என் மலர்
நீங்கள் தேடியது "ஷ்ரேயாஸ் அய்யர்"
- இந்த 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக ஷ்ரேயஸ் ஐயர் உள்ளார்.
- ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.
வங்காள தேசம் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் - சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. 20 ரன்னில் சுப்மன் கில்லும் 22 ரன்னில் ராகுல் வெளியேற அடுத்து வந்த விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில் புஜாரா-ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தனர். தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் வெளுத்து வாங்கிய ரிசப் பண்ட் 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்த போது 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 46 (45) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அவருக்குப் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நங்கூரமாக நின்று புஜாராவுடன் சேர்ந்து இந்தியாவை வலுப்படுத்தும் முயற்சியில் விளையாடி வருகிறார்.
தற்போது 5-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ள இந்த ஜோடியில் ஷ்ரேயஸ் ஐயர் 41* (77) ரன்களும் புஜாரா 42* (116) ரன்களும் எடுத்திருந்த போது முதல் நாள் தேநீர் இடைவெளி வந்தது. அப்போது இந்தியா 174/4 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கான்பூர் போட்டியில் அறிமுகமான ஷ்ரேயஸ் ஐயர் முதல் போட்டியில் சதமடித்து 105 ரன்கள் விளாசி அசத்தார். அதன் பின் 65, 18, 14, 27, 92, 67, 15, 19, 41* என தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய அளவில் சொதப்பாமல் குறைந்தபட்சம் இரட்டை இலக்க ரன்களை எடுத்து வருகிறார்.
இதன் மூலம் 90 வருட வரலாற்றை கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் இரட்டை இலக்க ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் ஷ்ரேயஸ் ஐயர் படைத்துள்ளார்.
இதற்கு முன் சச்சின் முதல் டோனி உட்பட வரலாற்றின் அத்தனை இந்திய பேட்ஸ்மேன்களும் தங்களுடைய முதல் 10 டெஸ்ட் இன்னிங்ஸில் தொடர்ந்து இரட்டை இலக்க ரன்களை பதிவு செய்ததில்லை. மேலும் என்ன தான் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறும் பலவீனம் இவரிடம் இருந்தாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.
அதன் காரணமாகவே அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இந்த 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ள ஷ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை நட்சத்திர வருங்கால வீரராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.
- டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவது பாராட்ட கூடிய விஷயம் தான்.
- சுழல் பந்து வீச்சாளர்களின் ஓவரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
வங்காள தேசம் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அணியை ஆபத்தான நிலையில் இருந்து வெளியேற்றியுள்ளனர். அவர்களது பார்ட்னெர்ஷிப் இந்திய அணிக்கு புதிய பலத்தை கொடுத்துள்ளது.
முதல் நாள் முடிவில் 90 ஓவர் விளையாடிய இந்திய அணி 278 ரன்களை அடித்த நிலையில் 6 விக்கெட்டை இழந்தது. புஜாரா 90, ஸ்ரேயாஸ் 82*, ரிஷாப் பண்ட் 46, கே.எல்.ராகுல் 22, சுப்மன் கில் 20 ரன்களை அடித்திருந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான விளையாட்டு இந்திய அணியை ஆபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சர்வதேச போட்டிகளில் மிகவும் குறைவான போட்டிகளில் விளையாடி கொண்டு வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர். இருந்தாலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவது பாராட்ட கூடிய விஷயம் தான். உண்மையை சொல்ல வேன்றுமென்றால், இந்திய கிரிக்கெட் அணியை ஆபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அவரது (ஸ்ரேயாஸ் ஐயர்) விளையாட்டு உண்மையிலும் சிறப்பான ஒன்று தான். அதில் சந்தேகம் வேண்டாம். அதிலும் குறிப்பாக சுழல் பந்து வீச்சாளர்களின் ஓவரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதுகு வலி காரணமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார்.
- ஷ்ரேயாஸ் அய்யருக்குப் பதில் ரஜத் பட்டிதார் அணியில் இடம்பிடித்துள்ளார்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் நாளை நடக்கிறது.
இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதுகு வலி காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் பங்கேற்க மாட்டார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார். ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக ரஜத் பட்டிதார் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.
ஷ்ரேயாஸ் அய்யருக்குப் பதில் அணியில் இடம்பிடித்துள்ள பட்டிதார் (வயது 29) இன்னும் சர்வதேச போட்டியில் அறிமுகமாகவில்லை. கடந்த டிசம்பர் மாதம் வங்காளதேசத்தில் நடந்த ஒருநாள் தொடருக்கான அணியில் பட்டிதார் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் விளையாடவில்லை. அவர் 51 முதல் தர போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 1648 ரன்கள் சேர்த்துள்ளா. 34.33 சராசரி, 97.45 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.
- முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அய்யர் விலகியிருந்தார்.
