என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பக்தி"
- ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு முறையாவது இவ்வாறு புஷ்ப யாகங்கள் செய்யப்படுவது உண்டு.
- ஆண்டு முழுவதும், ஒரு நாள் தவறாமல் இறைவனுக்கு புஷ்பம் கிடைத்துவிடும் என்பது மிகப் பெரிய விஷயம்.
வீடுகளில் பூஜை செய்பவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கக்கூடிய மந்திரம் இது.
பூஜையை முடிக்கும் போது சொல்லப்படுகின்ற மந்திரமான,
"யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான்
பசுமான் பவதி சந்திரமா வா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
ய ஏவம் வேத யோபாம் மாயதனம் வேத
ஆயதனவான் பவதி"
என்று சொல்லிக் கொண்டே மலர்களை போட்டு பூஜையை நிறைவு செய்வது நல்லது.
மலர் யாகம், மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலியோ, புஷ்பயாகமோ செய்யப்படுகின்ற போது இறைவன் அகமகிழ்ந்து வேண்டிய வரம் அருள்வான் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு முறையாவது இவ்வாறு புஷ்ப யாகங்கள் செய்யப்படுவது உண்டு.
ஆண்டு முழுவதும், ஒரு நாள் தவறாமல் இறைவனுக்கு புஷ்பம் கிடைத்துவிடும் என்பது மிகப் பெரிய விஷயம்.
சில நாட்களில் பற்றாக்குறையாகி விடும். சில நாட்களில் கிடைத்தும் திருப்தியாக இருக்காது.
இது போன்ற குறைகள் நீங்குவதற்காக புஷ்ப யாகங்கள் செய்யப்படுகின்றன.
அந்த சமயங்களில் உயர் ரக மலர்களைக் கொண்டு, ஆசார அனுஷ்டானமான வேத விற்பன்னர்களைக் கொண்டு, முதலில் மந்திரங்களைக் கொண்டு மலர்கள் அக்னிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் இறைவனது திருவடி தொடங்கி, திருமுடி வரை மலர்கள் சொரியப்படும். இது திருப்பதியில் மிக விசேஷம்.
என்றாலும், இப்போது ஏராளமான ஆலயங்களில் பக்தர்களின் புஷ்ப கைங்கர்யத்தால் மிகச் சிறப்பாகவே புஷ்ப யாகங்கள் நடைபெறுகின்றன.
தெய்வங்களுக்கு செய்யும் பூஜையில் சகஸ்ர நாமம், அஷ்டோத்தரம் போன்ற அர்ச்சனைகள் செய்யும் போது, பூக்கள் குறைவாக இருக்கும்.
அப்போது ரோஜாப்பூ சாமந்திப்பூ போன்ற பூக்களின் இதழ்களையே சிறிது சிறிதாக பிய்த்து அர்ச்சனை செய்யலாமே என்று தோன்றும்.
ஆனால், அவ்வாறு செய்யக்கூடாது.
தாமரைப்பூவைத் தவிர மற்ற எந்த பூக்களையும் முழுமையாகவே பூஜை மற்றும் அர்ச்சனை செய்ய வேண்டும்.
அர்ச்சனை மந்திரங்கள் நிறைய பாக்கி இருந்து, அர்ச்சனை செய்ய பூக்கள் குறைவாக இருக்கும் போது கூட, முழுமையான ஒரே ஒரு பூவை கையில் வைத்துக் கொண்டு, பாக்கியுள்ள அனைத்து மந்திரங்களையும் சொல்லிவிட்டு, இறுதியில் அந்த ஒரே ஒரு பூவை தெய்வங்களின் பாதங்களில் சேர்த்து விடலாம்.
இப்படி செய்வதால் ஒவ்வொரு நாமாவளிக்கும் ஒவ்வொரு பூவைப் பாட்டு அர்ச்சனை செய்த பலன் முழுமையாகக் கிடைக்கும்.
- திருமாலுக்கு & நந்தியாவட்டமும்,
- அம்பிகைக்கு & நெல்லியும் பயன்படாத மலர்கள் ஆகும்.
