வாகனத்தின் அருகே ஒருவர் குடையுடன் வந்தார்.
காரில் இருந்து ஷெபாஸ் ஷெரீப் இறங்கியதும் அவருக்கு பெண் அதிகாரி குடையை பிடித்தார். அப்போது அந்த பெண் அதிகாரியிடம் பேசிய ஷெபாஸ் ஷெரீப் பின்னர் அதிகாரியிடம் இருந்து குடையை வாங்கி அவரே குடையை பிடித்தபடி நடந்து செல்வது போன்றும், இதனால் அந்த பெண் அதிகாரி மழையில் நனைந்து செல்வது போன்றும் காட்சிகள் உள்ளது.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் செயல்பட்டை பாராட்டினர். ஆனால் சில பயனர்கள் பெண் அதிகாரியை மழையில் நனைய விட்டதற்காக பிரதமரை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
- மாநாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வருகை தந்தபோது மழை பெய்தது.
- சமூக ஊடக பயனர்கள் பிரதமரை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர்.
உலகளாவிய நிதி ஒப்பந்தம் தொடர்பாக பாரிசில் இரண்டு நாள் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்துகொண்டார். நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு கடன் திட்டத்தை பெறுவதற்கான முயற்சியாக பாரிஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.
இந்நிலையில், மாநாட்டிற்கு ஷெபாஸ் ஷெரீப் வருகை தந்தபோது மழை பெய்தது. காரில் இருந்து இறங்கியபோது அவருக்கு பெண் ஊழியர் ஒருவர் குடைபிடித்து சென்றார். அப்போது அந்த ஊழியரிடம் இருந்து ஷெபாஸ் ஷரீப் குடையை வாங்கி, தான் மட்டும் தனியாக சென்றார். அந்த பெண் மழையில் நனைந்தபடி பின்தொடர்ந்தார். இந்த வீடியோவை பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். வீடியோவைப் பார்த்த பலரும் பாகிஸ்தான் பிரதமரை ட்ரோல் செய்தவண்ணம் உள்ளனர். சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பாகிஸ்தான் சமூக ஊடக பயனர்கள் தங்கள் பிரதமரின் இந்த நடவடிக்கையை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர்.
சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி போன்ற உலகத் தலைவர்களையெல்லாம் ஷெபாஸ் ஷெரீப் சந்தித்தார். இந்த சந்திப்புகள் தொடர்பான வீடியோக்களை விட, அவர் மாநாட்டிற்கு வந்தடையும் வீடியோதான் இப்போது டிரெண்டிங்கில் உள்ளது.
- பாகிஸ்தானில் தற்போது காபந்து அரசு நடந்து வருகிறது
- எங்கள் மண்ணை ஆப்கன் பயங்கரவாதிகள் பயன்படுத்துகிறார்கள்
கடந்த 2018ல் பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் பெரும்பான்மைக்கு குறைவான எண்ணிக்கையில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியை அமைத்தார் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான்.
கடந்த 2022ல் இம்ரான்கான் மீது கூட்டணி கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அடுத்து அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, 2022 ஏப்ரல் மாதம், ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.
கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஷாபாஸ் ஷெரீப், அதிபர் ஆரிப் ஆல்விக்கு சிபாரிசு செய்தார். அதை ஆல்வி ஏற்று கொண்டதை அடுத்து அந்நாட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.
காபந்து பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் (Anwar Ul Haq Kakar) ஆகஸ்ட் 14 அன்று பதவியேற்றார். அங்கு தற்போது காபந்து அரசு நடைபெற்று வருகிறது.
2024 பிப்ரவரி 8 அன்று அங்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கிடையே சமீப சில மாதங்களாக பாகிஸ்தானில் ஆங்காங்கே குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இது குறித்து அந்நாட்டின் காபந்து பிரதமர் அன்வர் கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
எங்கள் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் 2021ல் தலிபான்கள் பதவியேற்றது முதல் எங்கள் நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. முன்பை விட 60 சதவீதம் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தற்கொலைப்படை தாக்குதல்களில் 500 சதவீத அதிகரிப்பை பார்க்கிறோம். எங்கள் மண்ணை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தும் போக்கை ஆப்கானிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும். தெஹ்ரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் (TTP) போன்ற பாகிஸ்தானுக்கு எதிரான அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 வருடங்களில் 2,267 பாகிஸ்தானியர்கள், அந்த அமைப்பினரால் இங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்; 15 ஆப்கான் தற்கொலைபடையினரும் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக இங்கு குடியேறியவர்களை வெளியேற்றுவது உள்நாட்டு அமைதிக்கான நடவடிக்கை. இதை செய்வதற்கு எங்களுக்கு முழு உரிமை உள்ளது.
