என் மலர்
நீங்கள் தேடியது "மழைகாலம்"
- செய்யாமங்கலம் பள்ளி கட்டிடம் ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்பட்டு வருவதால் இன்னும் இடித்து அகற்றப்படவில்லை.
- மழை காலம் தொடங்குவதற்குள் பழுதான பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும்.
பூதலூர்:
பூதலூர் தாலுக்கா செய்யாமங்கலம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.
இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளிக்கென புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பள்ளியின் பழைய கட்டிடம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் எந்த நேரத்தில் இடிந்து விடும் அபாய நிலையில் உள்ளது.
இந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பலமுறை வற்புறுத்தி வந்துள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டு பருவ மழை காலத்தில் அரசு அறிவுறுத்தலின் பேரில் பூதலூர் தாலுகாவில் பழுதான பல்வேறு பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. ஆனால் செய்யாமங்கலம் பள்ளி கட்டிடம் ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்பட்டு வருவதால் இன்னும் இடித்து அகற்றப்படவில்லை.
பழுதான பள்ளி கட்டடத்தின் அருகில் வீடுகளும் ஆற்றுக்கு செல்லும் சாலையும் உள்ளதால் அந்த வழியாக ஆற்றுக்கு செல்பவர்களும் வீடுகளும் வீடுகளில் இருப்பவர்களும் எந்த நேரத்திலும் பயத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
வரும் பருவ மழை காலம் தொடங்குவதற்குள் பூதலூர்தாலுகாவில் உள்ள செய்யாமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் பழுதான பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இது குறித்து பூதலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.