எடுத்த பின் மலர்ந்த மலர், பழம் மலர், எருக்கு இலையிலும் ஆமணக்கு இலையிலும் கட்டி வைத்த மலர்கள், கட்டிய ஆடையிலும் கையிலும் வைத்த மலர்கள், உதிர்ந்து கீழே விழுந்த மலர்கள், கீழே உதிர்ந்த மலர்கள், இடைக்குக் கீழேயுள்ள உறுப்புகளில் பட்ட மலர்கள், இரவில் பறித்த மலர்கள், புழுக்கடி மலர்கள், நீரில் மூழ்கிய மலர்கள், அசுத்தரால் எடுக்கப்பெற்ற மலர்கள், தலைமுடி பட்ட மலர்கள், பறவைகளின் எச்சம் பட்ட மலர்கள், சிலந்தி அணில், பல பூச்சி எச்சில் பட்ட மலர்கள், காகித மலர்கள், வாசனை இல்லாத மலர்கள், இவைகள் பூஜைக்குப் பயன்படாத மலர்கள் ஆகும்.
விநாயகருக்கு & துளசியும்,
சிவனுக்கு & தாழம் பூவும்,
துர்க்கைக்கு & அருகம்புல்லும்,
சூரியனுக்கு & வில்வமும்,
திருமாலுக்கு & நந்தியாவட்டமும்,
அம்பிகைக்கு & நெல்லியும் பயன்படாத மலர்கள் ஆகும்.
- இந்த பூ அபூர்வ நறுமணம் கொண்டவை.
- இம்மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தூர சுற்றளவுக்கு நறுமணம் வீசும்.
சிவபெருமானுக்கு உகந்தது குங்கிலிய மலர் ஆகும். அது சிவராத்திரியில் மட்டுமே பூக்கும் என்பதும் ஆச்சரியமானது.
மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம்.
இந்த மரத்தில் சால் மற்றும் ஜலரி எனும் இரு வகைகள் உள்ளன.
ஜலரி மரங்களில்தான் சிவராத்திரியில் மட்டும் குங்கிலியப் பூக்கள் அபூர்வமாகப் பூக்கின்றன.
சிவராத்திரி நாட்களில் பூப்பதால் தெய்வத்தன்மை கொண்டதாக விளங்கும் இப்பூக்களை சிவனுக்கு மாலையாகப் படைக்கும் மலை கிராம மக்கள், சிவனின் மலர் பூக்கும் மரம் எனக் கருதி, மறந்தும் அவற்றை கூட வெட்டுவதில்லை.
கன்னடத்தில் குங்கிலிய மரத்தை "தளி" என அழைப்பர்.
இப்பெயரிலேயே ஹோசூர் அருகிலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ஒரு இடம் உள்ளது.
இதன் அருகிலுள்ள தேவர் பெட்டா மலைப்பகுதியில் வருடந்தோறும் சிவராத்திரியின் போது குங்கிலியப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன! இந்த பூ அபூர்வ நறுமணம் கொண்டவை.
இம்மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தூர சுற்றளவுக்கு நறுமணம் வீசும்.
சிவராத்திரியில் பூக்கும் இந்த அதிசயப் பூக்களைக் காணவும், அதன் மணத்தை நுகரவுமே சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் தேவர் பெட்டா மலைப்பகுதிக்கு வந்து செல்வதுண்டு.
- மாநிலம் முழுவதும் இன்று தமிழ்நாடு தினக் கொண்டாட்டங்கள் நடைப்பெற்றது.
- ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மிகவும் வளமான கலாச்சாரமாக வளர்ந்து வந்திருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
அதனையொட்டி மாநிலம் முழுவதும் இன்று தமிழ்நாடு தினக் கொண்டாட்டங்கள் நடைப்பெற்றது.
இந்நிலையில் தமிழ் கலாச்சாரம் குறித்து சத்குரு பேசிய விடியோ ஒன்றை அவரின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
அதில், "பக்தியில் ஊறி வளர்ந்தது தமிழ் கலாச்சாரம், இதனை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் மேலும் கூறியிருப்பதாவது:-
இந்த தமிழ் மண், தமிழ் கலாச்சாரம், தமிழ் இசை, தமிழ் நாட்டியம், தமிழ் கலை, தமிழ் மொழி என்று எதை எடுத்தாலும், தமிழ் என்றால், பக்தி என்கிற ஒரு தெம்பு. பக்தியில்லாமல் தமிழ் கலாச்சாரம் இல்லை. பக்தர்களின் நாடாக இருக்கின்ற தமிழ்நாட்டில், குழந்தை பிறந்தாலும் பக்தி, காது குத்து என்றாலும் பக்தி, வாழ்ந்தாலும் பக்தி, திருமணம் செய்தாலும் பக்தி, இறந்தாலும் பக்தி என்றே இருந்து வருகிறது.
