search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொலைபேசி சேவை"

    • விவசாயிகளுக்கான இலவச தொலைபேசி சேவை தொடக்கம்.
    • விவசாயிகள் மற்றும் வணிகர்களின் பயன்பாட்டிற்காக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு 2022-23-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் கீழ் இலவச கட்டணமில்லா தொலைபேசி சேவை மற்றும் புலனம் (வாட்ஸ்அப்) சேவை பெறப்பட்டுள்ளது.

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் தொடர்பாக தங்களுக்கு எழும் சந்தேகங்கள், வினாக்கள் மற்றும் பல்வேறு திட்டங்கள் தொடர்பான தகவல்கள் போன்றவற்றை 1800 425 1907 என்ற இலவச கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    இந்த சேவையானது, விவசாயிகள் மற்றும் வணிகர்களின் பயன்பாட்டிற்காக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். உழவர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மின்னனு தேசிய வேளாண் சந்தை, முதன்மை பதப்படுத்தும் மையம், குளிர்பதன கிடங்கு, சிறப்பு வணிக வளாகங்கள் தொடர்பான கேள்விகள், புகார்கள், கருத்துக்கள் ஆகியவற்றை 7200818155 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தகவல் பெற்று பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×