search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீட்டுகள்"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பகுதிகளில் சிலர் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லாட்டரி சீட்டுகளை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.
    • இவரிடமிருந்து ரூ.53 ஆயிரம், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பகுதிகளில் சிலர் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லாட்டரி சீட்டுகளை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.

    போலி லாட்டரி சீட்டு விற்பனை

    இந்த லாட்டரி சீட்டுகளை இவர்களே பிரிண்ட் அடித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பரமத்தி வேலூர் மற்றும் பரமத்தி சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனையாவதாக பரமத்தி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    8 பேர் கைது

    தகவலின் அடிப்படையிலா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சேர்ந்த தங்கபாண்டி (வயது 24), ராஜ்குமார் (24), சதாசிவம் (25), கரூர் மாவட்டம், வெங்கமேட்டை சேர்ந்த மகாதேவன் (37), காந்தி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (51),நாமக்கல் அருகே உள்ள வரப்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (60), சுங்ககாரன்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி (37) மற்றும் ஒருவர் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து ரூ.52 ஆயிரத்து 700 ரொக்கத்தையும், 3 இருசக்கர வாகனங்களையும், ஏராளமான வெளி மாநில லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் பரமத்தியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பரமத்தியைச் சேர்ந்த திருக்கேதீஸ்வரன் (29), திலீபன் (27) மற்றும் மரவாபாளையத்தைச் சேர்ந்த ரகு(26) ஆகிய 3 பேர்களையும் பரமத்தி போலீசார் கைது செய்தனர்.

    வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

    அவர்களிடமிருந்து ரூ.700-ஜ பறிமுதல் செய்து விற்பனைக்கு வைத்திருந்த வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×