என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஈரோடு மாநகரில்"
- ஈரோடு மாநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
- ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கா னவர்கள் தங்கி பல்வேறு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பிறப்பு போன்ற விசேஷ நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நேரங்களில் ஈரோட்டில் தங்கி இருக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்த வர்கள் குடும்பத்து டன் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவது வழக்கம்.
இந்த நேரத்தில் ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் இன்று தமிழ் புத்தாண்டு மற்றும் அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் ஈரோட்டில் உள்ள வெளி மாவட்ட மக்கள் நேற்று இரவே சொந்த ஊருக்கு செல்ல தொடங்கினர்.
இதன் காரணமாக நேற்று மாலை முதல் இரவு வரை ஈரோடு மாநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
குறிப்பாக ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை மக்கள் கூட்டம் அலை மோதியது. சேலம், கோவை செல்லும் பஸ்களில் வழக்க த்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
இதேபோல் மதுரை, நெல்லை செல்லும் பஸ் நிலையங்ளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. தற்போது பள்ளிகளில் விடுமுறை விடப்பட்டுள்ளதால் குடும்பத்தி னருடன் பஸ் நிலைய ங்களில் பொது மக்கள் வந்திருந்தனர்.
இதேப்போல் ஈரோடு ரெயில் நிலையத்திலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது. அனைத்து ெரயில்களிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் நிரம்பி விட்டன. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க மக்கள் போட்டா போட்டி போட்டனர்.
குறிப்பாக கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூட்டம் கட்டு க்கடங்காமல் இருந்தது.
இதன் காரணமாக நேற்று மாலை முதல் ஈரோடு மேட்டூர் ரோடு, காளை மாட்டுசிலை, ஸ்வஸ்திக் கார்னர், பன்னீர்செல்வம் பூங்கா பகுதிகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல் பல்வேறு வெளி மாவட்டங்களில் பணி புரியும் ஈரோட்டை சேர்ந்த வர்களும் தொடர் விடுமுறை காரணமாக ஈரோட்டிற்கு தங்களது குடும்பத்துடன் வர தொடங்கியுள்ளனர்.
இன்று காலையும் ஈரோடு ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
- குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
- பணிகள் நடைபெறும் இடங்களில் மட்டும் போக்குவரத்து மாற்றம் மற்றும் மின்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி பகுதியில் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்வதற்காக ரூ.484 கோடி செலவில் ஊராட்சிக் கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதற்காக பவானி அருகே ஊராட்சிக்கோட்டை வரதநல்லூரில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரித்து ஈரோட்டுக்கு குழாய் மூலமாக கொண்டு வரப்படுகிறது.
சூரியம்பாளையத்தில் 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும், வ.உ.சி. பூங்காவில் 118 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும் என 2 பிரமாண்ட தரைமட்ட தொட்டிகளில் தண்ணீர் விடப்படுகிறது.
அங்கிருந்து 67 மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வீடுகளுக்கு இணைக்கப்பட்ட குழாய்கள் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டம் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.
மேலும் ஈரோடு மாநகரில் சில பகுதிகளில் குடிநீர் இணைப்பு செய்யும் பணி முழுமையாக நிறைவடையவில்லை. எனவே அந்த பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பணிகள் நடைபெறும் இடங்களில் மட்டும் போக்குவரத்து மாற்றம் மற்றும் மின்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
முதல்நாளான இன்று அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் பணிகள் நடைபெற்று வருகின்றது. நாளை 21-ந் தேதி வாசுகி முதல் வீதி, வாசுகி வீதி, நாச்சியப்பா வீதி, தெப்பக்குளம் வீதி ஆகிய பகுதிகளிலும் நடைபெற உள்ளது.
இதேபோல 22-ந் தேதி பாவாடை வீதியில் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறுகிறது. 23-ந் தேதி பவர் ஹவுஸ்ரோடு, 24-ந் தேதி ஈரோடு மூலனூர்ரோடு சோலார் ரவுண்டானா பகுதியில் நடைபெறுகிறது.