- 2-வது டெஸ்டில் அவர் இடம் பெறுவது அவரது உடற்தகுதி அறிக்கைக்கு உட்பட்டது என இந்திய வாரியத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறும். இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்த மாதம் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடமாட்டார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலக வேண்டியிருந்தது. மேலும் அவரது மறுவாழ்வுக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
அவரது காயம் எதிர்பார்த்தபடி குணமடையவில்லை. மேலும் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும். அவர் நிச்சயமாக முதல் டெஸ்ட்டில் விளையாட முடியாது. இரண்டாவது டெஸ்டில் அவர் இடம் பெறுவது அவரது உடற்தகுதி அறிக்கைக்கு உட்பட்டது என்று இந்திய வாரியத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக டி20 கிரிக்கெட்டின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் விளையாட வாய்ப்பு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
- முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
- 2-வது டெஸ்ட் போட்டி இந்த மாதம் 17-ம் தேதி டெல்லியில் தொடங்க உள்ளது.
புதுடெல்லி:
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இந்த மாதம் 17-ம் தேதி டெல்லியில் தொடங்க உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடவில்லை.
இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் அய்யர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார்.
பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற அவருக்கு காயம் குணமடையாததால் முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஷ்ரேயஸ் அய்யர் இடம் பிடித்துள்ளார். உடற்தகுதிக்கு தேர்வானதை அடுத்து அவருக்கு பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.
2வது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற வீரர்களின் விவரம் வருமாறு:
ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஆர்.அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் சூர்யகுமார் யாதவ்.
- ஷ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய சில வாரங்கள் ஆகும் என்று தெரிகிறது.
- 31-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆடுவது சந்தேகம்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் அய்யர் முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக ஆமதாபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் 4-வது நாளில் பேட்டிங் செய்யாமல் போட்டியில் இருந்து விலகினார்.
அவருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. டாக்டர்களின் அறிக்கை விவரம் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே முதுகு வலி பிரச்சினையால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை தவற விட்டு இருந்த ஷ்ரேயாஸ் அய்யர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ குழுவினரின் ஆலோசனைப்படி காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஷ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய சில வாரங்கள் ஆகும் என்று தெரிகிறது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர் விலகி உள்ளார்.
அத்துடன் வருகிற 31-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆடுவது சந்தேகம் தான். ஷ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.
- காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகி உள்ளார்.
- இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 3-வது நாளன்று மிடில் ஆர்டரில் களமிறங்க வேண்டிய ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி வரையில் களமிறங்கவில்லை.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 3-வது நாளன்று இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, மிடில் ஆர்டரில் களமிறங்க வேண்டிய ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி வரையில் களமிறங்க வரவேயில்லை.
முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர், 4-வது நாள் ஆட்டத்திலும், 5-வது நாள் போட்டியிலும் விளையாடமாட்டார் என்று அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது தொடர் முடிந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர், வரும் 17-ம் தேதி நடக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.
இதுவரையில் ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக யாரும் அறிவிக்கப்படாத நிலையில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் இடம் பெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
- இது உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
- அவர் காயத்தில் இருந்து மீண்டு அணியில் இணைந்து விட்டால் எங்களுக்கு அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை.
மும்பை:
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மேலும் முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆடவில்லை. 4-வது டெஸ்ட் போட்டியின் போது முதுகுவலி காரணமாக அவர் களம் இறங்கவில்லை. இதன் காரணமாகவே ஒருநாள் தொடரில் இருந்தும் அவர் விலகி உள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் எப்போது அணிக்கு திரும்புவார் என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் இல்லாதது உலக கோப்பைக்கான இந்திய அணியை தயார் செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
முதுகில் ஏற்பட்ட காயத்தால் நான் நீண்ட நாட்கள் அவதிப்பட்டேன். இதன் காரணமாக இந்திய அணியில் நீண்ட நாட்கள் என்னால் இடம்பெற முடியாமல் போனது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் இல்லாதது கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் காயத்தில் இருந்து மீண்டு அணியில் இணைந்து விட்டால் எங்களுக்கு அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை.
ஆனால் அவர் அணியில் இடம்பெற முடியாவிட்டால் அந்த தருணத்தில் என்ன செய்ய போகிறோம் என்பது குறித்து அவர் சிந்திக்க வேண்டும்.
முதுகு வலியினால் அணியில் இடம்பெறாமல் இருக்கும் நட்சத்திர வேகப்பந்து வீரர் உலக கோப்பைக்கு தேர்வு செய்வார் என்று நம்புகிறேன். அவர் அணியில் இடம்பெறாதது அணிக்கு பின்னடைவாக இருந்தாலும் மற்ற பந்து வீச்சாளர்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்துகின்றனர்.
இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
- நீங்கள் நான் எவ்வளவு புல் ஷாட்களை அடித்துள்ளேன் என்பதை பார்த்திருக்கிறீர்களா.