பக்தியிலேயே ஊறி வளர்ந்திருக்கும் இந்தக் கலாச்சாரம், நெஞ்சத்தில் இருக்கும் பக்தி என்ற தெம்பினால் எவ்வளவோ சாதனைகள் செய்து இருக்கிறது.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மிகவும் வளமான கலாச்சாரமாக வளர்ந்து வந்திருக்கிறது. எவ்வளவு வளம் என்றால்? மற்ற நாடுகள் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு வளமான சமூகமும், கலாச்சாரமும் இங்கு உருவாக்கப்பட்டது.
உங்களுக்கு தெரிந்து இருக்கும், ஐரோப்பிய நாடுகளில் இருந்தவர்கள் எப்படியாவது இங்கு வந்துவிட வேண்டும் என்ற பெரிய ஆர்வம் இருந்தது. கப்பல் ஏறி வழித் தெரியாமல் அங்குமிங்கும் அமெரிக்கா வரை சென்று, இறுதியில் இங்கு வந்தார்கள். ஏனெனில் உலகிலேயே வளமான நாடாக நாம் இருந்தது தான்.
இந்த வெற்றிகரமான வாழ்க்கைக்கு மூலமாக இருந்தது நம்முடைய பக்தி. சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் மட்டுமில்லாமல் அனைத்திற்கும் மேலாக முக்கியமாக 63 நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஒளவையார் போன்ற பக்தர்கள் பிறந்து வாழ்ந்த கலாச்சாரம் நம்முடையது.
இந்த தமிழ் கலாச்சாரம் பக்தியில் ஊறி நனைந்து வளர்ந்திருக்கும் கலாச்சாரம். தமிழ் மக்கள் இதை உணர்ந்து உலகம் முழுவதும் தீவிரமாக இந்த பக்தியை கொண்டு சேர்க்க வேண்டும் . இது மிக மிகத் தேவையானது. தமிழ் கலாச்சாரத்தை குறித்து வெறுமனே பேசிப் பயனில்லை. நமக்கு அதில் பெருமை இருந்தால் அதனை உயிரோடு வைத்திருக்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உரோமேச்சுரம்- உரோமச தீர்த்தம், மார்க்கண்ட தீர்த்தம்.
- பிரமேசுரம் (தென்கரை) - பிரம,அக்னி, லட்சுமி,தேவ,சங்க,தாரா,வேத,வாயு,வன்னி,நரசிங்க தீர்த்தங்கள்.
1. பொதியமலை - ஸ்ரீதர தீர்த்தம் முதல் துர்கா தீர்த்தம் வரை 18 தீர்த்தங்கள்.
2. பாபநாசம் - முக்கூடல் தீர்த்தம்.
3. திருமூல நகரம் (அம்பை, மேலப்பாளையம் வட்டாரம், திருமூலநாதர் கோவில்) - சாலா தீர்த்தம்.
4. காசிபேசுரம் (அம்மைஎரிச்சாவுடையார் கோயில்) - காசிப தீர்த்தம், தீப தீர்த்தம்.
5. திருக்கோட்டீச்சுரம் - முக்கூடல், கண்ணுவேசர், விசுவ, பிரம, சர்வ, தட்சிண தீர்த்தங்கள்.
6. கரிகாத்தபுரி (அத்தாளநல்லூர்) - சித்த, மாண்டவ்ய, பிரமதண்ட தீர்த்தங்கள்.
7. திருப்புடைமருதூர் -துர்கா தீர்த்தம், ரிஷி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம்.
8. பொருநையாற்றின் தென்கரையில் -சோம தீர்த்தம்.
9. உரோமேச்சுரம்- உரோமச தீர்த்தம், மார்க்கண்ட தீர்த்தம்.
10. துருவாச நகரம் (அரியநாயகிபுரம்) -துருவாச , காந்தர்வ தீர்த்தங்கள், பச்சையாறு, முக்கூடல்.
11. மந்திரேசுரம் (ஓமனுவர்) - தேவதீர்த்தம், ருத்ர தீர்த்தம்.
12. திரு அக்கினீச்சுரம் (தருவை)- அக்கினீச்சுர தீர்த்தம்.
13. துர்கேசுரம் -துர்கா தீர்த்தம்.
14. சிந்துபூந்துறைத் தீர்த்தம்.
15. சிந்துபூந்துறைக்கு வடபால் -சப்தரிஷி தீர்த்தம்.
