என் மலர்
நீங்கள் தேடியது "மல்லிகார்ஜூன கார்கே"
- அரசிடம் கேள்வி கேட்பது எதிர்க்கட்சிகளின் வேலை.
- அதானி விவகாரம் பெருந்தொகையுடன் தொடர்புடைய மிகப்பெரிய ஊழல்.
புதுடெல்லி :
காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மத்திய அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பி கூறியதாவது:-
அதானி விவகாரம் பெருந்தொகையுடன் தொடர்புடைய மிகப்பெரிய ஊழல். இதை முறையாக விசாரிக்க வேண்டும். மாநிலங்களவையில் நான் பேசியபோது, பாராளுமன்ற நடைமுறைக்கு ஒவ்வாத எதையும் கூறிவிடவில்லை. நான் அதானி விவகாரத்தில் சில கேள்விகளை எழுப்பினேன்.
அதானி நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை ஏன் மோடி அரசு நடத்தவில்லை?
பாராளுமன்றத்தில் மோடியும், அவரது அரசும் அதானி என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட அனுமதிக்கவில்லையே, அதன் பின்னணியில் உள்ள காரணம்தான் என்ன?
ரிசர்வ் வங்கி, பங்குச்சந்தை பரிமாற்ற வாரியம் (செபி), அமலாக்கத்துறை இயக்குனரகம், தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (எஸ்.எப்.ஐ.ஓ), கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகம், வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவை ஏன் முடங்கிப்போய்விட்டன? எத்தனையோ ஊழல்கள் நடந்துள்ளன, ஏன் இன்னும் அவர்கள் மவுனமாக இருக்கிறார்கள்?
அரசிடம் கேள்வி கேட்பது எதிர்க்கட்சிகளின் வேலை. மக்கள்தான் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் பணத்தையும், அவர்களது உரிமைகளையும் பாதுகாக்க வேண்டியது, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஊழல்கள் குறித்து அரசிடம் கேள்விகள் எழுப்புவது, தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றவாதிகளின் பொறுப்பு.
ஆனால் அதானி விவகாரத்தில் அவர்கள் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த விஷயத்தை பாராளுமன்றத்தில் எழுப்பவும் எங்களை அனுமதிக்கவில்லை. எனவே தான் எங்கள் ஆட்கள் போராடுகிறார்கள். அதானி விவகாரத்தை பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து எழுப்புவோம்.
பாராளுமன்ற ஜனநாயகத்தில் நாங்கள் அரசிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்போம். ஆனால், ஜனநாயக ரீதியில் பாராளுமன்றம் இயங்குவதை அரசு விரும்பவில்லை. ஜனநாயக ரீதியில் செயல்பட தயாராக இல்லை என்றால், சர்வாதிகாரமாக பேசினால், மக்கள் அதிலிருந்து விடுபடுவார்கள்.
எனது பேச்சின் குறிப்பிட்ட பகுதிகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது பற்றி நான் சபைத்தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளேன். வெறுமனே எனது பேச்சின் அம்சங்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுவதால், மக்களும், ஊடகங்களும் கூறிய குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட்டு விட முடியாது.
ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து, அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று கேட்கின்றன. இந்த விஷயத்தில் ஒற்றுமை இருக்கிறது. ஒவ்வொருவரும் நாட்டை காப்பாற்ற வேண்டும், ஏழை மக்களின் சொத்தை பாதுகாக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்கிறார்.
- நாளை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்துக்கு சென்று, மரியாதை செலுத்த இருக்கிறார்.
சென்னை :
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பு ஏற்ற பின்னர் முதல் முறையாக 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இன்று (புதன்கிழமை) மதியம் 1 மணிக்கு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, 2.05 மணிக்கு சென்னை வந்தடைகிறார்.
மதியம் 2.30 மணி முதல் 4 மணி வரை முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்கிறார். மாலை 5 மணிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இன்று இரவு சென்னையிலேயே மல்லிகார்ஜூன கார்கே தங்குகிறார்.
நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்துக்கு சென்று, மரியாதை செலுத்த இருக்கிறார். மதியம் 1 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு 2 மணிக்கு சென்னை வந்தடைகிறார்.
தொடர்ந்து 2 மணி முதல் 3 மணி வரை முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். பின்னர் மாலை 4.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு பெங்களூரு செல்கிறார்.
- மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய பல தலைவர்கள் விரும்புகின்றனர்.
- ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் வெற்றி ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்.
சென்னை :
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதன்பின்பு அங்கிருந்து புறப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக மல்லிகார்ஜூன கார்கே, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதைத்தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே கலந்துரையாடினார்.
காங்கிரஸ் ஆட்சியின்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினருக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும், பா.ஜ.க. ஆட்சியில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் ராஜேஷ் லிலோத்யா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
பின்னர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய பல தலைவர்கள் விரும்புகின்றனர். மதச்சார்பற்ற ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் ஆதரிப்பவர்களை கூட்டணியுடன் இணைத்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் முன்வர வேண்டும் என பலரும் நினைக்கிறார்கள்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் வெற்றி ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் இந்த மாநிலங்கள் மிகச்சிறிய மாநிலங்கள் ஆகும்.
பொதுவாக வடகிழக்கு மாநில அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு சாதகமாகவே இருக்கும். இந்த மாநில மக்கள் பொதுவாக மத்தியில் இருக்கும் அரசுக்கு ஆதரவாகவே வாக்களிப்பர்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றியை சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
- ஏப்ரல் 22-ந் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு மக்களவையின் வீட்டு வசதி குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
- அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தி மக்களவை எம்.பி. பதவியை இழந்தார்.
எம்.பி. என்ற முறையில் ராகுல் காந்திக்கு டெல்லி துக்ளக் லேன் சாலையில் 12-ம் எண் முகவரி கொண்ட அரசு பங்களாவை மத்திய அரசு ஒதுக்கி இருந்தது. அந்த வீட்டில்தான் ராகுல் காந்தி குடியிருந்து வருகிறார். எம்.பி.பதவி பறிக்கப்பட்டதால் அந்த வீட்டை அவர் காலி செய்ய வேண்டி உள்ளது.
ஏப்ரல் 22-ந் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு மக்களவையின் வீட்டு வசதி குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ராகுல் காந்தியை பலவீனப்படுத்த எல்லா முயற்சிகளையும் அவர்கள் செய்வார்கள். அவர் (ராகுல் காந்தி) அரசு பங்களாவை காலி செய்தால் தனது தாயுடன் வசிப்பார் அல்லது என்னிடம் வரலாம். அவருக்காக நான் காலி செய்வேன்.
ராகுல் காந்தியை பயமுறுத்தும், அச்சுறுத்தும் மற்றும் அவமானப்படுத்தும் மத்திய அரசின் அணுகு முறையை கண்டிக்கிறேன்.
இது சரியான வழியில்லை. சில நேரங்களில் நாங்கள் 3 முதல் 4 மாதங்கள் வரை பங்களா இல்லாமல் இருக்கிறோம். 6 மாதங்களுக்கு பிறகு எனது பங்களாவை பெற்றேன். பிறரை இழிவுப்படுத்துவதற்காகவே இப்படி செய்கிறார்கள்.
இத்தகைய அணுகு முறைக்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிேறன்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
- பிரதமர் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
- நீங்கள் ஊழல்வாதிகளை தப்பிஓட வைக்கும் இயக்கம் நடத்துகிறீர்கள்.
புதுடெல்லி :
பா.ஜனதா தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஊழலில் ஈடுபட்டவர்கள் ஒன்றிணைந்து இருப்பதாக கூறினார்.
இந்தநிலையில், அதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
நரேந்திர மோடிஜி... அதானியின் போலி கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.20 ஆயிரம் கோடி, யாருடைய பணம்?
