என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெங்காயம் சாகுபடி"
- நாட்டு வெங்காயம் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் தனித்தும் ஊடுபயிராகவும் பயிடப்பட்டுள்ளது.
- கடந்த இரண்டு ஆண்டுகளில் விதையாக ஊன்றிய வெங்காய அளவு கூட மகசூலாக எடுக்க முடியவில்லை.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதிகளில் கடந்த மாதம் புரட்டாசி பட்டத்தில் சிறுதானியங்கள், பயறு வகைகள், பணப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், மூலிகை செடிகளை பயிரிட்டு உள்ளனர்.
அவற்றில் நாட்டு வெங்காயம் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் தனித்தும் ஊடுபயிராகவும் பயிடப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 70 கிலோ கொண்ட 10 பை விதை வெங்காயம் ஊன்றப்பட்டது. ஆரம்ப காலத்தில் இருந்து போதிய மழை பெய்யாததால் வெங்காயத்தில் நண்டுக்கால், திருகல், அழுகல் நோயால் பாதிக்கப்பட்டது.
உரிய மருந்து தெளித்தும் நோய் கட்டுப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். மேலும் வேலை ஆட்கள் கூலி அதிகரித்துவிட்டதால் செலவு வரம்பு மீறியது. ஏக்கருக்கு களை பறிக்க ரூ.20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கனமழை பெய்ததால் நிலத்தில் ஊன்றிய வெங்காயத்தை கூட கண்ணில் காண முடியவில்லை. தற்போது சாகுபடி செய்து 70 நாட்களுக்கு மேலாகிவிட்டதால் சில கிராமங்களில் வெங்காயம் மகசூல் அறுவடைக்கு வந்துள்ளது. நல்ல திரட்சியான வெங்காயம் கிலோ ரூ.60 முதல் 70 வரை வியாபாரிகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் விதையாக ஊன்றிய வெங்காய அளவு கூட மகசூலாக எடுக்க முடியவில்லை. தற்போது ஓரளவு விலை உள்ளது.
இதே விலை அறுவடை முடியும் வரை நிரந்தரமாக இருக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்நஷ்டத்தை சந்தித்த வெங்காய சாகுபடி விவசாயிகள் அதன் சாகுபடி பரப்பை பெருமளவு குறைத்து விட்டனர். எனவே இந்தாண்டாவது செய்த செலவை ஓரளவு ஈடுகட்டிவிடலாமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
- குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் சின்னவெங்காய பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்
- நல்ல செழித்து வளர்ந்துள்ள பயிர்கள் ஏக்கருக்கு மகசூலாக 6 டன் வரை கிடைக்கும்
குண்டடம் :
குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி தற்போது சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது ;-
குண்டடம் பகுதி வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்துவருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்துவருகிறோம், மேலும் இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது.
தற்போது இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காயத்தின் விலை உயர்த்துள்ளதை தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துளளனர் இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உட்பட ஏக்கருக்கு 70 ஆயிரம் வரை செலவாகிறது100 நாட்களில் அறுவடை செய்யலாம். நல்ல செழித்து வளர்ந்துள்ள பயிர்கள் ஏக்கருக்கு மகசூலாக 6 டன் வரை கிடைக்கும். அதேபோல் சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்