search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுப்படுத்தல்"

    • விலைமதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுகிறது.
    • ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி ஆபத்தில் சிக்குபவர்களை நிரந்தர மாக கட்டுப்படுத்த தேவை யான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலத்துக்கு ஆண்டின் பெரும்பகுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை இருந்து கொண்டே இருக்கும்.

    தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், சில நேரங்களில் வெளிநாட்டவர்களும் கூட இங்கே சுற்றுலா வந்து செல்கின்றனர்.

    இங்கு, காவிரியாற்றின் சில பகுதிகள் சுழல் மற்றும் இழுவை நிறைந்த பகுதியாக உள்ளன. இதுதவிர, சில பகுதிகளில் ஆற்றில் முதலைகள் உள்ளன.

    ஒகேனக்கல் அடுத்த ஆலம்பாடி உட்பட இது போன்ற பகுதிகளை தேர்வு செய்து, ஆபத்தான பகுதி.

    இங்கு குளிக்கவோ, ஆற்றில் இறங்கவோ கூடாது' என 5-க்கும் மேற்பட்ட மொழிகளில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இருப்பினும் இந்த அறிவிப்புகளையும் மீறி சிலர் காவிரியாற்றில் குளிப்பது உள்ளிட்ட நடவடிக் கைகளில் ஈடுபடுகின்றனர்.

    இவர்களை கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவோரில் பெரும் பாலானவர்கள் ஒகேனக்கல் காவிரி ஆற்றோர பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை மதித்து நடக்கின்றனர்.

    ஒரு சிலர் எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு ஆற்றின் அருகில் செல்வது, ஆற்றில் இறங்குவது, குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரில் சிலர் சில நேரங்களில் ஆபத்தில் சிக்குகின்றனர். இதனால் விலைமதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுகிறது.

    உயிரிழப்பு நிகழ்ந்த குடும்பங்களில் நீண்ட காலத்துக்கு சோகம் தொடரும் நிலை உருவாகி விடுகிறது. எனவே, அப்பகுதிகளில் காவல்துறை மூலம் கண்காணிப்பை அதிகரித்து இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும்.

    அறியாமை, அதீத நம்பிக்கை போன்றவற்றால் காவிரியாற்றில் உள்ள ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி ஆபத்தில் சிக்குபவர்களை நிரந்தரமாக கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தகவல்
    • பள்ளி, கல்லூரிகளில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி உள்ளதாக திருவனந்தபுரம் எஸ்.பி. ஷில்பா தியாவையா தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தினமும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.அவர்களிடம் விசாரணை நடத்திய போது அதிகமானோர் கேரளாவில் இருந்து குட்கா மற்றும் கஞ்சாவை வாங்கி வருவதாக தெரிவித்தனர்.

    இதை யடுத்து மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். எல்லை பகுதியிலுள்ள ஊரம்பு, களியக்காவிளை சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு போதை பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதி யாக அந்த பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் திருவனந்தபுரம் போலீஸ் சூப்பி ரண்டு ஷில்பா தியா வையா ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆட்டோக்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.கொரியர் நிறுவனங்களுக்கும் போலீசார் அறிவுரைகளை வழங்கினார்கள்.

    வெளியூர்களிலிருந்து இரண்டு கிலோவுக்கு மேல் வரும் பார்சல்களை ஒப்படைக்கும் போது அதை திறந்து பார்த்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. போதை பொருட்கள் குறித்து தகவல் தெரிந்தால்

    7010363173 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத் தரவுப்படி தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத் தில் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ள னர். இதன் அடுத்த கட்ட மாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் போதை பொருட்களை தடுப்பது தொடர்பான நடவடிக்கை தொடங்கி உள்ளோம்.

    குமரி மாவட்டம் கேரளா அருகில் உள்ள தால், தற்போது கேரள போலீசாருடன் இணைந்து போதை பொருட்கள் விற்ப னையை தடுத்தல் மற்றும் இது தொடர்பான குற்ற வாளிகளை கைது செய் தல் நடவடிக்கைகளை பரி மாற்றம் செய்து கொள் ளுதல் போன்றவை மேற் கொள்ளப்பட உள்ளது. இது தொடர்பாக தற்போது திரு வனந்தபுரம் மாவட்ட எஸ். பி.யுடன் இணைந்து முதற் கட்டமாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற் கொண்டு உள்ளோம். தக வல்களை பரிமாற்றம் செய் யும்போது குற்றவாளிகளை விரைந்து கைது செய்யமுடி யும். கொரியர் சர்வீஸ் சென் டர்களையும் கண்காணித்து வருகிறோம்.

    பெரும்பாலும் தற்போது கொரியர் மூலம் கஞ்சா பார்சல்கள் வருவது தெரிய வந்துள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கஞ்சா, போதை பொருட் கள் விற்பனை மட்டுமின்றி செயின் பறிப்பு குற்றவா ளிகளையும் கைது செய்ய இரு மாநில போலீசாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வார் கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவனந்தபுரம் எஸ்.பி. ஷில்பா தியாவையா கூறு கையில், கேரள முதலமைச் சர் உத்தரவின்படி போதை பொருள் விற்பனையை தடுக்கவும், இதில் பாதிக் கப்பட்டவர்களை மீட்கவும் நடவடிக்கைமேற்கொண்டு வருகிறோம். பள்ளி, கல்லூ ரிகளில் இது தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்ப டுத்தி உள்ளோம். போதை பழக்கத்துக்கு அடிமை யானவர்களை கண்டறிந்து அவர்களை அதில் இருந்து மீட்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    பொதுமக்கள், வியா பாரிகள் ஒத்துழைப்பு அவசியம், கேரள எல் லையில் உள்ள அமா விளை சோதனை சாவ டியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இருமாநில போலீசாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொள் ளும் போது குற்றவாளி களை எளிதில் கைது செய்ய முடியும் என்றார்.

    ×