16. சிந்துபூந்துறைக்கு கீழ்பால் -குட்டத் துறைத் தீர்த்தம்.
17. ராமேசநல்லுவர் -ஜடாயு தீர்த்தம்.
18. மணலுவர் (அ) மணவாள நல்லுவர்- மங்கள தீர்த்தம்.
19. அழகர் கோயில் (சீவலப்பேரி)- முக்கூடல், பிதிர், கோதண்ட, தட்சிண, வியாக்ரம, வியாச தீர்த்தங்கள்.
20. ஸ்ரீவைகுண்டம்- வைகுந்தத் தீர்த்தம்.
21. காந்தீசுரம் -காந்தீசுரத் தீர்த்தம்.
22. ஆழ்வார் திருநகரியாகிய திருக்குருகூர் -சக்கர, சங்க, பஞ்சகேத்ர தீர்த்தங்கள்.
23. நவலிங்கபுரம் (பொருநை தென்கரை) - நவதீர்த்தம்.
24. பிரமேசுரம் (தென்கரை) - பிரம, அக்னி, லட்சுமி, தேவ, சங்க, தாரா, வேத, வாயு, வன்னி, நரசிங்க தீர்த்தங்கள்.
25. சோமேசுரம் (தென்கரை) - சோம தீர்த்தம்.
26. திருச்செந்துவர் -சங்கமுகம்.
27. சங்கமத் துறை -பொருநையாறு கடலில் கலக்குமிடம்.
- தன்னலம் கருதாது பலனைக் தரும் தன்மை பெற்றது காமதேனு.
- வாகனங்களுக்குரிய இந்த சிறப்புகள் அனைத்தும் திருவண்ணாமலையில் இருந்தே தோன்றியதாக கூறுகிறார்கள்.
தன்னலம் கருதாது பலனைக் தரும் தன்மை பெற்றது காமதேனு.
இறைவியும் தன்னலமின்றிப் பக்தர்களுக்கு அருளும் தன்மை பெற்றுள்ளதால் காமதேனு வாகனம் பயன்படுத்தப்படுகின்றது.
தீபத் திருவிழாவின் மூன்றாம் நாள் ஸ்ரீ அண்ணாமலையார் சிம்ம வாகனத்தில் வருவதன் உட்பொருள் தற்பெருமையும்,
சினத்தையும், அகங்காரத்தையும் அடக்கி தன்னடக்கம், சாந்தம், பணிவு, அன்பு, பக்தி முதலிய
நற்குணங்களைக் கொள்வோர் அருள்மிகு ஸ்ரீ அருணாசலேசுவரர் திருவருளுக்குப் பாத்திரமாவார்கள் என்பதே ஆகும்.
ஸ்ரீ பராசக்தி அம்பிகை அன்ன வாகனத்தில் வருவது, அன்னபட்சி பாலுடன் கலந்த நீரை நீக்கிப் பாலை மட்டும்
பருகுவது போல் தீய செயல்களை நீக்கி நற்செயல்களைப் புரிந்து நல்லவற்றையே சிந்தித்து வரும்
புண்ணிய சீலர்களுக்கு எங்கும் நிறைந்திருக்கும் பராபரியின் (ஸ்ரீ அன்னை பராசக்தி) திருவருள்
உடனிருந்து துணைபுரியும் என்பதனை உணர்த்த ஸ்ரீஅம்மன் (ஸ்ரீ உண்ணாமலை அம்மன்) அன்ன வாகனத்தின்
மேல் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.
வாகனங்களுக்குரிய இந்த சிறப்புகள் அனைத்தும் திருவண்ணாமலை தலத்தில் இருந்தே தோன்றியதாக சொல்கிறார்கள்.
அது போல நவராத்திரி உருவான சிறப்பும் திருவண்ணாமலை தலத்துக்கே உண்டு.
- ராவணன் இறைவனை வணங்கித்தன் குற்றங்களை உணர்ந்து செருக்கடங்கினான்.
- அந்த நிலையினை உணர்த்துவதாக திருக்கயிலாய வாகனம் அமைகின்றது.
ராவணன் இறைவனை வணங்கித்தன் குற்றங்களை உணர்ந்து செருக்கடங்கினான்.
அந்த நிலையினை உணர்த்துவதாக திருக்கயிலாய வாகனம் அமைகின்றது.
நான் எனது என்னும் செருக்குகளை அகற்றி இறைவனை அடையும் உயரிய சிந்தனையை
ராவணனுடன் கூடிய திருக்கயிலாய வாகனம் விளக்குகின்றது.
