என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இத்தாலி பிரதமர்"
- அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் ராணுவம் போர் நடத்தி வருகிறது.
- இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இத்தாலி இருந்து வருகிறது.
ரோம்:
பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் அண்டை நாடான இஸ்ரேலுக்கு புகுந்து திடீர் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் பலர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் மீது போரை தொடங்கியது. இதில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை உயிரிழந்தநிலையில் ஒரு ஆண்டை கடந்து போர் நீடித்து வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் ராணுவம் போர் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இத்தாலி இருந்து வருகிறது. இந்தநிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது உடனடியாக நிறுத்தப்படும் என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "காசா பகுதியில் போர் நீட்டிப்பை தொடர்ந்து, இத்தாலியில் இருந்து இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து புதிய உரிமங்களுக்கும் உடனடியாக நிறுத்தப்படுகிறது" என்றுள்ளார்.
- ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடந்து வருகிறது.
- அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என்றார் அதிபர் புதின்.
ரோம்:
ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடந்துவருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் மோடியின் ரஷியா, உக்ரைன் பயணத்துக்கு பிறகு புதின் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
இந்நிலையில், இத்தாலி சென்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ஜார்ஜியா மெலோனியை சந்தித்துப் பேசினார். அதன்பின் மெலோனி கூறியதாவது:
ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர சீனாவுக்கும் இந்தியாவுக்கும் பங்கு உண்டு என்று நான் நம்புகிறேன்.
சர்வதேச சட்ட விதிகள் மீறப்பட்டால் குழப்பமும் நெருக்கடியும் உருவாகும். சர்வதேச சட்ட விதிகளை மீறுவது உலகமயமாக்கலுக்கு எதிரானது.
ரஷியா-உக்ரைன் இடையிலான மோதலை நிறுத்த இந்தியா, சீனா போன்ற நாடுகளால் உதவ முடியும் என நான் நினைக்கிறேன்.
உக்ரைனை ஆதரிப்பதற்கான தேர்வு எங்களுக்கு முதன்மையானது. இது தேசிய நலன்களின் தேர்வாகும் என தெரிவித்தார்.
- இத்தாலியில் பணம் செலுத்தியும் அல்லது இல்லாமலும் வாடகைத்தாய் முறை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- ல் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு தண்டனை விவரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரோம்:
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி, வாடகைத் தாய்மை முறை மனிதாபிமானமற்றது என தெரிவித்துள்ளார். தலைநகர் ரோமில் இளைஞர்களுக்கான மாநாடு நடந்தது.
இதில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது, "வாடகைத் தாய் ஒரு மனிதாபிமானமற்ற நடைமுறை என நான் நம்புகிறேன். இது சர்வதேச குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை நான் இதற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்" என்றார்.
ஏற்கனவே இத்தாலியில் பணம் செலுத்தியும் அல்லது இல்லாமலும் வாடகைத்தாய் முறை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு தண்டனை விவரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.8 லட்சத்து 36 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதற்கான புதிய சட்டமசோதா அமலுக்கு வந்துள்ளது.
- ஜியாம்ப்ரூனோவின் கருத்துக்களுக்காக தன்னை மதிப்பிடக்கூடாது.
- எதிர்காலத்தில் அவரது நடத்தை பற்றிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்க மாட்டேன்.
ஜியாம்ப்ருனோவும் மெலோனியும் கடந்த 10 ஆண்டுகளாக திருமணம் செய்துக் கொள்ளாமல் உறவில் இருந்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஏழு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி இன்று தனது நீண்டகால காதலர் தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவை பிரிந்ததாக அறிவித்தார்.
அவர் சமீபத்தில் தொலைக்காட்சியில் பாலியல் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டதை தொடர்ந்து ஜார்ஜியா இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கிட்டத்தட்ட 10 வருடங்கள் நீடித்த ஆண்ட்ரியா ஜியாம்ப்ரூனோவுடனான எனது உறவு இங்கே முடிவடைகிறது. எங்கள் பாதைகள் சில காலமாக வேறுபட்டன. அதை ஒப்புக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது.
நாம் இருந்த தருணங்களைப் பாதுகாப்பேன், நமது நட்பைப் பாதுகாப்பேன், தன் தாயை நேசித்து, தந்தையை நேசிக்கும் ஏழு வயதுச் சிறுமியை எப்படியும் பாதுகாப்பேன். என்னிடம் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, இந்த முடிவுக்குப் பிறகு ஜியாம்ப்ரூனோவின் கருத்துக்களுக்காக தன்னை மதிப்பிடக்கூடாது என்றும் எதிர்காலத்தில் அவரது நடத்தை பற்றிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- ‘இத்தாலியின் சகோதரர்கள்’ கட்சியின் தலைவர் ஜியார்ஜியா மெலோனி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
- ஜியார்ஜியா மெலோனிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இத்தாலியில் நடந்த பொதுத் தேர்தலில் தீவிர வலதுசாரியான 'இத்தாலியின் சகோதரர்கள்' கட்சி வெற்றி பெற்றது.
இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஜியார்ஜியா மெலோனி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவர் இத்தாலியில் முதல் பெண் பிரதமர் ஆவார்.
ஜியார்ஜியா மெலோனிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "தேர்தலில் பெற்ற வெற்றிக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். நமது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த ஒருங்கிணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி இருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்