search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தரப்பு தொடர்"

    • அனைத்து அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் விளையாட வேண்டும்.
    • 3 அணிகளுக்கு இடையே முத்தரப்பு தொடர் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இந்தியா -பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறது. இரு அணிகளும் இருதரப்பு தொடரில் விளையாடுவது இல்லை.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரு தரப்பு தொடரை ஆஸ்திரேலியாவில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ஹாக்லி விருப்பம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது தொடர்பான முறையான ஆலோசனைகளை நடத்தவில்லை. ஆனால் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடருக்கு உதவுவதிலும், எளிதாக்குவதிலும் எங்களால் ஒரு பங்கை ஆற்ற முடிந்தால், அதைச் செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.

    அனைத்து அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் விளையாட வேண்டும் என்பதை உறுதி செய்வதே உலக கிரிக்கெட்டுக்கான சவால் என்று நான் நினைக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரில் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இறுதிப் போட்டிக்கு இரு அணிகள் முன்னேறும். அதுபோல ஒவ்வொரு தொடரிலும் இருக்க வேண்டும்.

    வெள்ளை பந்து தொடருக்கும் இதே போன்ற ஒன்று தேவை. தரவரிசை மற்றும் இதர வழிகள் முறையே உலகக் கோப்பைகளுக்கான தகுதி இருக்க வேண்டும்.

    மேலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். 3 அணிகளுக்கு இடையே முத்தரப்பு தொடர் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இறுதி முடிவு இரு கிரிக்கெட் வாரியங்களின் கையில்தான் உள்ளது.

    என்று நிக் ஹாக்லி கூறினார்.

    • நேபாள் நாட்டில் முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகிறது.
    • இந்த தொடரில் நேபாள், நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகிறது.

    நேபாள் நாட்டில் முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேபாள், நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகிறது. இதன் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நமீபியா - நேபாள் மோதின. இதில் டாஸ் வென்ற நமீபியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய நமீபியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லோஃப்டி ஈடன் 101 ரன்கள் குவித்தார். இதனையடுத்து களமிறங்கிய நேபாள் அணி 18.5 ஓவர்களில் 186 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக லோஃப்டி ஈடன் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த போட்டியில் அதிவேக சதம் அடித்து லோஃப்டி ஈடன் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவர் 33 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதில் 11 பவுண்டரி, 8 சிக்சர்கள் அடங்கும்.

    இதற்கு முன்னதாக 34 பந்துகளில் சதம் அடித்து கௌசல் மல்லா அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இவரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் (35 பந்துகள்) 2-வது இடத்திலும், ரோகித் சர்மா (35 பந்துகள்) 3-வது இடத்திலும் இடம் பெற்றிருந்தனர்.

    இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி, அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்தை ஈடன் பிடித்துள்ளார்.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 163 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகள் முத்தரப்பு தொடரில் பங்கேற்றன. லீக் சுற்றுகளின் முடிவில் முத்ல் இரு இடம்பெற்ற பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. கேன் வில்லியம்சன் 38 பந்தில் 59 ரன்கள் குவித்தார்.

    164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. மொகமது நவாஸ் 38 ரன்னும், மொகமது ரிஸ்வான் 34 ரன்னும் எடுத்தனர். ஹைதர் அலி அதிரடியாக ஆடி 31 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி முத்தரப்பு தொடர் கோப்பையை கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் விருது மொகமது நவாசுக்கும், தொடர் நாயகன் விருது மைக்கேல் பிரேஸ்வெல்லுக்கும் வழங்கப்பட்டது.

    • முத்தரப்பு தொடரில் வங்களா தேசம் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
    • முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் நாளை மோதுகிறது.

    முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காள தேச அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற வங்காள தேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்காள தேச அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    கேப்டன் சகீப் அல்ஹசன் மற்றும் தாஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் வங்காள தேசம் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா, முகமது வாசிம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரிஸ்வான் -பாபர் அசாம் ஜோடி நிதானமாக ஆடி அரை சதம் அடித்தனர். பாபர் 40 பந்துகளில் 55 ரன்களிலும் அடுத்து வந்த அலி 0 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனையடுத்து வந்த முகமது நவாஸ் -ரிஸ்வான் ஜோடி அதிரடியாக விளையாடினார். ரிஸ்வான் 69 ரன்னில் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய நவாஸ் 20 பந்துகளில் 45 ரன்கள் விளாசி அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். 19.5 ஓவரில் பாகிஸ்தான் அணி 177 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ரிஸ்வான் தேர்வு செய்யப்பட்டார்.

    நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதிய முத்தரப்பு தொடரில் வங்களா தேசம் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் நாளை மோதுகிறது.

    ×