என் மலர்
நீங்கள் தேடியது "வரி விலக்கு"
- காங்கயம் நகரில் உள்ள திரையரங்குகளிலும் இப்படம் ஒருவாரம் திரையிடப்பட்டது.
- நகா்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா்சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா்.
காங்கயம்:
தமிழ்த் திரைப்பட இயக்குநா் ஆா்.பாா்த்திபன் இயக்கி, நடித்த இரவின் நிழல் திரைப்படம் கடந்த ஜூலை 15 ந் தேதி தமிழகம் முழுவதும் வெளியானது. 'நான் லீனியா் சிங்கிள் ஷாட்' படம் என்ற வகையில் எடுக்கப்பட்ட இப்படம் பலதரப்பினராலும் பாராட்டப்பட்டது.இந்தப் படத்துக்கு ஆா்.பாா்த்திபன் கேளிக்கை வரிவிலக்கு கோரி தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தாா்.காங்கயம் நகரில் உள்ள திரையரங்குகளிலும் இப்படம் ஒருவாரம் திரையிடப்பட்டது.
இந்நிலையில் திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகா்மன்றக் கூட்டம் நடைபெற்றது.நகா்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா்சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா்வெங்கடேஷ்வரன், நகா்மன்ற துணைத் தலைவா்கமலவேணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஆா்.பாா்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் கூறியதாவது:-
திரைப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிப்பது குறித்த தமிழ்நாடு உள்ளாட்சி அதிகார அமைப்புகளின் கேளிக்கை வரிச் சட்டத்தின்படி, இரவின் நிழல் படத்துக்கு வரிவிலக்கு கோரி தமிழக அரசிடம் இயக்குநா் ஆா்.பாா்த்திபன் கோரிக்கை விடுத்திருந்தாா். இக்கோரிக்கை மனு மீதான உள்ளாட்சி நகா்மன்றங்களின் முடிவினை அனுப்பிவைக்குமாறு சென்னை நகராட்சி இயக்குநா் கடிதம் மூலம் தெரிவித்திருந்தாா்.இதையடுத்து, நடைபெற்ற காங்கயம் நகா்மன்றக் கூட்டத்தில் இரவின் நிழல் படத்துக்கு வரிவிலக்கு அளித்து ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா்.
- உள்நாட்டு பருத்தி வியாபாரிகள் மற்றும் செயற்கை இழை பஞ்சு தயாரிப்பாளர்கள், ஜவுளித்தொழிலில் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
- கோவைக்கு வருகை தந்த, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், சைமா தலைவர் சுந்தரராமன் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
திருப்பூர்:
உக்ரைன் - ரஷ்யா இடையே நீடிக்கும் போர், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரி மற்றும் செயற்கை இழை பஞ்சு மீதான, தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகள் போன்றவற்றால், உள்நாட்டு பருத்தி வியாபாரிகள் மற்றும் செயற்கை இழை பஞ்சு தயாரிப்பாளர்கள், ஜவுளித்தொழிலில் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.அதனால் மிக நீண்ட பருத்தி மீதான இறக்குமதி வரிவிலக்கு மற்றும் நிதி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோவைக்கு வருகை தந்த, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், சைமா தலைவர் சுந்தரராமன் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
- 100 சதவீதம் சாலை வரி (Road Tax) மற்றும் பதிவு கட்டணம் (Registration Fee) ரத்து
- டிராக்டர் மற்றும் பேருந்துகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.
மின்சார வாகனங்கள் பயன்பாட்டை மக்களிடேயே ஊக்குவிக்கும் முயற்சியாக தெலங்கானா அரசின் புதிய அறிவிப்பு இன்று முதல் அம்மாநிலத்தில் அமலுக்கு வர உள்ளது. மின்சார வாகனங்களை நோக்கி மக்களை ஈர்க்கும் விதமாக 100 சதவீதம் சாலை வரி (Road Tax) மற்றும் பதிவு கட்டணம் (Registration Fee) ரத்து செய்யப்பட்டுள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், வர்த்தக பயன்பாட்டு பயணிகள் வாகனங்கள், மின்சார ஆட்டோ ரிக்சா, மின்சாரத்தில் இயங்கும் இலக ரக சரக்கு வாகனங்கள், டிராக்டர் மற்றும் பேருந்துகளுக்கு இந்த திட்டம் பொருந்தும்.
2026-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை தெலங்கானாவில் வாங்கப்படும் மற்றும் பதிவு செய்யப்படும் அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களில் இந்த 100 சதவீத விலக்கு பொருந்தும். தெலங்கானா அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்காக வாங்கப்படும் மின்சார பேருந்துகளுக்கு மட்டும் வாழ்நாள் வரி, கட்டண விலக்கு அமலில் இருக்கும்.
- 12 முதல் 15 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு 20% வரி விதிக்கப்டுகிறது.
- நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் கையில் பணம் இருப்பு அதிகரித்து நுகர்வு வருமானத்தை அதிகாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொருளாதாரம் மந்தமாக இருப்பதால் நுகர்வு வருவாயை அதிகரிக்கும் நோக்கில் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களின் வருமான வரியை குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அடுத்த வருடம் பிப்ரவரி பட்ஜட்டில் இந்த வரிக்குறைப்பை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு வருமான வரித்திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றத்தின்படி புதிய வருமான வரி விலக்கு அறிமுகமானது.
அதன்படி ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. மூன்று முதல் 7 லட்சம் ரூபாய்க்கு 5% வரி , 7 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய்க்கு 10% வரி, 10 முதல் 12 லட்சம் ரூபாய்க்கு 15% வரி, 12 முதல் 15 லட்சம் ரூபாய்க்கு 20% வரி, 15 லட்சத்திற்கு மேல் 30% வரி என நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.
புதிய வரி வசூல் முறை அறிமுகமானாலும் பழைய முறையில் வருமான வரி செலுத்தவும் மக்களுக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த பழைய முறை 2025-26 அடுத்த நிதியாண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே அதனோடு புதிய வரி முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்தியாவின் பெரும்பான்மை வருமான வரி குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் ஈட்டுவோரிடமிருந்து கிடைக்கிறது.
எனவே ரூ. 15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி குறைப்பு செய்வதால் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் கையில் பணம் இருப்பு அதிகரித்து நுகர்வு வருவாயை அதிகரிக்கும் என்பதால் இந்த திட்டத்தை அரசு செயல்படுத்த வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது.
- தபால்துறை சார்பாக மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சேமிப்பு திட்டம் செயபடுத்தப்படுகிறது.
- இந்த சேமிப்பு திட்டத்தில் 60 வயது முடிவடைந்தவர்கள் சேரலாம்.
சேலம்:
தபால் துறை சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி சேலம் மேற்கு கோட்டம் சார்பில் தபால்காரரும், தாத்தா பாட்டியும் என்ற தலைப்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகத்தில் பணிபுரியும் தபால்காரர்கள் மூலம் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த சேமிப்பு திட்டத்தில் 60 வயது முடிவடைந்தவர்கள் சேரலாம்.
அதே போன்று 50 வயது முடிந்த பாதுகாப்பு பணியாளர்கள், 55 வயது முடிவடைந்த விருப்ப ஓய்வு பெற்றவர்கள் சேரலாம். குறைந்த பட்சம் ரூ.1,000-ம் முதல் அதிக பட்சம் ரூ.15 லட்சம் வரை சேமிக்கலாம். வருமான வரி சட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும் என்று சேலம் மேற்கு கோட்ட தபால் கண்காணிப்பாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.