search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லிகார்ஜூன கார்கே"

    • மல்லிகார்ஜுன கார்கே ராகுலின் மனதை மாற்றுவதற்கு பல தந்திரங்களை கையாண்டுள்ளாராம்.
    • பதவியை ஏற்கவில்லை என்றால் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்

    மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்றுள்ள ராகுல் காந்தி வயநாடு தொகுதியை தனது தங்கை பிரியங்கா காந்திக்கு விட்டுக்கொடுத்துள்ளார். இதற்கிடையில் ராகுல் காந்தியை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அமர வைக்க காங்கிரஸ் தொடக்கம் முதலே படாத பாடுபட்டு வருகிறது.

     

    ஆனால் ராகுல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க மறுத்து இதுவரை காங்கிரஸ் காமிட்டியினருக்கு பிடி கொடுக்கமாலேயே இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலும் கூட ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கும்படி தலைவர் கார்கே உட்பட கமிட்டியினர் வற்புறுத்தியதாக தெரிகிறது.

     

    குறிப்பாக மல்லிகார்ஜுன கார்கே ராகுலின் மனதை மாற்றுவதற்கு பல தந்திரங்களை கையாண்டுள்ளாராம். அதாவது, ராகுல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கவில்லை என்றால் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று செல்லமாக மிரட்டியுள்ளாராம்.

     

    இதுகுறித்து செய்தியாளர்கள் ராகுலிடன் கேள்வியெழுப்பிய நிலையில் அதற்கு அவர், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து முடிவெடுத்த பின்னர் அவர் [கார்கே] அறிவிப்பார், அவர் [கார்கே] என்னை மிரட்டியது உண்மைதான் என்று புன்னகையுடன் தெரிவித்தார்.

     

    நடந்த முடிந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமயிலான இந்தியா கூட்டணி 235 இடங்களைக் கைபற்றி பாராளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிரான மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. முன்னதாக இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தியை தான் பிராமராக தேர்ந்தெடுப்பேன் என்று கார்கே கூறியது குறிப்பிடத்தக்கது.

    • மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.
    • சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது.

    இந்நிலையில், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டுக்குச் சென்றார். அவரை சந்தித்து பாராளுமன்ற கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு பிரதமர் மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
    • ஜவகர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3-வது முறை பிரதமராகும் பெருமையை மோடி பெற்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி இன்று பதவியேற்கிறார்.

    இந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார்.

    • பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டது.
    • விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டது.

    திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் எம்.கே.விஷ்னு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த், நெல்லையில் ராபர்ட் ப்ரூஸ் மற்றும் மயிலாடுதுறையில் வக்கீல் சுதா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

    அத்துடன், விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக எம்.பி.க்கள் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை இன்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். விளவங்கோடு எம்.எல்.ஏ. தாரகையும் வாழ்த்து பெற்றார். அப்போது செல்வ பெருந்தகையும் உடனிருந்தார்.

    • 30 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்.
    • மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக பல்வேறு கட்சிகள் அறிவித்தன.

    மக்களவை தேர்தலில் 292 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. இன்று இரவு 7.15 மணிக்கு நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இவருடன் 30 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுக்க பல்வேறு அரசியல் தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனிடையே மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணியை சேர்ந்த பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன.

    இந்த நிலையில், நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இன்று காலை ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

    • இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
    • அதன்பின் பேசிய கார்கே, பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி போராடும் என்றார்.

    புதுடெல்லி:

    இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் இன்று மாலை நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எங்கள் கூட்டணிக்கு கிடைத்த அமோக ஆதரவிற்கு இந்தியா கூட்டணியின் அங்கத்தினர்கள், இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    பாஜக மற்றும் அவர்களின் வெறுப்பு, ஊழல் அரசியலுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் முதலாளித்துவத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்குமான ஆணையாகும்.

    மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும்.

    இது எங்களுடைய முடிவு. இந்த விஷயங்களில் நாங்கள் முழுமையாக உடன்பட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். பா.ஜ.க. ஆட்சி அமையக் கூடாது என்ற மக்களின் விருப்பத்தை உணர்ந்து உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்போம்.

    இது மோடிக்கு அப்பட்டமான தோல்வி. தோல்விகளை மறைக்க மோடி பல்வேறு யுக்திகளைக் கையாள்வார். மோடிக்கு எதிராக மக்கள் தீர்ப்பு அளித்துள்ளார்கள். ஆனால் இதை மோடி மாற்ற துடிக்கிறார் என தெரிவித்தார்.

    • காங்கிரஸ் வேட்பாளர்களிடமும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
    • வாக்கு எண்ணிக்கையின் போது செயல்படும் விதம் குறித்து வியூகம் அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது.

    நேற்று மாலை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க.வே 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்தன.

    இந்த நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் காங்கிரஸ் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.


