என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விதி"
- கட்டிடத்தின் உயரத்தை அதிகரிக்க விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பது வரவேற்க கூடியது.
- தரையில் இருந்து சீலிங் வரை 10 அடியில் இருந்து 11.5 அடியாக உயர வாய்ப்பு உள்ளது.
சென்னை:
மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையானது, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் திருத்தம் செய்துள்ளது.
உயரம் இல்லாத கட்டிடங்களின் அதிக பட்ச அனுமதிக்கப்பட்ட கட்டிட உயரத்தை 14 மீட்டர் வரை உயர்த்தி உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்கு மிகாமல் உள்ள கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. தரைதளம் மற்றும் 3 தளத்துக்கு இதுவரையில் 12 மீட்டர் உயரம் அனுமதிக்கப்பட்டு இருந்தது. தற்போது 14 மீட்டர் வரை கட்டிடத்தின் உயரத்தை அதிகரித்து கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளது. அதே போல தரை தளம் மற்றும் 2 அடுக்குமாடி வீடுகளுக்கு 9 மீட்டர் உயரத்தில் இருந்து 10 மீட்டர் உயரம் வரை கட்டிக் கொள்ளலாம். 3 அடுக்கு மாடிகளுக்கு கட்டிடத்தின் உயரத்தை 6 அடி வரை உயர்த்தி கொள்வதன் மூலம் பல்வேறு வசதிகளை செய்து கொள்ள முடியும் என்று கட்டுமானர்கள் தெரிவிக்கின்றனர். ஏர்கண்டிஷன், பால் சீலிங் போன்ற வசதிகள் செய்வதற்கு தரையில் இருந்து கட்டிடத்தின் உயரத்தை உயர்த்த இது போதுமானதாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
இது புதிதாக வீடு கட்டுபவர்களுக்கும், சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு வாங்குபவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது என்று கட்டுமான சங்கத்தை சேர்ந்த ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தென்னக கட்டுமான சங்க தலைவர் மோகன் கூறியதாவது:-
கட்டிடத்தின் உயரத்தை அதிகரிக்க விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பது வரவேற்க கூடியது. இதன் மூலம் கார் பார்க்கிங் வசதி நேர்த்தியாக செய்து கொடுக்க முடியும். தரையில் இருந்து சீலிங் வரை 10 அடியில் இருந்து 11.5 அடியாக உயர வாய்ப்பு உள்ளது. இது சொந்த வீடு வாங்குவதற்கு உதவியாக இருக்கும் என்றார்.
மேலும் கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுவதிலும் விலக்கு அளிக்கப்படுகிறது. தற்போது 3 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டரக்கு மிகாமல் உள்ள கட்டி டங்களுக்கு சம்பந்தப்பட்ட ஒழுங்க முறை ஆணை யத்தின் நிறைவு சான்றி தழ்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் அளவு மாறாமல் இருந்தாலும் குடியிருப்புவீடுகள் 3-ல் இருந்து 8 வரை கட்ட அனுமதிக்கப்படுகிறது. மேலும் வீடு கட்டுபவர்கள் மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளை நிறைவு சான்றிதழை சமர்பிக்காமல் எளிதாக பெறவும் இந்த திருத்தங்கள் உதவுகிறது.
- 2 நபர்களுக்கு குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய் யப்பட்டது.
- 2 சிறுவர்கள் ஓட்டி வந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கன்னியாகுமரி:
குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து துறை மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் குளச்சல் காந்தி சந்திப்பில் வாகன சோதனை நடைபெற்றது.
இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த நபர்கள் நவீன கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டனர்.பரிசோதனையில் 2 நபர்களுக்கு குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய் யப்பட்டது. மேலும் 2 சிறுவர்கள் ஓட்டி வந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இவைதவிர 58 ஹெல்மெட் வழக்குகள், 3 செல்போன் வழக்குகள் உட்பட மொத்தம் 114 வாகன விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
- சப்-கலெக்டர் உத்தரவு
- தக்கலை சப்-கலெக்டரிடம் தக்கலை இன்ஸ்பெக்டர் மனு
கன்னியாகுமரி:
தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் என்ற வெடிகுண்டு ஆல்பர்ட் (வயது 49). பிரபல ரவுடியான இவர் மீது தக்கலை போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் அவர் ரவுடி பட்டியலில் உள்ளார். இவர் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்.
இதனையடுத்து இவர் மேலும் குற்ற செயலில் ஈடுபடாமல் இருக்க நன்னடத்தை சான்று பெற தக்கலை இன்ஸ்பெக்டர் மூலம் கல்குளம் தாசில்தார் வினோத் முன்னிலையில் ஆஜர்படுத்தி 1 வருடம் எந்த குற்ற செயலிலும் ஈடுபடாமல் நன்னடத்தையுடன் இருப்பேன் என பாண்டு பத்திரத்தில் கையொப்பம் இட்டு உறுதியளித்திருந்தார்.
இந்த உறுதியை மீறும் வகையில் மறு மாதமே போலி மதுபாட்டில் ஒரு வாகனத்தில் கடத்தி கொண்டு போகும் போது மார்த்தாண்டத்தில் வைத்து மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.பின்னர் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட் டார்.
இதனையடுத்து நன்ன டத்தை உறுதியை மீறி மீண்டும் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்ட ஆல்பர்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு தக்கலை சப்-கலெக்டரிடம் தக்கலை இன்ஸ்பெக்டர் மனு தாக்கல் செய்தார். சப்-கலெக்டர் விசாரணைக்கு பிறகு ஆல்பர்ட் குற்ற வழக்கில் ஈடுபட்டு நன்னடத்தையை மீறியது தெரியவந்துள்ளது.
