search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் அச்சம்"

    • ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் பாம்புகள் நடமாட்டத்தால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • தெருவிளக்கு அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் உள்ளது. இந்த மருத்துவ கல்லூரியில் ராமநாதபுரம் அரசு மருத் துவ கல்லூரி மாணவர்கள், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் படிக் கின்றனர்.

    இவர்கள் அனைவரும் இங்குள்ள விடுதியில் தங்கி உள்ளனர். இவர்கள் கல்லூரிக்கு வரும் சாலை யில் இரவு நேரத்தில் தெரு விளக்குகள் எரிவதில்லை. கல்லூரியை ஒட்டி உள்ள பகுதிகள் புதர்கள் நிறைந்த பகுதியாக காட்சி அளிக்கி றது.

    இதனால் அடிக்கடி பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

    நேற்று முன்தினம் மருத்துவ கல்லூரி சாலை யில் 2 பாம்புகள் சென்ற தால் மாணவர்கள் அச்ச மடைந்தனர். சில நாட்க ளுக்கு முன் கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு சென்றுள்ளது. மருத்துவ கல்லூரி பகுதியில் பாம்பு கள் படையெடுக்கும் நிலை ள்ளது.

    மேலும் விஷ பாம்பு மற்றும் ஜந்துகளால் மாண வர்களுக்கு ஆபத்து உள் ளது. அதிகாலையில் இப் பகுதியில் நடை பயிற்சி செய்வோரும் அச்சமடைந் துள்ளனர். அப்பகுதியில் மாணவர்கள் அச்சமின்றி சென்று வர தெரு விளக்கு கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். மருத்துவ கல்லூ ரிக்கு செல்லும் சாலை முழுவதும் விளக்குகள் அமைத்து உயிர் காக்கும் மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மாண வர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் சிதிலமடைந்த மேற்கூரை பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து மாணவர்கள் மீது விழுவதாக புகார் எழுந்துள்ளது
    • ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரையும் ஒரே வகுப்பாறையில் அமர வைத்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவித்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிலால் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.

    கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 56 மாணவிகளும், 35 மாணவர்களும் என மொத்தம் 91 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் நான்கு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாகவே பள்ளியின் வகுப்பறையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் அடிக்கடி கீழே பெயர்ந்து விழுந்து வருகிறது.

    மேலும் பள்ளியைச் சுற்றி குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளதோடு, அதில் கொசுக்கள் உற்பத்தியாக பல்வேறு தொற்று நோய்களுக்கும் வழிவகுக்கிறது.

    இது குறித்து பள்ளி நிர்வாகம் சட்டமன்ற உறுப்பினர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்தும், நேரில் சென்று தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில்உள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.

    மேலும் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக பள்ளியின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் மீண்டும் உதிர்ந்து விழுந்துள்ளது. மேலும் அனைத்து வகுப்பறைகளிலும் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது.

    அதனால் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறையில் தண்ணீர் தேங்கி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    வகுப்பறையில் தேங்கியிருந்த தண்ணீரை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் சேர்ந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரையும் ஒரே வகுப்பாறையில் அமர வைத்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவித்தனர்.

    மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் போர்க்கால அடிப்படையில் பள்ளியின் மேற்கூரை பூச்சுகள் கீழே விழாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் மீது சிமெண்டு பூச்சு உடைந்து விழும் நிலையும் உள்ளதால் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் பள்ளியில் கட்டிடம் பெரும் அளவில் சேதம் அடைந்து உள்ளதால் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    • பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    சிவகங்கை 

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வேங்கைபட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 142 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி வளாகத்தில் உள்ள 3 கட்டிங்களில் ஒன்று பழுதடைந்துள்ளது. அங்கு யாரும் உள்ளே செல்லாதபடி எச்ச ரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் அருகே உள்ள மற்ற 2 கட்டிடங்களிலும் 8-ம் வகுப்பு மற்றும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலண்டு விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் தொடங்கிய நிலையில் பள்ளியை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர் அந்த கட்டிட அறைகளை திறந்தபோது ஆசிரியர் இருக்கைக்கு மேலே இருந்த மேற்கூரை இடிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சிவராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜூ ஆகி யோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதுகுறித்து அந்தப்ப குதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பள்ளி கட்டிடம் கட்டி சில ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால் அதற்குள் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. தரமற்ற முறையில் கட்டிடங்களை கட்டியுள்ளனர். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. தரமில்லாமல் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் போன்ற அனைத்தும் கட்டிடங்களும் உள்ளது.

    இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதை பார்க்கும் போது பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப அச்சமாக உள்ளது. எனவே வரும் காலங்களில் தரமான கட்டிடங்களை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர். பள்ளி கட்டிடத்தின் நிலைமை மோசமாக இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர தயக்கம் காட்டி வருகின்றனர்.

    ×