என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஊழல் குற்றச்சாட்டு"
- கடந்த ஆண்டு இரண்டு மாதங்களாக திடீரென மாயமானார்.
- மக்கள் பார்வையில் தென்படாத நிலையில், பாதுகாப்பு மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
சீனாவின் முன்னாள் பாதுகாப்பு மந்திரி லி ஷாங்க்ஃபு. இவர் கடந்த ஆண்டு திடீரென மாயமானார். இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் பார்வையில் தென்படாத நிலயைில், பாதுகாப்பு மந்திரி பதவியில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லி ஷாங்க்ஃபு நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. அவர் மீது ஊழல் மற்றும் லஞ்சம் குற்றச்சாட்டு உள்ள நிலையில், அது தொடர்பாக விசாரணை நடைபெற்ற வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ரஷிய பாதுகாப்பு துறையில் இயக்குனரக தலைவராக பணியாற்றி வருபவர் லெப்டினன்ட் ஜெனரல் யூரி குஸ்னெட்சோவ்
- வீடு மற்றும் தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
மாஸ்கோ:
ரஷிய பாதுகாப்பு துறையில் இயக்குனரக தலைவராக பணியாற்றி வருபவர் லெப்டினன்ட் ஜெனரல் யூரி குஸ்னெட்சோவ். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த பதவி வகித்து வரும் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
இதற்கிடையே அவரது வீடு மற்றும் தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் சுமார் ரூ.8 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. பாதுகாப்பு துறை மந்திரி ஷெர்ஜி ஷோய்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது அதிரடியாக அந்த துறை உயர் அதிகாரி கைது செய்யப்பட்டு இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வூங் டின் ஹியூ மீது அதிகார துஷ்பிரயோகம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
- உதவியாளர் பாம் தாய் ஹா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
ஹனோய்:
அண்டை நாடான வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகராக வூங் டின் ஹியூ (வயது 67) இருந்து வருகிறார்.
இவர் மீது அதிகார துஷ்பிரயோகம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதற்கிடையே அவரது உதவியாளர் பாம் தாய் ஹா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் தற்போது வூங் டின் ஹியூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது அங்குள்ள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அதிபர் முய்சுவின் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு நடந்த பணப் பரிமாற்றங்களில் முறைகேடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சீன ஆதரவாளரான முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
மாலே:
மாலத்தீவு அதிபராக முகமது முய்சு உள்ளார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முகமது முய்சு கடந்த 2018-ம் ஆண்டு ஊழலில் ஈடுபட்டதாக, நிதி புலனாய்வு அமைப்பு மற்றும் மாலத்தீவு காவல்துறை தயாரித்ததாக கூறப்படும் அறிக்கை சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் அதிபர் முய்சுவின் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு நடந்த பணப் பரிமாற்றங்களில் முறைகேடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி முறைகேடுகளில் 10 முக்கியமான குற்றச்சாட்டுகள் உள்ளன.
அரசியல் ரீதியான நபர்களுடன் தொடர்பு, மோசடி, நிதி ஆதாரத்தை மறைக்க கார்ப்பரேட் நிறுவனங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாலத்தீவில் வருகிற 21-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதிபர் முய்சுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயக கட்சி மற்றும் மக்கள் தேசிய முன்னணி வலியுறுத்தி உள்ளன.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அதிபர் முகமது முய்சு மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,
கடந்த 5 ஆண்டுகள் எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியில் இருந்தன. நான் தவறு செய்திருந்தால் அப்போதே வெளியாகி இருக்கும். என் மீது எந்த தவறையும் அவர்களால் கூற முடியாது. முன்பு மேயர் மற்றும் அதிபர் தேர்தலின் போதும் இதே குற்றச்சாட்டை கிளப்பினர். இதை எவ்வளவு காலத்திற்கு பேசினாலும், என் மீது பழி சுமத்த உங்களால் முடியாது என்றார்.
சீன ஆதரவாளரான முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- சூ கிக்கு இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன.
மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி. மியான்மரில் கடந்த 2020 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியை பிடித்தது.
என்றாலும் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
அவர் மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, அலுவலக ரீதியான சட்டங்களை மீறியது, ஊழல் முறைகேடுகள் என வழக்குகள் தொடரப்பட்டன.
இது தொடர்பான விசாரணை மியான்மர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த டிசம்பரில் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், பிறகு பல்வேறு வழக்குகளில் 17 ஆண்டுகள் வரை தண்டனையை நீட்டித்தது.
தொடர்ந்து, தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சூ கிக்கு இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், சூகி மீதான வேறு வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. இதில், இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது. இதில் இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை 26ஆக நீடித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்