- அதிகார நந்தியார் மீது எழுந்தருளும் அண்ணாமலையார் மூர்த்தி விருத்தக்கிரம சங்கரமூர்த்திகளாகும்.
- ஐந்தாவது மூர்த்தியான சண்டிகேஸ்வரர் புலி வாகனத்தில் அமர்ந்து வந்து துணை நிற்கின்றார்.
இறைவன் அழிக்கும் தொழிலை மேற்கொள்ளும் சங்கார மூர்த்தியாய் இருக்கின்ற நிலையினையும்,
செய்த பாவங்களுக்கு ஏற்ப மரணத்தை வழங்கும் நிலையினையும் குறிப்பாய் உணர்த்தும் தன்மை உடையதாக
அதிகார நந்தியும் பூதவாகனமும் விளங்குகின்றன.
அதிகார நந்தியார் மீது எழுந்தருளும் அண்ணாமலையார் மூர்த்தி விருத்தக்கிரம சங்கரமூர்த்திகளாகும்.
(விருத்தக்கிரம மூர்த்தி என்பது ஐந்தொழில் செய்யும் இறைவன் ஒன்றாக இணைந்து ஓர் உருவில் காட்சி தருவது ஆகும்).
எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீ அன்னை பராசக்தி திருவருள் உடனிருந்து துணைபுரியும் என்பதனை உணர்த்த
ஸ்ரீ உண்ணாமலை அம்மன் அன்ன வாகனத்தின் மேல் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
ஐந்தாவது மூர்த்தியான சண்டிகேஸ்வரர் புலி வாகனத்தில் அமர்ந்து வந்து துணை நிற்கின்றார்.
அருள்தரும் உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையார் (ஸ்ரீ பெரியநாயகம்) குதிரை வாகனத்தில் ஏறி வீதி உலா வருகிறார்.
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு கால்களையும் ஞான காண்டம், கரும கண்டம் என்னும் காதுகளையும்,
பரஞானம், அபரஞானம் என்னும் கண்களையும் விதிவிலக்கு என்ற முகத்தையும் வாலையும்.,
ஆகமங்கள் என்னும் அணிகளையும், மந்திரங்களாகிய சதங்கை, கிண்கிணி, மாலை சிலம்பு என்பவைகளையும்
பிரணவமாகிய கடிவாளத்தையும், அறுவகைப் புறச்சமயங்களாகிய போர் செய்யும் சேனைகளை வேருடன்
அழித்ததற்கேற்ற வெற்றியையும், பிரமனது முகங்களாகிய இலாயத்தையும் அண்ட கோடிகளாகிய
குதிரையின் மேல் ஏறி சிவபிரான் போர் வீரராகத் தொணடர்களுடைய பாசக் கயிறு இற்று வீழும்படி
எழுந்தருளி வருகிறார் என்ற உண்மையைக் குதிரை வாகனக் காட்சி நமக்கு உணர்த்துகிறது.
- யானை வல்லமை பொருந்தியது.
- அது அனைத்து மனமலங்களை மாயைகளை அறுக்கக்கூடியது.
யானை வல்லமை பொருந்தியது.
மதம் கொண்ட யானை கண்ணில் தென்படும் அனைத்தையும் அழித்து ஒழிக்கும் தன்மை பெற்றது.
இறைவனால் தரப்படும் பரஞானம் யானையைப் போன்றது.
அது அனைத்து மனமலங்களை மாயைகளை அறுக்கக்கூடியது.
எனவே, பரஞானம் யானையாக உருவகம் செய்யப்படுகிறது.
பரஞானத்தை அருள்பவன் இறைவன் என்னும் தத்துவத்தை விளக்கவே விழா நாட்களில் யானை வாகனம் பயன்படுத்தப்படுகின்றது.
- லிங்கத்தின் வடிவம் அண்டத்தின் வடிவமாகும்.
- இறைவன் அண்டத்தைப் படைத்ததோடு மட்டுமன்றி எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார்.
லிங்கத்தின் வடிவம் அண்டத்தின் வடிவமாகும்.
இறைவன் அண்டத்தைப் படைத்ததோடு மட்டுமன்றி எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கிறார்.
அந்த மூலாதாரத்தை, மூலமுதற்பொருள் தத்துவத்தை நிலை நிறுத்துவது
லிங்கார வட்டச் சொரூபப் பிரபை வாகனமாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்