search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேபாள அதிபர்"

    • பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது.
    • ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    காத்மாண்டு:

    நேபாள அதிபர் ராம்சந்திர பவுதல் (வயது 78) கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த 1ம் தேதி வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதையடுத்து காத்மாண்டுவில் உள்ள டியூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் அவரது மகன் சிந்தன் பவுதல் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம் சந்திர பவுடல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
    • அவருக்கு 214 எம்.பி.க்கள், 352 மாகாண சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது.

    காத்மாண்டு:

    நேபாள அதிபர் பித்யாதேவி பண்டாரியின் பதவிக்காலம் வரும் 12-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அங்கு புதிய அதிபர் தேர்தல் நேற்று நடந்தது.

    இதில் நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம் சந்திர பவுடல் (78), புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 214 எம்.பி.க்கள், 352 மாகாண சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. நாட்டின் முக்கியமான 8 கட்சிகள் ராம் சந்திர பவுடலை ஆதரித்தன.

    அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுபாஷ் சந்திர நெபாங்கை முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் கட்சி மட்டுமே ஆதரித்தது.

    புதிய அதிபர் ராம்சந்திர பவுடலுக்கு பிரதமர் பிரசந்தா, முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தூபா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    • நேபாள அதிபர் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக போட்டுள்ளார்.
    • இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்.

    காட்மாண்டு:

    நேபாள நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரி (61) திடீர் உடல் நலக் குறைவால் 2 நாட்களுக்கு முன்பு காத்மண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல், இருமல், உடல்வலி இருந்த நிலையில் மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் பித்யா தேவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அவர் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக போட்டுள்ளதால் கவலையளிக்கும் வகையிலான பிரச்சினைகள் ஏற்படாது என மருத்துவர்கள் நம்பிக்கையும் தெரிவித்து உள்ளனர். எனினும் இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவர் காஃப்லே கூறியுள்ளார்.

    ×