search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக எம்.பி.க்கள்"

    • பதவியேற்ற 22 திமுக எம்.பிக்களில் 13 எம்.பி.க்கள் வாழ்க உதயநிதி என்று கோஷமிட்டனர்.
    • வாழ்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வாழ்க” என 3 திமுக எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

    18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

    நேற்று பிரதமர் மோடி மற்றும் 279 பேர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். இன்று 2-வது நாளாக பதவி பிரமாணம் நடைபெற்று வருகிறது.

    தமிழக எம்.பி.க்கள் வரிசையாக இன்று மதியம் பதவி ஏற்றுக் கொண்டனர். திமுக எம்.பிக்கள் பலரும் இன்று மக்களவையில் பதவியேற்றபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டதோடு, வாழ்க உதயநிதி என்றும் கோஷமிட்டனர்.

    அதாவது இன்று பதவியேற்ற 22 திமுக எம்.பிக்களில் 13 எம்.பி.க்கள் வாழ்க உதயநிதி என்று கோஷமிட்டனர்.

    கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்க பாண்டியன், கலாநிதி வீராசாமி, தருமபுரி எம்.பி ஆ மணி, பெரம்பலூர் எம்.பி அருண் நேரு, தேனி எம்.பி. தங்க தமிழ்செல்வன் ஆகியோரைத் தவிர பிற திமுக எம்.பிக்கள் அமைச்சர் உதயநிதியின் பெயரைக் குறிப்பிட்டனர்.

    மேலும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி மலையரசன், ஆரணி எம்.பி தரணிவேந்தன், திருவண்ணாமலை எம்.பி சி.என்.அண்ணாதுரை ஆகியோர் இன்று மக்களவையில் பதவியேற்றபோது, "வாழ்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வாழ்க" என கோஷமிட்டனர்.

    கடைசியாக பதவியேற்ற தென்காசி திமுக எம்.பி ராணி, வாழ்க கனிமொழி, வாழ்க அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் என கோஷமிட்டார்.

    கடந்த காலங்களில் அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் 'அம்மா வாழ்க' என கோஷமிட்டதற்கு திமுக தலைவர்கள் விமர்சனம் செய்துள்ள நிலையில், இப்போது திமுக எம்.பிக்கள் பலரும் உதயநிதி வாழ்க என கோஷமிடுவது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    திமுகவின் முக்கிய எம்.பி.யான தயாநிதி மாறன் கூட உதயநிதி வாழ்க என கோஷமிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    • வாழ்க ஜனநாயகம், வாழ்க அரசியல் சாசனம் எனக்கூறி உறுதிமொழி எடுத்த திருமாவளவன்.
    • வேண்டாம் நீட், Ban நீட் என முழக்கமிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டார் தாயநிதி மாறன்.

    18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்க பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறது.

    நேற்று பிரதமர் மோடி மற்றும் 279 பேர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். இன்று 2-வது நாளாக பதவி பிரமாணம் நடைபெற்று வருகிறது.

    தமிழக எம்.பி.க்கள் வரிசையாக இன்று மதியம் பதவி ஏற்றுக் கொண்டனர்.

    திருவள்ளூர் தொகுதி எம்.பி. சசிகாந்த் செந்தில் கையில் அரசியலமைப்பு புத்தகத்தின் தமிழில் பதவி ஏற்றார்.

    அதன்பின் முன்னாள் தமிழக அமைச்சர் வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி எம்.பி.யாக பதவி ஏற்றுக் கொண்டார்.

    தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கையில் அரசியலைப்பு புத்தகத்துடன் பதவி ஏற்றுக் கொண்டார்.

    மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் பதவி ஏற்ற்றார். பதவி ஏற்றபின் பின் தயாநிதி மாறன் வேண்டாம் நீட், Ban நீட் என முழக்கிமிட்டார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதவி ஏற்கும்போது ஜனநாயகம் வாழ்க. அரசியலமைப்பு வாழ்க என்றார்.

     கனிமொழி எம்.பி. பதவி ஏற்கும்போது அரசியலமைப்பு வாழ்க முழக்கமிட்டு பதவி ஏற்றார்.

     

    • தமிழக எம்.பி.க்கள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
    • டோல்கேட் பணியாளர்கள் தொடர் போராட்டம்

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம்,

    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் , மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி, ஆகிய இரண்டு சுங்கச்சாவடிகளில் 56 -பேரை நிரந்தர பணி நீக்கம் செய்துள்ளது.

    அந்த நிர்வாகத்தைக்கண்டித்து தொழிலாளர்கள் நேற்று 3- வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்திற்கு அமைச்சர் சிவசங்கர், எம்.எல்.ஏ.பிரபாகரன், ஊராட்சி குழு தலைவர் குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். அங்கு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் தொழிலாளர்களோடு தரையில் அமர்ந்து தொழிலாளர்களிடம் அமைச்சர் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும் போது,

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். கடந்த 13- ஆண்டுகளாக இங்கு பணி புரிந்து வந்த 56 தொழிலாளர்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ளனர். இந்த அலுவலகம் பாண்டிச்சேரியில் அமைந்துள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சரு டன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தமிழக எம்.பி.க்கள் வாயிலாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். இந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு துணை நிற்கும்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    அப்போது பெரம்பலூர் கோட்டாட்சியர் ச.நிறைமதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இரா. கிட்டு, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட துணை செயலாளர்கள் நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், ஒன்றிய கழக செயலாளர்கள் தி.மதியழகன், வீ.ஜெகதீசன், எஸ்.நல்வத்தம்பி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஏ.எஸ்.ஜாஹிர்உசேன், துணை தலைவர் எ.ரசூல்அகமது, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், திருமாந்துறை ஒன்றிய குழு உறுப்பினர் பெரு.கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×