search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க. கூட்டணி"

    • கமல்ஹாசன் சினிமா, அரசியல் ஆகிய இரண்டிலும் கால் பதித்து வருகிறார்.
    • கமல்ஹாசன் தி.மு.க.வுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறார்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சினிமா, அரசியல் ஆகிய இரண்டிலும் கால் பதித்து வருகிறார்.

    தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் மாற்றாக இருப்போம் என்று தேர்தல் களத்தில் பேசி வந்த கமல்ஹாசன் தற்போது தி.மு.க.வுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறார்.

    பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவதற்கு இடம் கிடைக்காத நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மேல்சபை எம்.பி. பதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி கமல்ஹாசன் விரைவில் மேல்சபை எம்.பி.யாக டெல்லி செல்ல உள்ளார்.

    தனித்து போட்டியிடுவது என்கிற முடிவில் இருந்து பின்வாங்கி இருக்கும் கமல்ஹாசன் இனி வரும் காலங்களிலும் தி.மு.க. கூட்டணியிலேயே இணைந்து செயல்பட திட்ட மிட்டுள்ளார்.

    டிசம்பர் மாதம் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களையும் தி.மு.க. கூட்டணியில் இருந்தே எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வேலைகளை அந்த கட்சியின் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    உள்ளாட்சித் தேர்தல் முதலில் வருவதால் தி.மு.க. கூட்டணியில் கணிசமான இடங்களை பெற்று போட்டியிடுவது என மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவு செய்திருக்கிறது.

    மாநகராட்சி நகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி இடங்களிலும் தங்களுக்கு செல்வாக்குள்ள பகுதிகளில் குறிப்பிடத்தக்க இடங்களை கேட்டு பெற்று அதில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் கமல்ஹாசன் காய் நகர்த்தி வருகிறார்.

    சினிமா படப்பிடிப்புகளில் தற்போது பங்கேற்று வரும் கமல்ஹாசன் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சென்னை வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

    இதன்படி டிசம்பர் மாதத்திற்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அவர் விரிவான ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    அதே போன்று2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் குறிப்பிடத்தக்க இடங்களை தி.மு.க. கூட்டணியில் கேட்டு பெற்று வெற்றி பெற வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யம் கட்சியினரின் கணக்காக உள்ளது.

    இதன் மூலம் நிச்சயம் சட்ட மன்றத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி காலடி எடுத்து வைக்கும் என்று அந்த கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • மாநில இளைஞரணி செய லாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் உத்தர வின் பேரில் குமரி கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் வருகிற 16-ந்தேதி சுசீந்திரம் செல்வம் திருமண மண்டபத் தில் காலை 9 மணிக்கும், குளச்சல் தொகுதிக்கு குளச் சல் எஸ்.எஸ்.ஆடிட்டோரி யத்தில் மாலை 4 மணிக்கும் திராவிட மாடல் பயிற்சி பாச றைக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • இதில் நிர்வாகிகள் அனைவரும் ஏராளமான இளைஞர் அணியினரை பங் கேற்கச் செய்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நாகர்கோவில், அக்.13-

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க.மாநகர, நகர, ஒன்றிய,பேரூர், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை நாகர் கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் எப்.எம். ராஜரெத்தினம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம். எல்.ஏ. ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகர செயலாளர் ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரைபா ரதி, பார்த்தசாரதி, பொதுக் குழு உறுப்பினர் ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், பாபு, செல்வம், பிராங்கிளின், சுரேந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் பேசும்போது கூறியதா வது:-

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றவேண்டும். தனித்து நின்றாலும் தி.மு.க. வெற்றி பெறும் அளவுக்கு உங்களின் அனைவரது உழைப்பும் இருக்க வேண்டும். கட்சி நிர் வாகிகளுக்குள் என்ன பிரச் சினை இருந்தாலும் அவற்றை எல்லாம் மறந்து கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்றார்.

    நடந்து முடிந்த கட்சியின் 15-வது பொதுத்தேர்தலில் கட்சித் தலைவராக 2-வது முறையாக தேர்ந் தெடுக்கப்பட்ட, திராவிட மாடல் தத்துவம் மூலமாக தமிழகத்தில் பொற் கால ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கும், தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனை களை ஏழை, எளிய மக்களை சென்றடையும் வகையில் மாவட்டம், ஒன்றியம், மாநக ரம், நகரம், பேரூர், ஊராட்சி மற்றும் கிளைக்கழக பகுதி களில் சாதனை விளக்க பொதுக்கூட்டம், தெரு முனை கூட்டங்கள், கவிய ரங்கம், பட்டிமன்றம் நடத்த வேண்டும்.

    மாநில இளைஞரணி செய லாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் உத்தர வின் பேரில் குமரி கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் வருகிற 16-ந்தேதி சுசீந்திரம் செல்வம் திருமண மண்டபத் தில் காலை 9 மணிக்கும், குளச்சல் தொகுதிக்கு குளச் சல் எஸ்.எஸ்.ஆடிட்டோரி யத்தில் மாலை 4 மணிக்கும் திராவிட மாடல் பயிற்சி பாச றைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் நிர்வாகிகள் அனைவரும் ஏராளமான இளைஞர் அணியினரை பங் கேற்கச் செய்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×