இதனையடுத்து 26-ந் தேதி ஈரோடு-கரூர்ரோடு எச்.பி.பெட்ரோல் பங்க் பகுதி, 27-ந் தேதி குறிக்காரன்பாளையம் பஸ் நிறுத்தம், 28-ந் தேதி பூந்துறைரோடு கல்யாண சுந்தரம் வீதி, கல்யாண சுந்தரம் முதல் வீதி, 2-வது வீதி, 29-ந் தேதி கல்யாண சுந்தரம் 3-வது வீதி ஆகிய பகுதிகளில் பணிகள் நடக்கிறது.
இதேபோல் 30-ந் தேதி பூந்துறைரோடு நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகல், டாலர்ஸ் காலனி வீட்டுவசதி வாரியம், பிரப்ரோடு கலைமகள் பள்ளி சாலை, வாமலை வீதி, எஸ்.கே.சி.ரோடு பிரிவு, முத்து வேலப்பா வீதி ஆகிய பகுதி களிலும் நடைபெறுகிறது.
மேலும் 31-ந் தேதி மற்றும் 2-ந் தேதி ரங்கம் பாளையம் ரெயில்வே பாலம் அருகில், 3-ந் தேதி ஈரோடு அரசு மருத்துவமனை பின்புற சாலை, சென்னிமலைரோடு முத்தம்பாளையம், சுவஸ்திக் ரவுண்டானா அருகில் வ.உ.சி.பூங்கா சாலை ஆகிய பகுதிகளிலும், 8-ந் தேதி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள சம்பத்நகர் சாலையிலும் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறினர்.
- ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சேரும் மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.
- வழக்கமான நாட்களில் 70 டன் வரை குப்பைகள் சேரும் நிலையில் இந்த 2 நாட்களில் மட்டும் 190 டன் வரை குப்பைகள் சேர்ந்துள்ளன.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சேரும் மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.
இவ்வாறு மாநகர் பகுதியில் நாள் ஒன்றுக்கு 70 முதல் 75 டன் வரை குப்பைகள் சேருகின்றன. இவற்றை தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையடுத்து மாநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். இதனால் கடந்த 24 மற்றும் 25ஆம் தேதி ஆகிய 2 நாட்களில் மாநகர் பகுதியில் பட்டாசு கழிவுகள் மலை போல் குவிந்தன.
இந்த பட்டாசு குப்பை கழிவுகளை அகற்ற நான்கு மண்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். வழக்கமான நாட்களில் 70 டன் வரை குப்பைகள் சேரும் நிலையில் இந்த 2 நாட்களில் மட்டும் 190 டன் வரை குப்பைகள் சேர்ந்துள்ளன. அதனை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி உள்ளனர்.
- தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இந்த கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
- இதன்படி மாநகரில் மக்கள் கூடும் 6 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஈரோடு:
தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதையடுத்து பொதுமக்கள் தற்போதே புத்தாடைகள்-நகைகள் வாங்க கடை வீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஈரோடு மாநகரில் பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை சாலையின் இருப்புறமும் ஏராளமான ஜவுளி கடை கள் உள்ளன. இதேபோல் ஆர்.கே.வி. ரோடு பகுதி களில் ஏராளமான நகை கடைகள் உள்ளன. ஈஸ்வ ரன் கோவில் வீதிகளிலும் ஜவுளி கடைகள் உள்ளன.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இந்த கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
கூட்டத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து நகை, பணத்தை திருடும் கும்பல் கைவரிசை காட்ட கூடும் என்பதால் மாவட்ட போலீஸ் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி மாநகரில் மக்கள் கூடும் 6 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி மணிக்கூண்டு பகுதி, கிருஷ்ணா தியேட்டர் பகுதி, பன்னீர்செல்வம் பார்க், காளை மாடு சிலை, முனிசிபால் காலனி பகுதி, பஸ் நிலையம் ஆகிய 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த கண்காணிப்பு கோபுரங்களில் சி.சி.டி.வி. கேமிராவும் பொருத்த ப்பட்டு கண்காணி க்கப்படுகிறது. இங்கு 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பணியாற்று வார்கள். கூட்டங்களை கண்காணி த்தல், பொதுமக்கள் நடவடிக்கையை துல்லி யமாக இந்த கண்காணிப்பு கேமிராக்கள் பதிவு செய்யும்.
இதேப்போல் கிருஷ்ணா தியேட்டர் பகுதி, பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் பெரிய அளவில் எல்.இ.டி. டிஜிட்டல் திரை அமைத்து விழிப்புணர்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்