என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை சாவு"

    • வி.சாலை அகரம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிர்பாராத விதமாக லாரி மீது பைக் மோதியது.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திருக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன் (வயது 52). வீடூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருந்தார். இவரது மகன் சஞ்சய் (18) இவர்கள் இருவரும் பைக்கில் கூட்டேரிப்பட்டு பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சஞ்சய் இரு மோட்டார் சைக்கிளை ஓட்டினார். அப்போது வி.சாலை அகரம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிர்பாராத விதமாக லாரி மீது பைக் மோதியது. இதில் விபத்தில் பைக்கில் இருந்து சஞ்சய் மற்றும் சகாதேவன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் சகாதேவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். மேலும் சஞ்சய்க்கு வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த விக்கிரவாண்டி போலீசார் சகாதேவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திருக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் படுகாயமடைந்த சஞ்சய் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மகன் கண்முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வைஷ்ணவிக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
    • மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் வைஷ்ணவி கிடைக்கவில்லை.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால் அவரது மனைவி வைஷ்ணவி. (வயது 19). இவர்களுக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. கடந்த மாதம் 20-ந் தேதி வைஷ்ணவியின் தந்தை இறந்து போனார். இதற்காக வைஷ்ணவி பெரிய காட்டுபாளையம் கிராமத்துக்கு சென்றார்.

    அதன்பின்னர் அவர் மாளிகம்பட்டு கிராமத்துக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் வைஷ்ணவி அங்கு செல்லவில்லை. அதிர்ச்சி அடைந்த நந்தகோபால் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் வைஷ்ணவி கிடைக்கவில்லை. இதுகுறித்து நந்தகோபால் காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குபதிவு செய்து வைஷ்ணவி என்ன ஆனார் எங்கு சென்றார் கடத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×