search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமசாமி கோவில்"

    • நேர்த்தியாகக் கட்டப்பட்ட இந்த கோவில் தூண்களில் நல்ல வேலைப்பாடு அமைந்த சிற்பங்களை காணலாம்.
    • திருமாலின் அவதாரங்கள் கண்ணைக் கவரும் விதத்தில் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன.

    இந்த கோவில் கும்பகோணம் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் பெரிய கடை வீதியின் தென்கோடியில் அமைந்திருக்கிறது.

    தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்திய ரகுநாத நாயக்க மன்னரால் கி.பி.1620 ல் இக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு.

    "ஆதி கும்பேஸ்வரர்" திருக்கோவிலுக்கு மிக அருகிலேயே இக்கோவில் இருக்கிறது. கோவிலின் மொத்த நிலப்பரப்பு சுமார் இரண்டு ஏக்கர் இருக்கும்.

    5 நிலை ராஜகோபுரத்துடன் வடக்கு நோக்கி மூலவர் ராமர், சீதை, பரதன், லட்சுமணன், சத்ருக்கன், அனுமன் எல்லாருடனும் சாமரக் குடையின் கீழ் பட்டாபிஷேக கோலத்தில் கண்குளிரக் காட்சியளிக்கிறார்.

    நேர்த்தியாகக் கட்டப்பட்ட இந்த கோவில் தூண்களில் நல்ல வேலைப்பாடு அமைந்த சிற்பங்களை காணலாம்.

    திருமாலின் அவதாரங்கள் கண்ணைக் கவரும் விதத்தில் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன.

    ஆஞ்சநேயர் வீணையுடன் ராமாயண பாராயணத்துடனும் இருக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

    பங்குனி மாதத்தில் வரும் ராமநவமி அன்று இங்கு வெகு விமரிசையாக விழா நடக்கும்.

    கோவிலை விட்டு வெளியே வந்தாலும் இந்த கோவிலின் 62 தூண்களில் காணப்படும் நுண்ணிய வியக்கத்தக்க சிற்பங்கள் நம் கண்ணிலேயே நிற்கும்.

    • அதிகாலை முதலே அதிகளவில் மக்கள் குடும்பத்துடன் வந்தனர்.
    • கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக பஸ் நிறுத்தம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கோவில்பா ளையத்தில் ராமசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 500 ஆண்டு பழமை வாய்ந்தது. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதே போன்று இன்று அதிகாலை முதலே அதிகளவில் மக்கள் குடும்பத்துடன் வந்தனர். இதனையொட்டி கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக பஸ் நிறுத்தம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ குழு, தீயணைப்புத்துறை வசதி ஆகிய சிறப்பான ஏற்பாடுகள் பரம்பரை அறங்காவலர்கள் குழு தலைவர் பி.எம். கிருஷ்ணகுமார் தலைமையில் செய்யப்ப டுகிறது. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா தலைமையில், அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். ராமபிரான் வந்து சென்ற இடம் என்பதால் இந்த கோவில் கிராமத்து வழக்கப்படி ராமசாமி கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    ×