என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்"

    • மர்ம நபர்கள் கதவை உடைத்து பீரோவில் இருந்த 20 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    • தொடர் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பொதுமக்க ளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பழைய கரூர் சாலை ஜி.எஸ். நகரை சேர்ந்தவர் ரவிசந்திரன் (வயது57). இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    நீண்ட நாட்களாக வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 20 பவுன் நகை, வெள்ளி ெபாருட்கள் மற்றும் ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    நேற்று ஊர் திரும்பிய ரவிசந்திரன் வீட்டில் ்கொள்ளை போனது தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன், தாலுகா இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. ஆனால் மோப்பநாய் சிறிது தூரம் ஓடி யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

    திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக தனியாக இருக்கும் வீடுகளை நோட்ட மிட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. ரவுண்ட் ரோடு பகுதியில் நடைபயிற்சி சென்ற பெண்களிடம் நகை, செல்போன் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறின. போலீசாரின் தீவிர நடவடிக்கையால் தற்போது அவை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மீண்டும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பொதுமக்க ளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், அதிக நாட்கள் வெளியூர் சென்றால் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு செல்லலாம். மேலும் கண்காணிப்பு காமிரா அவசியம் குறித்து பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டபோதும் பலர் அதனை பொருட்ப டுத்துவது இல்லை.

    கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டிருந்தால் கொள்ளையர்கள் குறித்து எளிதில் துப்பு துலங்கிவிடும் எனவே பொதுமக்கள் இதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றனர்.

    ×