search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லிகார்ஜூன் கார்கே"

    • காங்கிரஸ் வழிநடத்துதல் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
    • மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் சோனியாகாந்தி உள்ளிட்டோர் ஆலோசனை.

    கடந்த அக்டோபர் மாதம் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு பதிலாக வழி நடத்தல் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவின் முதல் கூட்டம் கார்கே தலைமையில டெல்லியில் இன்று நடைபெற்றது.

    முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மூத்த தலைவர்கள் ப சிதம்பரம், ஆனந்த் சர்மா, மீரா குமார், அம்பிகா சோனி மற்றும் மாநிலங்களுக்கான கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். பாத யாத்திரையில் பங்கேற்றுள்ளதால் ராகுல் காந்தி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 


    இதில் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளதாவது: வெறுப்பு விதைகளை விதைத்து, பிரிவினையின் பலனை அறுவடை செய்யும் ஆளும் கட்சிக்கு எதிராகப் போராடுவது நமது கடமை. ராகுல் காந்தியின் தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை, புதிய வரலாற்றை எழுதி, தேசிய இயக்கமாக உருவெடுத்துள்ளது.

    அடுத்த 30 முதல் 90 நாட்களுக்குள் மக்கள் பிரச்னைகளில் கட்சியின் நடவடிக்கை குறித்து மாநில பொறுப்பாளர்கள் அறிக்கை அளிக்க வேண்டும். உயர்மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். கடமையை நிறைவேற்ற முடியாதவர்கள், அடுத்தவருக்கு வழிவிட வேண்டும். காங்கிரஸ் வலுவாகவும், பொறுப்பாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்று நாட்டு மக்களுக்கு சேவை செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
    • பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இரு பிரதமர்களை இழந்துள்ளோம் என காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

    கேடா மாவட்டத்தில் நேற்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தங்களின் வாக்கு வங்கி அரசியல் பாதிக்கும் என்பதால் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுப்பதில்லை. பயங்கரவாதிகளின் நலனை விரும்புபவர்களிடம் குஜராத் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். பயங்கரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. காங்கிரஸ் கட்சியின் அரசியலும் மாறவில்லை. வாக்கு வங்கி அரசியல் இருக்கும் வரை, பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் என்ற அச்சமும் உண்மையானது என தெரிவித்தார்.

    இந்நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இரு பிரதமர்களை இழந்துள்ளோம் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதில் கொடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக, மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:

    நாட்டைப் பலப்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் நாங்கள் இரண்டு புகழ்பெற்ற மற்றும் உலகம் மதிக்கும் பிரதமர்களை இழந்துள்ளோம். இது மாநில சட்டசபைக்கான தேர்தல், பாராளுமன்ற தேர்தல் அல்ல.

    மாநிலத்தை பாதிக்கும் பிரச்சனைகளை உங்கள் முன் வைத்துள்ளோம். அரசின் வெற்றி தோல்விகளை அவர் பேசினால் நல்லது.

    பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் யாராவது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார்களா? என கேள்வி எழுப்பினார்.

    • கட்சியின் கொள்கையின்படி, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன்.
    • பாஜக எப்போதும் காங்கிரஸைக் குறைத்து மதிப்பிடுகிறது.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளரக்ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது சோனியாகாந்தி குடும்பத்தினரின் ஆதரவுடன் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்ற கருத்தை அவர் நிராகரித்தார். மேலும் அவர் கூறியதாவது:

    சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் கட்சித் தலைவராக வர விரும்பவில்லை. இதனால் அனைத்து மூத்த தலைவர்களும், இளைய தலைவர்களும் என்னை தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தினர். அவர்களின் அழைப்பு மற்றும் ஊக்கத்தினால் எனக்கு போட்டியிடும் உத்வேகம் கிடைத்தது.

    கட்சித் தலைவராக பதவியேற்றால், சோனியா காந்தி குடும்பத்தினர் மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்கள் கூறும் நல்ல விஷயங்களைச் செயல்படுத்துவேன். இப்போது காங்கிரசில் ஜி-23 என்று குழு இல்லை. அதில் இருந்த தலைவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக ஒற்றுமையாகப் போராட விரும்புகின்றனர்.எனக்கு அவர்கள் ஆதரவளிக்கின்றனர்.

    நான் யாரையும் எதிர்ப்பதற்காக தேர்தல் களத்தில் இறங்கவில்லை. காங்கிரசை வலுப்படுத்தவும், கட்சி சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்லவும் தேர்தல் களத்தில் நிற்கிறேன். ஒருவருக்கு ஒரு பதவி என்ற கட்சியின் கொள்கையின்படி, வேட்புமனு தாக்கல் செய்த அன்றே மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். கட்சிக்காக நான் முழு நேரம் வேலை செய்து வருகிறேன்.

    பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்தால் மாலையில் அவை நடவடிக்கை நிறைவு பெறும் பொழுதுதான் வெளியே வருவேன். எதை செய்தாலும் நேர்மையாக செயல்படுவது என் வழக்கம். கட்சியில் சீர்திருத்தங்கள் செய்வது குறித்து ஒரு குழு அமைக்கப்படும். ஒருமித்த கருத்துடன் அனைத்து கொள்கை விஷயங்களையும் முடிவு செய்து நாங்கள் செயல்படுத்துவோம்.

    பாஜக எப்போதும் காங்கிரஸைக் குறைத்து மதிப்பிடுகிறது. அவர்களுக்கு (பாஜக) எப்போது தேர்தல் நடந்தது? ஜே.பி. நட்டாவை யார் தேர்ந்தெடுத்தார்கள்? அவர்களின் தலைவர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்களா? காங்கிரஸில் தேர்தல் அதிகாரம், பிரதிநிதிகள், வாக்குரிமை, வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், இன்னும் அவர்கள் (பாஜக) தேர்தலை நடத்தவில்லை.

    சோனியாகாந்தி குடும்பம் இந்த நாட்டிற்காக நிறைய தியாகம் செய்துள்ளது. சோனியா காந்தி அரசியலில் சேர விரும்பவில்லை. அவரது சேவை நாட்டுக்கு தேவை என்ற அடிப்படையில் வற்புறுத்தப்பட்ட பின்னரே கட்சியை அவர் பலப்படுத்தினார். 10 ஆண்டுகளாக, நாங்கள் ஆட்சியில் இருந்தோம், அவர் பிரதமராக முயற்சித்தாரா அல்லது ராகுல் காந்தியை பிரதமராக்க முயற்சி செய்தாரா? கட்சிக்காக அவரது தியாகம் மிகப்பெரியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×