search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ெரயில் தாமதம்"

    • விழுப்புரம்-திருப்பதி ெரயில் ஒரு மணி நேரம் தாமதம்
    • இடம் பிடிக்க முண்டியடித்து ஏறினர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ் மற்றும் ரெயில் மூலம் திருவண்ணா மலையில் குவிந்தனர்.

    நேற்று காலை முதல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    இதையடுத்து சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லாததால் அவதி அடைந்தனர்.பஸ்சில் உட்கார இடம் கிடைக்காததால் நின்று கொண்டே பயணம் செய்தனர்.

    இதனால் சொந்த ஊருக்கு ரெயிலில் செல்ல முடிவு செய்த பக்தர்கள் திருவண்ணாமலை ெரயில் நிலையத்தில் குவிந்தனர். இன்று அதிகாலை விழுப்புரத்திலிருந்து திருப்பதி நோக்கி செல்லும் பயணிகள் ரெயிலுக்காக காத்துக் கொண்டு இருந்தனர்.

    நேரம் செல்ல செல்ல ரெயில் நிலையத்தில் பக்தர்களின் கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது. சரியாக 6.30 மணிக்கு வரவேண்டிய விழுப்புரம் திருப்பதி பயணிகள் ெரயில் 7.45 மணிக்கு 1 மணி நேரம் தாமதமாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    அங்கு கூடியிருந்த பக்தர்கள் ரெயிலில் இடம் பிடிப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு ஏற முயன்றதால் அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    ஏற்கனவே கிரிவலப் பாதையில் நடந்து சென்று வந்த களைப்பில் இருந்த பக்தர்கள் இதனால் மிகுந்த சிரமம் அடைந்தனர். நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக வந்ததாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×