    வாக்கு எண்ணிக்கையின் போது எப்படி நடந்து கொள்வது என்பது தொடர்பாக இந்த ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்துக்கு வர முடியாத சில தலைவர்கள் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்றனர்.

    இதே போன்று காங்கிரஸ் வேட்பாளர்களிடமும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது செயல்படும் விதம் குறித்து வியூகம் அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

    ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, 'இது கருத்துக் கணிப்பு அல்ல, மோடியின் ஊடகக் கருத்துக் கணிப்பு' என்றார். மேலும் இந்தியா கூட்டணிக்கு எத்தனை இடங்கள் என்று கேட்டால், "சித்து மூஸ் வாலா 295 பாடலைக் கேட்டீர்களா? 295" என கூறினார்.

    • ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம் என்றார் கார்கே.
    • அவர் மம்தா பானர்ஜி அல்லது அரவிந்த் கெஜ்ரிவாலைக் கேட்டாரா என பூனாவாலா கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்தால் நரேந்திர மோடிக்குப் பிறகு ராகுல் காந்திதான் நாட்டின் பிரதமராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகாரர்ஜூன கார்கே தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம். அவர் இளைஞர்களையும், நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்றார்.

    இந்நிலையில், பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மல்லிகார்ஜுன கார்கே (இந்தியா கூட்டணியின் பிரதமர் முகத்திற்கு) விருப்பம் எதுவாக இருந்தாலும், அது பொதுமக்களின் விருப்பமா என்பதுதான் கேள்வி?

    காங்கிரசுக்கோ அல்லது இந்தியா கூட்டணிக்கோ ஆட்சிக்கு வருவதற்கு பொதுமக்கள் வாய்ப்பளிக்கப் போவதில்லை.

    ஆனால் மல்லிகார்ஜுன கார்கே தனது விருப்பத்தை கூறியுள்ளார். அவர் மம்தா பானர்ஜி அல்லது அரவிந்த் கெஜ்ரிவாலைக் கேட்டாரா?

    இந்தியா கூட்டணி கடைசிக் கட்டத்தில் இறுதி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது.

    இன்றைய கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளப் போவதில்லை. டெல்லியில் நட்பைக் கடைப்பிடித்தவர்கள் பஞ்சாபில் எதிரிகளாக மாறுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

    • மோடி அரசு பணக்காரர்களை ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுடன் நிற்கிறது.
    • இந்த தேர்தல் பிரதமர் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல் என்றார் கார்கே.

    பாட்னா:

    பீகாரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    மோடி அரசு பணக்காரர்களை ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுடன் நிற்கிறது.

    நாங்கள் பாகிஸ்தானுடன் போரிட்டு வங்காளதேசத்துக்கு சுதந்திரம் பெற்று தந்தோம். சீனா இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகளையும், சாலைகளையும் கட்டி வருகிறது. ஆனால் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார்.

    இந்த தேர்தல் பிரதமர் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல். ராகுலுக்கும், மோடிக்குமான தேர்தல் அல்ல.

    பிரதமர் மோடி முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பீகாரை அவமதித்து விட்டார். ஏனெனில் முஜ்ரா நடனம் பீகாரில் ஆடப்படுகிறது. இதனால் அவர் பீகாரையும், அதன் வாக்காளர்களையும் அவமதிப்பு செய்து விட்டார் என தெரிவித்தார்.

    • பிரதமர் தனியாக அமர்ந்து தியானம் செய்கிறார். தவத்தின் பலன் கிடைக்குமா என தெரியவில்லை.
    • உழைத்தால்தான் வயிற்றை நிரப்பமுடியும் என்பது என் நம்பிக்கை என்றார் கார்கே.

    பெங்களூரு:

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கல்புர்கியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மா கங்கா என அழைக்கப்படும் 2047-ம் ஆண்டுக்கான திட்டங்களை பிரதமர் மோடி தயாரித்துள்ளார். 2047 வரை அவர் இருப்பாரா?

    அவர் சில சமயங்களில் கடலுக்குள் செல்வார். சில சமயம் கங்கையின் உள்ளே செல்கிறார். சில சமயம் குகைகளுக்குச் செல்கிறார். சில சமயம் தனியாக அமர்ந்து தியானம் செய்கிறார். அவரது தவத்தின் பலன் கிடைக்குமா என தெரியவில்லை.

    உழைத்தால்தான் வயிற்றை நிரப்பமுடியும் என்பது என் நம்பிக்கை. நல்ல காரியங்களைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். கெட்ட காரியங்களைச் செய்தால் கெட்ட பலன்தான் கிடைக்கும்.

    விஷத்தைக் கண்டு அதிலிருந்து விலகி இருக்கச் சொன்னாலும் அதை நக்க பிடிவாதம் பிடித்தால் என்ன பலன்? மோடியும் அப்படித்தான் என தெரிவித்தார்.

