என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணூர்"

    • சிறுவன் ஷிவாம்ஸ் ஒரே நேரத்தில் 200 கார்களின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளான்.
    • சிறுவனின் சாதனை நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் ஷிவாம்ஸ். அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவரும் இந்த சிறுவன் ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை இருக்கிறது.

    சிறுவனுக்கு கார்கள் மீதான மோகம் காரணமாக தனது 3 வயதில் ஏற்பட்டிருக்கிறது. அதில் இருந்து பல கார்களின் பெயரை லோகோவை பார்த்ததும் கூறிவிடுவான். இந்நிலையில் சிறுவன் ஷிவாம்ஸ் ஒரே நேரத்தில் 200 கார்களின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளான்.

    சிறுவனின் சாதனை நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. அப்போது 33 வினாடிகளில் 50 கார்களின் பெயரையும், 1.57 நிமிடத்தில் 110 கார்களின் பெயரையும் லோகோவை பார்த்து சரியாக கூறினான். இதன் காரணமாக 'டைம் வோல்ட் ரெக்கார்ட்ஸ்' சார்பில் உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • பதிவு மீண்டும் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
    • அதிக விலையைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்துள்ளார்.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான குளிர்கால விடுமுறை சீசன் நெருங்கி வருவதால், பல வழித்தடங்களில் விமான டிக்கெட் கட்டணத்தை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. பண்டிகைக் காலங்களில் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரிப்பது பேசு பொருளாகி வருகிறது.

    அந்த வகையில், டெல்லியில் இருந்து கேரளாவின் கண்ணூருக்கு நேரடி விமானத்திற்கு பயண கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது சமீபத்தில் வெளியிட்ட பதிவு மீண்டும் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

    டெல்லியில் இருந்து கண்ணூருக்கு விமான டிக்கெட்டுகளின் அதிக விலையைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்துள்ளார். ஸ்கிரீன்ஷாட்களின் படி நேரடி விமானங்களுக்கான டிக்கெட்டுகளின் விலை ரூ. 21,966 முதல் ரூ. 22,701 வரை குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இது குறித்த எக்ஸ் தள பதிவில், "டெல்லியிலிருந்து கண்ணூருக்கு இண்டிகோவின் டிக்கெட் விலை 21ஆம் தேதி. நேரடி விமானம் ரூ.22,000! துபாய் செல்வது மலிவானது! இதைத்தான் ஏகபோகம் செய்கிறது" என்று அவர் தனது பதிவில் எழுதினார்.

    • ஆற்றில் மூழ்கி 5 பேர் பலியான சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள குண்டூச்சி எரிஞ்சிபுழா பகுதியை சேர்ந்த தம்பதி அஷ்ரப்-ஷபானா. தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் அதனை கொண்டாடும் விதமாக இவர்களது வீட்டுக்கு அவர்களது உறவினர்களான மஜீத்-சபீனா தம்பதி மற்றும் மஞ்சேஸ் வரத்தை சேர்ந்த சித்திக்-ரம்லா தம்பதி தங்களது குழந்தைகளுடன் வந்திருந்தனர்.

    இந்தநிலையில் அவர்கள் அனைவரும் அங்குள்ள எரிஞ்சிபுழா ஆற்றிற்கு நேற்று குளிக்க சென்றனர். அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அஷ்ரப்பின் மகன் யாசின் (வயது12), அவர்களது வீட்டுக்கு வந்திருந்த மஜீத்தின் மகன் சமத்(12), சித்திக்கின் மகன் ரியாஸ்(17) ஆகிய 3 பேரும் ஆற்று சுழலில் சிக்கி மூழ்கினர்.

    அவர்களை அவர்களது குடும்பத்தினர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் சிறுவர்கள் 3 பேரும் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் கண்ணூரில் ஆற்றில் மூழ்கி 2 பேர் பலியாகிவிட்டனர். கோட்டாலி பகுதியை சேர்ந்த வின்சென்ட்(42) மற்றும் அவரது பக்கத்து வீட்டு சிறுவனரான அல்பின்(9) ஆகிய இருவரும் சரல்புழா ஆற்றுக்கு சென்றனர். அப்போது சிறுவன் அல்பின் ஆற்றுக்குள் தவறி விழுந்தான்.

