என் மலர்
நீங்கள் தேடியது "கோப்பைகள்"
- 1000, 700, 500 கிலோ மீட்டர் தூரம் பறந்து வெற்றிபெற்ற புறா வளர்ப்போருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- பெங்களூர், கேரளா உள்பட பல மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் டெல்டா ஓபன் ரேஸ் பந்தயபுறா போட்டியில் வெற்றிபெற்ற புறா வளர்ப்போருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பண்டாரவாடையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சென்னை கிளப் தலைவர் ஏ.ஆர்.தன்சிங் தலைமை வகித்தார். அய்யம்பேட்டை பேரூர் திமுக செயலாளர் துளசி ஐயா, பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவர் அணி பொறுப்பாளர் முகமது மகரூப், மாவட்ட கவுன்சிலர் ராயல் அலி மற்றும் புறா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் 2019 முதல் 2022 வரையிலான பந்தய புறா போட்டிகளில் 1000, 700, 500 கிலோ மீட்டர் தூரம் என அதிக தூரம் வரை பறந்து முதல், இரண்டாவது மற்றும் மூன்றாம் இடம் பெற்று, வெற்றிபெற்ற புறா வளர்ப்போருக்கு பரிசு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி பெங்களூர், கேரளா உள்பட பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பந்தய புறா வளர்ப்போர் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று சென்றனர்.
ஏற்பாடுகளை பாபநாசம் பந்தய புறா வளர்ப்போர் சங்க டெல்டா கமிட்டி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.