search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார் தெரிவிக்க அறிவுறுத்தல்"

    • போலீஸ் நிலையங்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
    • புகார் அளிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தென்மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ரூபேஸ்குமார் மீனா ஆகியோரின் உத்தரவின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி வாகனதணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வெளிமாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட குட்கா, கஞ்சா, போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு இதுதொடர்பாக பலரை கைது செய்தனர். மேலும் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதில் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்ட புகையிலைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மூலம் கடைகளுக்கு வினியோகம் செய்வது கட்டுப்படுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    அதில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க செல்போன் எண் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புகார் அளிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×