search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலப்பணித்திட்டம்"

    • நலப்பணித்திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணி திட்டநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்திரா நகர் கிராமத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமையேற்றார். நிகழ்வில் கிராம மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவல் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, விதை பந்து வழங்கப்பட்டது.

    மேலும் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முஹம்மது, அப்ரோஸ் மற்றும் சேக் அப்துல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

    • காரையூர் கிராமத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்கள் காரையூர் கிராமத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடத்தினர். இந்த முகாமில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றார், கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி மதியழகன் முகாமை தொடங்கி வைத்தார்.

    ஊராட்சி மன்ற துணை தலைவர் அருணகிரி, கிராம செயலர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் ஐரிஸ் ஆஷ்மின், ஒன்றிய கவுன்சிலர் சுமதி செல்வகுமார், வார்டு உறுப்பினர்கள் ஆறுமுகம், ஆனந்த வள்ளி, விஜயா, தலையாரி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் ஊராட்சி மன்ற வளாக பகுதி, அங்கன்வாடி மைய பகுதி, ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகப்பகுதி, துணை சுகாதார நிலையம், அம்மன் கோவில் மற்றும் கிராமத்தின் சுற்றுப்புற பகுதிகளை கல்லூரி மாணவர்கள் சுத்தம் செய்தனர்.

    கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நாகராஜன் நன்றி கூறினார்.

    ×