    இதையடுத்து அவனை காப்பாற்ற வின்சென்ட் ஆற்றுக்குள் குதித்துள்ளார். அப்போது இருவரும் ஆற்றில் மூழ்கி இறந்தனர். காசர்கோடு மற்றும் கண்ணூரில் ஆற்றில் மூழ்கி 5 பேர் பலியான சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளி வேனில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.
    • 15 மாணவ, மாணவிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கேரள மாநிலம், கண்ணூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேனில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.

    இந்நிலையில், வளகை என்ற இடத்தில் இறக்கத்தில் வந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர தடுப்பில் மோதி உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 15 மாணவ, மாணவிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கண்பவர்களை பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • பெண்கள் சிறைச்சாலையின் அலுவலக கட்டிடத்திற்கு மேலே 25 மீட்டர் உயரத்தில் இந்த டிரோன் பறந்துள்ளது.
    • டிரோன் பறந்த நாளில் அந்த பகுதியில் திருமணமோ வேறு எந்த விழாவோ நடைபெறவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூரில் மத்திய சிறை உள்ளது. இதன் அருகே மாவட்ட சிறை மற்றும் ஒரு சிறப்பு துணை சிறைச்சாலை உள்ளது. இவற்றுக்கு பின்னால் பெரிய சுவர்களை கொண்ட பெண்கள் சிறையும் உள்ளது.

    இங்கு சம்பவத்தன்று இரவு ஒரு டிரோன் 2 முறை பறந்து சுற்றி வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயர் பாதுகாப்பு கொண்ட பெண்கள் சிறைச்சாலையின் அலுவலக கட்டிடத்திற்கு மேலே 25 மீட்டர் உயரத்தில் இந்த டிரோன் பறந்துள்ளது.

    முதலில் சிறை ஊழியர்கள் இதனை சாதாரணமாகத்தான் கருதினர். ஆனால், 2 முறை அந்த கட்டிடத்தை சுற்றி வந்த டிரோன், சிவப்பு மற்றும் பச்சை விளக்குகளை ஒளிரச் செய்து விட்டு மறைந்தது தான் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக சிறை ஊழியர்கள், கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் மற்றும் விழாக்களின்போது டிரோன் பறக்க விட்டு படம் எடுப்பது வழக்கம்.

    பெண்கள் சிறைச்சாலையின் மேலே டிரோன் பறந்த நாளில் அந்த பகுதியில் திருமணமோ வேறு எந்த விழாவோ நடைபெறவில்லை. எனவே டிரோன் பறந்தது ஏன்? அதனை பறக்க விட்டது யார்? என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க யஷ்வந்த்பூர் கண்ணுார் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
    • இதில், ஏசி இரண்டடுக்கு பெட்டிகள், 2, மூன்றடுக்கு, படுக்கை வசதி , பொதுப்பிரிவு, பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க யஷ்வந்த்பூர்-கண்ணுார் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.தமிழகம், கேரளாவில் தொடர் பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இதை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக, யஷ்வந்த்பூர்-கண்ணுார் இடையே(வ.எண்:06283) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.நாளை காலை, 7:40 மணிக்கு புறப்படும் ரயில், இரவு, 8:30க்கு கண்ணுார் சென்றடையும். நாளை இரவு, 11:00க்கு கண்ணுாரில் இருந்து புறப்படும் ரயில்(06284) மறுநாள் மதியம், 1:00க்கு யஷ்வந்த்பூர் அடைகிறது. இதில், ஏசி இரண்டடுக்கு பெட்டிகள், 2, மூன்றடுக்கு, 6, படுக்கை வசதி, 7, பொதுப்பிரிவு, 2 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். பனஸ்வாடி, கிருஷ்ணராஜபுரம், திருப்பத்துார், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தப்பாலம், சொரணுார், திரூர், கோழிக்கோடு உள்ளிட்ட ஸ்டேஷன்களில் இந்த ரயில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    ×