search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்பீக்கர் கட்டி பயணிகளை அழைப்பு"

    • பஸ்களின் அருகே ஸ்பீக்கர் கட்டி பயணிகளை கூவி கூவி அழைக்கின்றனர்.
    • பஸ்நிலையத்தில் திரும்பிய திசையெல்லாம் இதுபோல ஸ்பீக்கர்களை கட்டி பயணிகளை அழைப்பதால் ஒலி மாசு ஏற்பட்டு பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி

    திண்டுக்கல் பஸ்நிலை யத்தில் பயணிகளை வரவழைப்பதற்காக கண்டக்டர்கள் மற்றும் உதவியாளர்களே குறிப்பிட்ட ஊரை சொல்லி அழைத்து வந்தனர். ஆனால் தற்போது மதுரை, திருச்சி, சேலம், ஈேராடு, தேனி, கரூர் போன்ற நகரங்களுக்கு செல்லும் பஸ்களின் அருகே ஸ்பீக்கர் கட்டி பயணிகளை கூவி கூவி அழைக்கின்றனர்.

    இதனால் மற்ற பஸ்களில் பயணிகளை ஏற்ற முடியாமல் டிரைவர்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக சாலையோர கடைகள், தெருக்களில் காய்கறி, துணிமணிகள் விற்பவர்கள் ஸ்பீக்கர் கட்டி தங்கள் பொருளை சொல்லி வாடிக்கையாளர்களை கவருவது வழக்கம்.

    ஆனால் பஸ்நிலையத்தில் திரும்பிய திசையெல்லாம் இதுபோல ஸ்பீக்கர்களை கட்டி பயணிகளை அழைப்பதால் ஒலி மாசு ஏற்பட்டு பயணி கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.குறிப்பாக நோயாளிகள் மற்றும் முதியவர்கள் இதனால் பெரிதும் பாதி க்கப்பட்டு வருகின்றனர்

    எனவே போக்குவரத்து த்துறை அதிகாரிகள் இப்பிரச்சினை யில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×