search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 வாகனங்கள்"

    • நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா கீழ்சாத்தம்பூர் கிராமத்துக்கு உட்பட்ட ஏரியில் ராட்சச பொக்லைன் எந்திரம் மற்றும் ஜே.சி.பி மூலம் டிப்பர் லாரிகளில் மண் வெட்டி எடுத்தனர்.
    • தகவலின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர்கள் 6 வாகனங்களை பறிமுதல் செய்து பரமத்தி போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா கீழ்சாத்தம்பூர் கிராமத்துக்கு உட்பட்ட ஏரியில் ராட்சச பொக்லைன் எந்திரம் மற்றும் ஜே.சி.பி எந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் மண் வெட்டி எடுக்கப்படுவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கீழ் சாத்தம்பூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் சசிகலா, வருவாய் ஆய்வாளர் அம்ரித் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஜே.சி.பி மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் 4 டிப்பர் லாரிகளில் மணல் எடுத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து நாமக்கல் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து தாசில்தார் சக்திவேல் உத்தரவின்பேரில் கீழ்சாத்தம்பூர் ஏரியில் இருந்து சட்ட விரோதமாக மண் வெட்டி எடுத்த 4 டிப்பர் லாரிகள், ஒரு ஜே.சி.பி எந்திரம் மற்றும் ஒரு பொக்லைன் எந்திரம் உட்பட மொத்தம் 6 வாகனங்களை கீழ்சாத்தம்பூர் கிராம நிர்வாக அலுவலர் சசிகலா பறிமுதல் செய்து பரமத்தி போலீசாரிடம் ஒப்படைத்தா.

    இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறை வான வர்களை தேடி வருகின்றனர்.

    ×