எனவே 268 நாட்கள் ஆல்பர்ட்டை சிறையில் அடைக்க பத்மனாபபுரம் உட்கோட்ட நடுவரும் சப்-கலெக்டருமான கவுசிக் உத்தரவிட்டார்.
- மண்டபத்தில் உட்காருந்திருந்தவர்கள் வெளியே போய் மீண்டும் உள்ளே வந்திருக்கிறீர்கள்.
- உங்களில் போன தடவை உட்கார்ந்த அதே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் எத்தனை பேர்?
ஒரு ஞானி பிரகதீஸ்வரர் திருக்கோவிலுக்கு விஜயம் செய்தார்.
கல்மண்டபத்தின் வடக்கில், அவருக்காக மேடை அலங்கரிக்கப்பட்டது.
எதிரே ஆண்களும் பெண்களும் கணக்கிலடங்காது கூடியிருந்தனர்.
வேதங்கள் பற்றியும், புராணங்களைப் பற்றியும் விளக்கிக் கொண்டே வந்த ஞானியார் "யாரும் கேள்விகள் கேட்கலாம். பதில் சொல்லப்படும்" என்று தெரிவித்தார்.
யார் என்ன கேள்வி கேட்கப் போகிறார்கள் என்பதையே ஒவ்வொருவரும் ஆவலாக எதிர்பார்த்தார்கள்.
மண்டபத்தின் மேற்கு மூலையிலிருந்து ஓர் உருவம் மெதுவாக எழுந்து நின்றது.
சபையில் இருந்த எல்லோரும் அவரையே திரும்பிப் பார்த்தார்கள்.
தாங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்? என்று ஞானியார் கேட்டார்.
அவர் சொன்னார்:
சுவாமி! விதியையும் மதியையும் பற்றி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சர்ச்சைகள் தோன்றி முடிவுக்கு வராமல் முடிந்து இருக்கின்றன.
"விதியை மதியால் வெல்லலாம் என்றும், மதியை விதி வென்றுவிடும்" என்றும், இரண்டு கருத்துகள் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றன. எது முடிவானதோ சாமிக்கு தெரிந்தால் சொல்லுங்கள். "
கேள்வி பிறந்ததும், ஞானியார் லேசாகச் சிரித்தார்.
மண்டபத்தில் இருந்த எல்லோரையும் பார்த்து, "எல்லோரும் எழுந்து வெளியே செல்லுங்கள்; நான் கூப்பிட்ட பிறகு வாருங்கள்" என்றார்.
மண்டபம் காலியாயிற்று.
இரண்டு நிமிஷங்கள் கழித்து, "எல்லோரும் வாருங்கள்" என்றழைத்தார்.
திபுதிபுவென்று எல்லோரும் ஓடிவந்து அமர்ந்தார்கள்.
ஞானியார் கேட்டார்:
இந்த மண்டபத்தில் உட்காருந்திருந்தவர்கள் வெளியே போய் மீண்டும் உள்ளே வந்திருக்கிறீர்கள். உங்களில் போன தடவை உட்கார்ந்த அதே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் எத்தனை பேர்?
எல்லோரும் விழித்தார்கள்.
நாலைந்து பேர் மட்டும் பழைய இடத்தில் அமர்ந்திருந்தார்கள். மற்ற எல்லோரும் இடம் மாறி இருந்தார்கள். கேள்வி கேட்டவரைப் பார்த்து, ஞானியார் சொன்னார்:
பாருங்கள், இந்தச் சின்ன விஷயத்தில்கூட இவர்கள் மதி வேலை செய்யவில்லை.
கொஞ்சம் நிதானமாக யோசித்தால், இவர்கள் மெதுவாக வந்து, அவரவர் இடங்களில் அமர்ந்திருப்பார்கள்! இவர்கள் மதியை மூடிய மேகம் எது? "
கேள்வியாளர் கேட்டார்:
இது அவர்கள் அறியாமையைக் குறிக்கும்; இதை விதி என்று எப்படிச் சொல்கிறீர்கள்? "
ஞானியார் சொன்னார்:
அறியாமையே விதியின் கைப்பாவை.
அறிவு எல்லோருக்குமே தெளிவாக இருந்துவிட்டால், விதியும் இல்லை, விதித்தவனும் இல்லை.
கேள்வியார் கேட்டார்:
மனிதனின் அறியாமையே விதி என்றால், விதிக்கு தனி நியமங்கள் இல்லையா?
ஞானியார் சொன்னார்:
இருக்கின்றன!
இந்த உருவத்தில், இந்த இடத்தில் பிறக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லை.
உங்களைப் பிறக்க வைத்தது விதியின் பிரவாகம்.
இப்படித்தான் வாழவேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள்; அப்படி வாழ விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.
இந்த பெண்தான் எனக்குத் தேவை என்று முடிவு கட்டுகிறீர்கள்: அவளைக் கிடைக்கவிடாமல் செய்வது விதியின் பிரவாகம்.
எப்போது நீங்கள் நினைத்தது நடக்கவில்லையோ அப்போது உங்கள் நினைவுக்கு மேல் இன்னொன்று இருக்கிறது என்று அர்த்தம்.
அதற்கு நம் மூதாதையர் சூட்டிய பெயரே விதி.
-கண்ணதாசன்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்