என் மலர்
நீங்கள் தேடியது "சைபர் கிரைம் விசாரணை"
- டாக்டர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வது தொடர்பாக விவரங்களை கூகுள் மூலம் தேடியுள்ளார்.
- மர்ம நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் பண்டாரு மகந்த். தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வது தொடர்பாக விவரங்களை கூகுள் மூலம் தேடியுள்ளார்.
இந்தநிலையில் அவரை மர்ம நபர் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்.
இதை உண்மை என்று நம்பிய அவர் ரூ.32 லட்சத்து 92 ஆயிரத்தை முதலீடு செய் தார். இதன்மூலம் கிடைத்த லாபம் மற்றும் முதலீடு செய்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றார்.
ஆனால் அது முடியவில்லை. அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
மேலும் அவரை மீண்டும் தொடர்பு கொண்ட மர்மநபர் டெல்லி போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார்.
சிறுமிகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் பார்த்ததாகவும், இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் தருமாறு மிரட்டியுள்ளார்.
அதை நம்பி அவரும் ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். அதன்பின்னரே அவர் ஒட்டுமொத்தமாக ரூ.48 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அவர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பாதிரியார் ஜூலியஸின் முகநூல் மூலம் ஜேம்சுக்கு ஒரு தகவல் வந்துள்ளது.
- சைபர் கிரைம் போலீசார் மாற்றுத்திறனாளியிடம் ரூ.70 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
குளச்சல்:
குளச்சல் அருகே வாணியக்குடி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 52). மாற்றுத்திறனாளி. இவரது உறவினர் ஜூலியஸ் டெல்லியில் ஒரு ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவர் அடிக்கடி ஜேம்ஸிடம் செல்போனில் பேசுவாராம்.
இந்த நிலையில் பாதிரியார் ஜூலியஸின் முகநூல் மூலம் ஜேம்சுக்கு ஒரு தகவல் வந்துள்ளது. ஒரு குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளது. குழந்தையின் மருத்துவ செலவுக்கு ரூ.40 ஆயிரம் தேவைப்படுகிறது. உங்களால் உதவ முடியுமா? என கேட்டுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய ஜேம்ஸ், மர்ம நபர் அனுப்பிய வேறு ஒரு நபரின் 'கூகுள் பே' செல்போன் எண்ணிற்கு ரூ.40 ஆயிரம் அனுப்பி வைத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட மர்ம நபர் மீண்டும் வேறு உதவிக்கு பணம் வேண்டும் என கேட்டுள்ளார். இதுவும் உண்மை என்று நம்பிய ஜேம்ஸ் மீண்டும் 3 தவணையாக ரூ.30 ஆயிரம் அனுப்பி வைத்தார்.
மொத்தம் ரூ.70 ஆயிரம் அனுப்பி வைத்த பின்பு பாதிரியார் உண்மையான முகநூல் தளத்திலிருந்து ஜேம்ஸிற்கு 'எனது முக நூல்'தளத்தை யாரோ? பயன்படுத்தி பணம் பறிக்கின்றனர். அதனால் பணம் அனுப்ப வேண்டாம் என வாட்ஸ் அப்பில் தகவல் வந்தது. இதனால் ஜேம்ஸ் தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து குளச்சல் போலீசில் ஜேம்ஸ் புகார் செய்தார். இந்த புகார் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் மாற்றுத்திறனாளியிடம் ரூ.70 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர். மாற்றுத்திறனாளியிடம் போலி முகநூல் தளம் மூலம் பணம் பறித்த சம்பவம் வாணியக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காளீஸ்வரி ராமநாதபுரத்தை சேர்ந்த டாக்டர் ஆஷிக் என்பவருக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வைத்தது தெரிய வந்தது.
- நான் மருத்துவர் என்பதால் பெண்களின் உடலியல் மற்றும் மனோபாவங்களை ஆய்வு செய்து வந்தேன். இதற்காக எனக்கு பெண்கள் இயல்பாக நடந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தேவைப்பட்டது.
மதுரை:
மதுரை அண்ணா நகர் விடுதியில் தங்கி பி.எட். படிக்கும் மாணவி அங்கு தங்கியுள்ள பெண்களை ஆபாசமாக வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்புவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விடுதி காப்பாளர் ஜனனியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவர் கூறுகையில், "எங்கள் விடுதியில் தங்கியுள்ள காளீஸ்வரியின் செல்போனில் ஆபாச படங்கள் உள்ளதாக எனக்கு தகவல் வந்தது.
நான் அவரது செல்போனை ஆய்வு செய்தேன். அதில் விடுதி பெண்கள் உடை மாற்றுவது, பனியன்-நைட்டியுடன் இருப்பது மாதிரியான போட்டோ மற்றும் வீடியோக்கள் இருந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் காளீஸ்வரியை (வயது 24) பிடித்து விசாரித்தனர். அவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
காளீஸ்வரி கூறுகையில், "நான் அண்ணா நகர் விடுதியில் தங்கி இங்குள்ள கல்லூரியில் பி.எட். படித்து வருகிறேன். எனக்கு செல்போனில் போட்டோ மற்றும் வீடியோக்கள் எடுப்பது பொழுதுபோக்கு ஆகும். விடுதியில் தங்கியுள்ள பெண்கள் உடை மாற்றுவது, பனியன் அணிந்தபடி திரிவது, நைட்டியுடன் படுத்து தூங்குவது போன்வற்றை யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்து வந்தேன்.
அவர்கள் குளிப்பதையோ அந்தரங்கமாக இருப்பதையோ படம் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் அந்த செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். அப்போது காளீஸ்வரி ராமநாதபுரத்தை சேர்ந்த டாக்டர் ஆஷிக் என்பவருக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வைத்தது தெரிய வந்தது.
இதுகுறித்து காளீஸ்வரியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் கூறுகையில், எனக்கு ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சொந்த ஊர். அங்கு எனக்கு டாக்டர் ஆஷிக்குடன் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. டாக்டர் ஆஷிக் என்னிடம், நீ தங்கும் இடத்தில் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை எடுத்து அனுப்ப முடியுமா? என்று கேட்டார். இதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.
அதன் பிறகு கடந்த 3 மாதங்களாக செல்போனில் வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்து, அவற்றை தினந்தோறும் ஆசிக்குக்கு அனுப்பி வந்தேன் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காளீஸ்வரியை கைது செய்த சைபர் கிரைம் போலீசார், கமுதியில் உள்ள டாக்டர் ஆசிக்கையும் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
டாக்டர் ஆசிக் கூறுகையில், நான் மருத்துவர் என்பதால் பெண்களின் உடலியல் மற்றும் மனோபாவங்களை ஆய்வு செய்து வந்தேன். இதற்காக எனக்கு பெண்கள் இயல்பாக நடந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தேவைப்பட்டது. நான் இது தொடர்பாக காளீஸ்வரிடம் பேசினேன். அவர் எனக்கு போட்டோ மற்றும் வீடியோக்களை அனுப்பி வைத்தார். இதனை நான் பார்த்து ரசித்தேன். அந்த வீடியோ-போட்டோக்களை சமூக வலைதளங்களில் பரப்பவில்லை என்று தெரிவித்தார்.
போலீசார் 2 பேரின் செல்போன்களை ஆய்வு செய்தனர். அவற்றில் 100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இருந்தன.
அவற்றில் பல்வேறு வீடியோ மற்றும் புகைப்படங்கள் அழிக்கப்பட்டு இருந்தது. அவை எதற்காக அழிக்கப்பட்டது? அந்தப் படங்கள் அந்தரங்கமாக இருக்கும்போது எடுக்கப்பட்டதா? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.