- பொதுவாகவே அனைத்து வீரர்களும் எந்த வகையான பந்திலும் அவுட்டாவார்கள்.
மும்பை:
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் அசத்தினாலும் ரபாடா, ஜான்சன் போன்ற தரமான ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசக்கூடிய பவுலர்களை கொண்ட தென்னாப்பிரிக்காவை சமாளிக்க என்ன திட்டத்தை வைத்திருக்கிறீர்கள்? என்று ஆட்டத்தின் முடிவில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில் பின்வருமாறு;-
ஷார்ட் பிட்ச் பந்துகள் என்னை திணறடிக்கிறதா? நீங்கள் நான் எவ்வளவு புல் ஷாட்களை அடித்துள்ளேன் என்பதை பார்த்திருக்கிறீர்களா. குறிப்பாக அதில் எத்தனை பந்துகள் பவுண்டரிக்கு சென்றன என்பதை பார்த்தீர்களா? பொதுவாக ஷார்ட் பிட்ச் அல்லது ஓவர் பிட்ச் பந்துகளாக இருந்தாலும் நீங்கள் சரியாக அடிக்கவில்லை என்றால் அவுட்டாவீர்கள்.
ஆனால் அதில் நான் 2, 3 முறை அவுட்டானால் உடனடியாக இவருக்கு இன்ஸ்விங் பந்துகளை அடிக்க தெரியாது, பந்து வேகமாக வந்தால் கட் ஷாட் அடிக்கத் திணறுவார் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். பொதுவாகவே அனைத்து வீரர்களும் எந்த வகையான பந்திலும் அவுட்டாவார்கள். ஆனால் நீங்கள்தான் அவரால் ஷார்ட் பிட்ச் பந்துகளை அடிக்க முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கி விடுகிறீர்கள்
என்று கூறியுள்ளார்.
இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 5-ம் தேதி தென் ஆப்பிரிக்கா உடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அரையிறுதியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
- இந்தத் தொடரில் இரண்டு சதங்கள் அடித்து முத்திரை பதித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்றும் வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் அரையிறுதி ஆட்டங்கள் முடிவடைந்தன. நாளைமறுதினம் (19-ந்தேதி) குஜராத் மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்திய அணியில் 4-வது வீரராக களம் இறங்கி விளையாடி வரும் ஷ்ரேயாஸ் அய்யர் கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசி லீக் ஆட்டத்தில் சதம், அரையிறுதியில் சதம் என அசத்தியுள்ளார்.
இறுதிப் போட்டி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ''நான் மும்பை வான்கடே மைதானத்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நண்பர்களுடன் சென்று நேரில் பார்த்து ரசித்தேன். அப்போது என் நண்பர்களிடம் நானும் ஒருநாள் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று கூறினேன். தற்போது இந்திய அணியில் இடம் பிடித்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறேன். இதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. இது மிகப்பெரிய பெருமை'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
- ஷ்ரேயாஸ் அய்யர் 530 ரன்கள் அடித்துள்ளார்.
- அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்தியா சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. ரோகித் அதிரடியாக விளையாடி 47 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி, கே.எல். ராகுல் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
முக்கியமான போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கைக்கொடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் இவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் 4-வது இடத்தில் களம் இறங்கி இரண்டு சதங்களுடன் அபாரமாக விளையாடினீர்கள். 530 ரன்கள் குவித்துள்ளீர்கள். ரோகித் சர்மா 31 சிக்சர்கள் அடித்துள்ள நிலையில், நீங்கள் 24 சிக்சர்கள் அடித்துள்ளீர்கள். எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு என "Iyer" ஹேஷ்டேக் டிரெண்டாக்கி எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
- முதல் மூன்று போட்டிகளில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
முதல் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாத்திலும், 2-வது போட்டியில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் வேட்கையில் ஆஸ்திரேலியா உள்ளது.
கடந்த 3 போட்டியில் விளையாடாத ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய 2 ஆட்டத்திலும் விளையாடுகிறார். துணை கேப்டனாக பணியாற்றும் அவரது வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுழற்பந்து வீரர் ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஷ்ரேயாஸ் அய்யரின் வருகை கடைசி 2 போட்டிகளில் பேட்டிங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் சிறந்த நிலையில் இருக்கிறார். அணியில் உள்ள மூத்த வீரர்களில் ஒருவரான அவரின் அனுபவம் எங்களுக்கு உதவியாக இருக்கும். உலகக் கோப்பையில் அவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கேப்டன் பதவியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுகிறார். வீரர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறார்.
இவ்வாறு பிஷ்னோய் கூறியுள்ளார்.
23 வயதான பிஷ்னோய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். 19 ஆட்டத்தில் 31 விக்கெட் சாய்த்துள்ளார். 16 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும். இந்த தொடரில் அவர் 3 போட்டியில் 6 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.