    • பிரியங்காவை ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வேட்பாளராக்கி முடக்குவதை விட, நாடு முழுவதும் அவர் பிரசாரம் செய்தால் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைக்கும்.
    • தற்போது பிரதமர் மோடியின் சித்தாந்தங்களை எதிர்த்து போராடுகிறோம்.

    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது காங்கிரஸ் குறைந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்காக காரணம், இந்தியா கூட்டணியின் வியூகம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக பேசினார்.

    பேட்டியின்போது கார்கே கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி முன் எப்போதும் இல்லாத அளவில் மிக குறைந்த அளவிலான தொகுதிகளிலேயே, அதாவது 328 இடங்களில் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது.

    இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும். அதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை காங்கிரஸ் எடுத்தது. இது இந்தியா கூட்டணியின் வியூகத்தின் ஒரு அம்சம் தான்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த, நாங்கள் தனித்தனியாக குழு அமைத்தோம். அந்த பேச்சுவார்த்தைகளின்படி கூட்டணி அமைந்தது.

    அதே நேரம் மேற்குவங்காளம், பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்களில் எங்கள் முயற்சி பலனளிக்கவில்லை. அதற்காக கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்று கூறமுடியாது.

    சோனியா காந்தி தனது வயது காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லை. அதே நேரம் பிரியங்கா, தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவு அவரும், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து எடுத்த முடிவு. சோனியாவும், பிரியங்காவும் காங்கிரசின் நட்சத்திர பேச்சாளர்கள். எங்களின் சொத்து. பிரியங்காவை ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வேட்பாளராக்கி முடக்குவதை விட, நாடு முழுவதும் அவர் பிரசாரம் செய்தால் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைக்கும். அதன் காரணமாகவே அவர் போட்டியிடவில்லை.

    அவரைப்போல கட்சியின் பல மூத்த தலைவர்களும், தேர்தலில் போட்டியிடாமல் பிரசாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் ராகுல் காந்தி, வெற்றி பெற்றபின்னர் எந்த தொகுதியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவரது சொந்த விருப்பம்.

    தற்போது பிரதமர் மோடியின் சித்தாந்தங்களை எதிர்த்து போராடுகிறோம். இதற்காக நாங்கள் ஒன்றிணைந்து உள்ளோம். நாட்டின் நலன் கருதி நாங்கள் சில முடிவுகளை எடுத்துள்ளோம்.

    கர்நாடக மாநிலத்தை பற்றி நான் நன்கு அறிவேன். அங்கு தேர்தல் முடிவுகள் குறித்து என்னால் சரியாக மதிப்பிட முடியும். அதுபோல் மற்ற மாநிலங்களில் இருந்தும் சாதகமான தகவல்கள் வருகிறது.

    நான் முன்பே கூறியதுபோல், பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்கு தேவையான எண்ணிக்கை இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும்.

    இந்தியா கூட்டணி அரசு அமைந்தால், அனைத்து சட்டங்களையும் மறுபரிசீலனை செய்வோம், மக்களை துன்புறுத்துவது எதுவாக இருந்தாலும், நாங்கள் அதை எதிர்ப்போம், பா.ஜனதா போல் விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தமாட்டோம்.

    கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜனதா, தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

    இவ்வாறு கார்கே கூறினார்.

    • தேர்தல் ஆணையம் பதிலளித்த நிலையில் கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.
    • தேர்தல் ஆணையம், கூட்டணி கட்சிகளுக்கு எழுதிய கடிதத்திற்கு பதிலளிப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

    தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் வலிமைக்காக காங்கிரஸ் குரல் கொடுக்கிறது என தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதில் அளித்துள்ளார்.

    வாக்குப்பதிவு சதவீதத்தில் உள்ள முரண்பாடு குறித்து மல்லிகார்ஜூன கார்கே எழுதிய கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் பதிலளித்த நிலையில் கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், " காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தின் பக்கம் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் யார் பக்கம் நிற்கின்றனர் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

    ஒரு பக்கம் குடிமக்களின் கேள்வி கேட்கும் உரிமையை மதிப்பதாக கூறும் தேர்தல் ஆணையம் மற்றொரு பக்கம் அறிவுரை என்ற பெயரில் மிரட்டுகிறது.

    தன்னுடைய கடிதம் கூட்டணிக் கட்சிகளுக்காக எழுதப்பட்டதே தவிர தேர்தல் ஆணையத்திற்காக எழுதப்படவில்லை.

    நேரடியாக கொடுக்கும் புகார்களையே நிராகரிக்கும் தேர்தல் ஆணையம், கூட்டணி கட்சிகளுக்கு எழுதிய கடிதத்திற்கு பதிலளிப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

    அரசியல் சாசனத்தின்படி நேர்மையான, நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதை தேர்தல் ஆணையம் உணர்ந்திருப்பது மகிழ்ச்சி" என்றார்.

    ×