search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ. 4 கோடி"

    • குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிர்ணயம்
    • மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகை விற்பனை தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடந்தது.

    கலெக்டர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி விற்பனையை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

    தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 87 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள் முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவா ளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது.

    தற்போதைய காலத்திற் கேற்ற வகையில் புதிய யுக்தி களை கையாண்டு பல வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

    கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில், குமரி மாவட்டத்தில் உள்ள 4 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் ரூ.2.25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி பண்டிகைக்கு ரூ.4.10 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கனவு நனவு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல் படுத்தி வருகிறது. இதில் மாத சந்தா தொகை வாடிக்கையாளர்களி டம் இருந்து பெறப்பட்டு 11-வது மற்றும் 12-வது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் செலுத்தி மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்

    நிகழ்ச்சியில் கோ-ஆப் டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் ராஜேஷ்குமார், முதுநிலை மேலாளர்(தணிக்கை) இசக்கிமுத்து, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலாவாணி, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்ட னர். விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் பத்மராஜ் செய்திருந்தார்.

    ×