search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபான ஆலை விவகாரம்"

    • போலி மதுபான ஆலை இயங்கிய விவகாரத்தில் மயிலாடுதுறை சீர்காழி சிங்கார தோப்பு பகுதி குமார் என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
    • போலி மதுபான ஆலை நடத்திய விவகாரத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஈரோடு:

    ஈரோடு சூளை பூசாரி தோட்டத்தில் உள்ள ஒரு குடோனில் செயல்பட்டு வந்த போலி மதுபான தயாரிப்பு ஆலையை கடந்த மாதம் 9-ந் தேதி ஈரோடு மதுவிலக்கு போலீசார் கண்டுபிடித்தனர்.

    போலி மதுபானம் தயாரித்ததாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, எலந்த குளம் பள்ளர் தெருவை சேர்ந்த வீரபாண்டி (51), மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த முகேஷ் (38) உள்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் போலி மதுபான ஆலை விவகாரத்தில் சீர்காழி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    மதுவிலக்கு போலீசார் சீர்காழி பகுதியில் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ஈரோட்டில் போலி மதுபான ஆலை இயங்கிய விவகா ரத்தில் தொடர்புடைய மயிலாடு துறை சீர்காழி சிங்கார தோப்பு பகுதியில் இருந்த குமார் (48) என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

    அவரை ஈரோடு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கடந்த 2-ந் தேதி நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

    ஈரோட்டில் போலி மதுபான ஆலை நடத்திய விவகாரத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×