இவ்வாறு அன்வர் தெரிவித்தார்.
- பிரதமரை சந்தித்து உரையாடிய காட்சிகளை அந்த சிறுவன் தனது யூ-டியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
- வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் கில்கிட்- பால்டிஸ்தானில் உள்ள கப்லு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் முகம்மது ஷிராஸ். இவர் சமூக வலைதளங்களில் பிரபலமானவராக திகழ்கிறார். அவரது யூ-டியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமை 1 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில் அந்த சிறுவன் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்துள்ளார். முகம்மது ஷிராஸ் தனது சகோதரி முஸ்கானுடன் சென்று பிரதமரை சந்தித்து உரையாடிய காட்சிகளை அந்த சிறுவன் தனது யூ-டியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சிறுவன் முகம்மது ஷிராசை தனது நாற்காலியில் அமர வைத்த காட்சிகளும் உள்ளது. மேலும் சிறுவனுடன் பிரதமர் சிரித்து பேசி உரையாடிய காட்சிகள் பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சிறுவன் ஷிராசிடம் எனது பெயர் என்ன? என்று விளையாட்டுத்தனமாக கேட்கிறார். அதற்கு ஷிராஸ், அப்பாவித்தனமாக 'ஷெபாஸ் ஷெரீப் மாமா' என்று கூறுகிறார்.
இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
- செலவினங்களை குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என பாகிஸ்தான் முடிவுசெய்தது.
- அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கான தடை அங்கு அமலுக்கு வருகிறது.
இஸ்லாமாபாத்:
விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடந்த பொது தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சி அமைந்தது. இதன்படி, பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார். அவரது தலைமையிலான மத்திய மந்திரி சபை 16 உறுப்பினர்களுடன் கடந்த 11-ம் தேதி புதிதாக உருவாக்கப்பட்டது.
இதற்கிடையே, முதல் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பேசுகையில், நட்பு நாடுகளிடம் இருந்து இனி கடன்களை கேட்கமாட்டேன். ஆனால் முதலீடுகளை மேற்கொள்ளும்படி கேட்பேன் என வெளிநாடுகளின் தூதர்களிடம் கூறியுள்ளேன். நாம் நமக்குள் சண்டையிட்டு கொள்வதற்கு பதிலாக, வறுமையை எதிர்த்து போராட வேண்டும். நாங்கள் சர்வதேச நாணய நிதிய அமைப்பை சார்ந்து இருப்பதில் இருந்து விலகி இருப்போம். வெளிநாட்டு கடன்களிலிருந்து பாகிஸ்தானை மீட்க உறுதி எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் செலவினங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மத்திய மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் வருகையின்போது இவற்றை பயன்படுத்துவது இனி நிறுத்தப்படும். பிரதமர் ஷெரீப்பின் உத்தரவின்கீழ் இந்த தடை அமலுக்கு வரும் என மந்திரி சபை பிரிவு தெரிவித்துள்ளது.
ஆனாலும், அரசு நடைமுறையின்படி வெளிநாட்டு தலைவர்கள் வருகையின்போது சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமைதியான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
- தெற்காசியாவில் அமைதிக்கான உறுதிப்பாட்டில் நாங்கள் நிலையாக இருக்கிறோம்.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. இரு நாடுகளிலும் ஆயுதங்கள் இருந்தாலும், போர் ஒரு விருப்பமல்ல. அமைதியான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
1947 முதல் மூன்று போர்களை சந்தித்துள்ளோம். இதன் விளைவாக, இரு தரப்பிலும் துன்பம், வறுமை மற்றும் வேலையின்மை மட்டுமே அதிகரித்துள்ளது. தெற்காசியாவில் அமைதிக்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் நிலையாக இருக்கிறோம் என்று உலக மன்றத்திற்கு நான் உறுதியளிக்கிறேன்.
ஆக்கப்பூர்வமான சூழலை உருவாக்க இந்தியா நியாயமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜம்மு காஷ்மீரில் தனது ராணுவ நிலைகளை இந்தியா அதிகரித்துள்ளது. இதனால் அது உலகிலேயே மிகவும் ராணுவ மயமாக்கப்பட்ட மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா பலமுறை கூறியுள்ளது. பயங்கரவாதம், மற்றும் வன்முறை இல்லாத சூழலில் பாகிஸ்தானுடன் இயல்பான உறவை விரும்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.