என் மலர்
நீங்கள் தேடியது "இளம்பெண் தீக்குளிப்பு"
- பயந்து போன சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது திடீரென தீக்குளித்தார்.
- உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள மோவூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள மாந்தோப்புக்குள் மாடு மேய்க்க சென்றார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அவர் பேசினார். இதனை அங்கு மறைந்து இருந்த அதே கிராமத்தை சேர்ந்த அஜித்குமார், அஜித், கோகுல கிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.
மேலும் இந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி மிரட்டினர். இதனால் பயந்து போன சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது திடீரென தீக்குளித்தார். உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சிறுமியை மிரட்டிய அஜித் குமார், அஜித் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் சிறுமிக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்தனரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.