search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண்மைத்துறை"

    • மழைப்பொழிவில் பெரும் பங்களிப்பை அளித்து விவசாயத்துக்கு உதவுகிறது.
    • ஒவ்வொரு விவசாயியும் அதிகபட்சமாக 400 மரக்கன்றுகள் வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

     உடுமலை:

    மரம் வளர்ப்பு என்பது விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டித் தருவதுடன் பலவிதமான நன்மைகள் தரக்கூடியதாகவும் உள்ளது.இதுகுறித்து மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பொதுவாக மரப்பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. தனிப்பயிராக மரப்பயிர்கள் சாகுபடி செய்ய வசதியில்லாதவர்கள் ஊடுபயிராகவோ, வேலிப்பயிராகவோ சாகுபடி செய்யலாம்.இவ்வாறு மரப்பயிர்களை சாகுபடி செய்யும்போது அவை அரணாக நின்று பலத்த காற்றினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்க உதவுகிறது. மேலும் பறவைகளின் இருப்பிடமாக இருப்பதன் மூலம் பயிருக்கு தீங்கு தரும் பூச்சிகளுக்கு எதிரியாக இருக்கிறது. மேலும் மழைப்பொழிவில் பெரும் பங்களிப்பை அளித்து விவசாயத்துக்கு உதவுகிறது.

    மரப்பயிர்கள் சாகுபடிக்காக மடத்துக்குளம் வட்டாரத்துக்கு நடப்பு ஆண்டில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வனத்துறையின் நாற்றுப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட தரமான தேக்கு, மகாகனி, செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் வேளாண்மைத்துறை மூலம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. வரப்பு ஓரங்களில் நடவு செய்வதற்கு ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், தனிப்பயிராக சாகுபடி செய்வதற்கு ஏக்கருக்கு 150 மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு விவசாயியும் அதிகபட்சமாக 400 மரக்கன்றுகள் வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

    வரும் பருவமழைக்காலத்தில் மரக்கன்றுகள் நடவு செய்வதன் மூலம் சீரான வளர்ச்சியைப் பெற முடியும். எனவே வேளாண்மைத்துறை மூலம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சேதாரம் ஏற்படுவதற்கு முன்னரே விவசாயிகள் பயிர் காப்பீடு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
    • சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய வரும் 21-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இழப்பினை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு சம்பா, தாளடி, பிசான பருவ பயிர்களுக்கான காப்பீடு கடந்த செப்டம்பர் 15-ம் தேதி பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தொடங்கப்பட்டது. இதுவரை 11 லட்சம் விவசாயிகளால் 15.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான அவகாசம் கடந்த நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்தது.

    நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில், சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்காக நவம்பர் 21-ம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. பயீர் காப்பீடு செய்ய நாளை, நாளை மறுநாள் வங்கிகள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட 27 மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சித்தோடு அருகே உள்ள கருப்புராயன் கோவில் அருகில் இருந்த சுமார் 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    பவானி:

    ஈரோடு சம்பத் நகர் அருணாச்சலம் வீதி, சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (35). இவர் வேளாண்மைத்துறையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் காரில் நசியனூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

    அப்பொழுது திடீரென கார் சித்தோடு அருகே உள்ள கருப்புராயன் கோவில் அருகில் இருந்த சுமார் 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. கார் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    சம்பவ இடத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் இடிப்பாடிகளில் சிக்கி இறந்த ஜெயக்குமார் உடலை மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோத னைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×