search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு போட்டி"

    • குத்துச்சண்டை போட்டியில் 17வயதுக்கு உள்பட்ட பிரிவில் முதலிடம் வென்று தங்கம் பதக்கம் பெற்றனர்.
    • போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் கவிதா ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

    அவிநாசி : 

    பாரதியார் பிறந்த நாள் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி திருப்பூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி அண்மையில் திருப்பூர் ஜெய்வபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 11ம் வகுப்பு மாணவர்கள் குருபிரசாத், கவின், பயாஸ் அகமது ஆகியோர் குத்துச்சண்டை போட்டியில் 17வயதுக்கு உள்பட்ட பிரிவில் முதலிடம் வென்று தங்கம் பதக்கம் பெற்றனர்.

    மாணவன் பிரதீப் ஜூடோ போட்டியில் முதலிடம் வென்று தங்கம் பதக்கம் பெற்றார். இவர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர்.

    மேலும் குத்துச்சண்டை, ஜூடோ ஆகிய போட்டிகளில் 17 பேர் முதல்3 இடங்களை பெற்றுள்ளனர். இதேபோல சமூக அமைப்பு சார்பில் ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு 14 கிலோ மீட்டர் மராத்தான் போட்டியில் 11ம் வகுப்பு மாணவன் தனுஷ் 5ம் இடமும், 10ம் வகுப்பு மாணவன் கமலேஸ் 6ம் இடமும் வென்றனர்.

    போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் கவிதா ஆகியோருக்கு தலைமையாசிரியர் ஆனந்த் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

    • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றது.
    • போட்டிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரண்மனைபுதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், பொட்டேட்டோ கேதரிங், கலெக்டிங் தி பால்ஸ், பலூன் ஊதுதல், தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இந்த விளையாட்டுப் போட்டிகளை திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி துவக்கி வைத்தார்.


    • திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் அரசு பள்ளி சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது
    • இவர்கள் இதன் மூலம் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவினை முன்னிட்டு சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது.இதில் பெருமாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.இவர்கள் இதன் மூலம் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்றவர்களின் விவரம்:- சிலம்பம் போட்டியில் எம். சத்யா (தங்கம்), மோகனா (தங்கம்), காவியா (வெள்ளி) ஆகியோர் வென்றுள்ளனர் . இதேபோல் டேக்வாண்டோ பிரிவில்14 ,17 ,19 வயதுக்குட்பட்ட போட்டியில் பி .வர்ணா (வெண்கலம்),எம்.சுதர்சனா (வெள்ளி),சுபினயா (வெண்கலம்),ஆர். பௌத்ரி (வெண்கலம்),ஜி. கௌசல்யா (வெள்ளி), சினேகா (வெள்ளி) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியை பிருந்தாதேவி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி உள்ளனர். போட்டியில் வெற்றி பெற உறுதுணையாக இருந்து பயிற்சி அளித்த சரவணமுத்துக்கு பள்ளியின் சார்பில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குறுவட்ட விளையாட்டு போட்டியில் மேலூர் அல்அமீன் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
    • 14 வயது பிரிவில் கோ கோ, கைப்பந்து போட்டியில் முதலிடம் வென்றனர்.

    மேலூர்

    மேலூர் அல் அமீன் உருது, தமிழ் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மேலூர் வட்ட பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டியில் மாணவன் கிரித்திஸ் நந்தன் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். 14 வயது பிரிவில் உயரம் தாண்டுதலில் ராஜதுரை 2-வது இடம், 14 வயது பிரிவில் சுபாஷ் நீளம் தாண்டுதலில் 2-ம் இடம், 200 மீட்டர் போட்டியில் முகேஷ் 3-ம் இடம் பெற்றனர். 17 வயது பிரிவில் 1500 மீட்டர் ஓட்ட போட்டியில் அருண்குமார் 2-ம் இடம், உயரம் தாண்டுதலில் அமீர் காட்டுவா 2-ம் இடம், மும்முறை தாண்டுதலில் எழுச்சி தமிழன் 2-ம் இடம், உயரம் தாண்டுதலில் கனிஷ்கர் 3-ம் இடம், ஈட்டி எறிதலில் பரணி 3-ம் இடம், 17 வயது பெண்கள் கேரம் போட்டியில் அனீஸ் பாத்திமா, சோபனா 2-ம் பரிசு பெற்றனர்.14 வயது பிரிவில் கேரம் போட்டியில் ஆயிஷா முதல் பரிசு பெற்றார். 17 வயது பிரிவில் கோ கோ போட்டியில் முதலிடம், 14 வயது பிரிவில் கைப்பந்து போட்டியில் முதலிடம், 14 வயது பிரிவில் கைப்பந்து போட்டியில் முதலிடம் வென்றனர்.போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவர்கள் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்களை முன்னாள் நகராட்சி சேர்மனும், பள்ளியின் தாளாளருமான எம்.ஓ.சாகுல் ஹமீது, தலைவர் காதர் மைதீன், பொருளாளர் ஜாகிர் உசேன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜபார், ஷாஜகான், ராஜா முகமது, காஜா மைதீன், ராஜா முகமது, சித்திக், பிலால், தலைமையாசிரியர் சலீம், உதவி தலைமை ஆசிரியர் அப்துல் ரஹ்மான், உடற்கல்வி ஆசிரியர் புகாரி ஆகியோர் பாராட்டினர்.

    ×