என் மலர்
நீங்கள் தேடியது "Cyber crime police alert"
- சைபர் குற்றங்களை தடுக்கும் பொருட்டும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- எப்படியெல்லாம் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், குற்றங்களில் இருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாது காத்துக்கொள்வது போன்ற தகவல்களை தெரிவித்தனர்.
சேலம்:
சைபர் குற்றங்களை தடுக்கும் பொருட்டும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சேலம் சைபர் கிரைம் கூடுதல் காவல் காவல் கண்காணிப்பாளர் செல்லபாண்டியன் மேற்பார்வையில் சேலம் மாநகர சைபர் கிரைம் இன்ஸ் பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் நேற்று தனியார் கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் ஆகியோர்களுக்கு சப்- இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், சக்திவேல், தேவிபிரியா செந்தில்குமார் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சைபர் கிரைம் குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகிறது.
எப்படியெல்லாம் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், குற்றங்களில் இருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாது காத்துக்கொள்வது போன்ற தகவல்களை தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சமூக வலைத்தளங்களில் அறிமுகமாகும் நபர்களிடம் தங்களது தனிப்பட்ட விபரங்களை பகிர வேண்டாம் எனவும், நண்பர்கள் பெயரில் போலி முகநூல் கணக்கு உருவாக்கி அதன் மூலம் பணம் கேட்டு வரும் செய்திகளை நம்ப வேண்டாம்.
தங்களுடைய செல்போன் சிம்கார்டுகள் 4 ஜி யில் இருந்து 5 ஜி க்கு மாற்றக்கோரி வரும் அழைப்புகளில் கவனமுடன் இருக்க வேண்டும். வங்கி கிரெடிட் கார்டு களின் கடன் வசதியை அதிகப்படுத்தி தரப்படுவதாக வரும் அழைப்புகளை நம்பி குருஞ்செய்தி எண்களை கொடுக்க வேண்டாம் எனவும் அறிவுத்தினர். மேலும் வங்கி கணக்கு சம்மந்தமாக வரும் எஸ்.எம்.எஸ். லிங்குகளில் சென்று தங்களது வங்கி விபரங்கள் பதிவு செய்ய வேண்டாம் வெளிநாட்டில் வேலை, குறைந்த நாட்களில் இரட்டிப்பு லாபம் போன்ற போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் கிரைம் போலீசுக்கு தொடர்புகொண்டால் உடனடியாக இழந்த பணத்தை மீட்டுத்தர முடியும் என தெரிவிக்கப்பட்டது.