search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோதிய விபத்தில்"

    • எதிரே வந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தன் மீது மோதியது.
    • இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தன் பலத்த காயமடைந்தார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள மகாசிபுதூர் ராமச்சந்திர புரத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (21). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் அம்மாபேட்டை- அந்தியூர் ரோட்டில் தோப்பு காட்டூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கோவிந்தன் மோட்டார் கைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தன் பலத்த காயமடைந்தார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே கோவிந்தன் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை முடிந்ததும் ஒரே மோட்டார் சைக்கிளில் அண்ணன், தம்பி 2 பேரும் வீட்டிற்கு சென்றனர்.
    • ஈரோடு-பவானி சாலை சுண்ணாம்பு ஓடை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டன.

    ஈரோடு:

    ஈரோடு ஆர்.என்.புதூர் பெருமாள் மலை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(44). இவரது தம்பி தேவராஜ்(41). இருவருக்கும் திருமணம் ஆகி அருகருகே வசித்து வருகின்றனர்.

    பன்னீர்செல்வம், தேவராஜ் 2 பேரும் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைலில் பேல் போடும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.

    2 பேரும் தினமும் ஒன்றாக மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வந்து பணி முடிந்ததும் மீண்டும் வீட்டுக்கு ஒன்றாக செல்வது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் வேலை முடிந்ததும் ஒரே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் வீட்டிற்கு சென்றனர். பன்னீா்செல்வம் வண்டியை ஓட்டி செல்ல தேவராஜ் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

    ஈரோடு-பவானி சாலை சுண்ணாம்பு ஓடை அருகே சென்றபோது முன்னால் சென்ற தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்த தங்கவேல் (40) என்பவரது மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முற்பட்டபோது, எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டன.

    இதில் நிலை தடுமாறி பன்னீர்செல்வம், தேவராஜ் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் தேவராஜ் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தார். பன்னீர்செல்வத்துக்கு வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டது. தங்கவேலுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம்பக்கத்தினர் பன்னீர்செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல்பாளையம் போலீசார் இறந்த தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கதிர்வேல் கருமாண்டம் பாளையத்தில் இருந்து ஈரோடு காளைமாடு சிலை அருகே தனியாருக்கு சொந்தமான பால் பண்ணைக்கு வந்து கொண்டிருந்தார்.
    • சோலார் புதூர் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சிமெண்ட் லாரியும், பால் வேனும் நேருக்குநேர் மோதி விபத்தானது.

    மொடக்குறிச்சி:

    கொடுமுடி பாசூர் அருகே உள்ள செங்கோடம்பா ளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் கதிர்வேல் (26). பால்வேனில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கதிர்வேல் கருமாண்டம் பாளையத்தில் இருந்து ஈரோடு காளைமாடு சிலை அருகே தனியாருக்கு சொந்தமான பால் பண்ணைக்கு வந்து கொண்டிருந்தார்.

    அவர் லக்காபுரம் பஞ்சாயத்து சோலார் புதூர் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே ஒரு சிமெண்ட் லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் சிமெண்ட் லாரியும், பால் வேனும் நேருக்குநேர் மோதி விபத்தானது.

    இந்த விபத்தில் பால் வண்டி உள்பக்கம் நசுங்கியதுடன் தூக்கி வீசப்பட்டு உருண்டு சாக்கடை கால்வாய் பகுதியில் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பால் வேன் டிரைவர் கதிர்வேல் வாகனத்திற்குள் இடிபாடுகளில் சிக்கி பலியானார்.

    சிமெண்ட் லாரியை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் (40) என்பவருக்கு கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி போலீசார் ஜேசிபி எந்திரம் உதவியுடன் வாகனத்தை மீட்டனர்.

    பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் கதிர்வேலை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×