நீங்கள் ஊழல்வாதிகளை தப்பிஓட வைக்கும் இயக்கம் நடத்துகிறீர்கள். அதில், லலித் மோடி, நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா, ஜதின் மேத்தா ஆகியோர் உறுப்பினர்கள் அல்லவா? அந்த கூட்டணியின் அமைப்பாளர் நீங்களா?
'ஊழல் எதிர்ப்பு போராளி' என்று உங்களை நீங்களே காட்டிக்கொள்வதை நிறுத்துங்கள். பிரதமர் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
கர்நாடக பா.ஜனதா அரசு, 40 சதவீத கமிஷன் வாங்குவதாக கூறப்படுவது ஏன்? மேகாலயாவில் 'நம்பர் ஒன்' ஊழல் அரசில் பா.ஜனதா பங்கேற்றது ஏன்? ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா தலைவர்கள் ஊழலில் சம்பந்தப்படவில்லையா?
அமலாக்கத்துறை, 95 சதவீத எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஏவிவிடப்படுகிறது. ஆனால், சிலர் பா.ஜனதாவில் சேர்ந்தவுடன், அவர்கள் சலவை எந்திரத்தில் துவைத்ததுபோல் தூய்மையாகி விடுகிறார்கள்.
உங்களுக்கு 56 அங்குல மார்பு இருந்தால், அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க உத்தரவிடுங்கள். 9 ஆண்டுகளில் முதல்முறையாக வெளிப்படையாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும், மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வங்கிப்பணத்துடன் தப்பி ஓடியவர்களுக்கு எதிராக பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பது இல்லை. அவர் ஊழல்வாதியா? அல்லது நாங்களா? அவர் ஊழல்வாதிகளை ஆதரிக்கிறார்.
அதானியை பற்றி ஏன் பேசவில்லை என்ற நாங்கள் கேட்டால், எங்களை 'ஊழல்வாதிகள்' என்கிறார். பெரிய திருட்டுகளில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்கும் அவர், மற்றவர்களை 'திருடர்கள்' என்கிறார்.
அவர் உண்மையை பேச வேண்டும். ஆனால், மற்றவர்களை இழிவுபடுத்துவதில்தான் ஆர்வமாக இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சபையில் இடையூறு செய்தது, ஆளும் பா.ஜ.க.தான்.
- ரூ.50 லட்சம் கோடி பட்ஜெட், வெறும் 12 நிமிடங்களில் நிறைவேற்றப்படுகிறது.
புதுடெலி :
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் அமைந்துள்ள பா.ஜ.க. அரசு, ஜனநாயகத்தை பற்றி நிறைய பேசுகிறது. ஆனால் அதன்படி செயல்படுவதில்லை. ஜனநாயகத்துக்காகவும், அரசியல் சாசனத்துக்காகவும் எதிர்க்கட்சிகள் கூட்டாக போராடுகிறோம்.
ரூ.50 லட்சம் கோடி பட்ஜெட், வெறும் 12 நிமிடங்களில் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு ஆர்வம் இல்லை, அவர்கள் சபையில் இடையூறு செய்கிறார்கள் என்று அவர்கள் (பா.ஜ.க.) குற்றம் சாட்டுகிறார்கள்.
சபையில் இடையூறு செய்தது, ஆளும் பா.ஜ.க.தான். நாங்கள் பேசுவதற்கு கோரிக்கை விடுத்தபோதெல்லாம், எங்களுக்கு அனுமதி இல்லை. இப்படி நேர்ந்திருப்பது எனது 52 ஆண்டு கால பொது வாழ்க்கையில், இதுதான் முதல் முறை.
மத்திய அரசின் நோக்கம், பட்ஜெட் அமர்வில் எந்த விவாதமும் நடைபெறக்கூடாது என்பதுதான். இது தொடர்ந்தால், ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும், சர்வாதிகாரத்தை நோக்கி செல்லும் நிலை வந்து விடும்.
அதானி விவகாரத்தை 18, 19 கட்சிகள் எழுப்பினோம். அவரது சொத்துக்கள் ரூ.12 லட்சம் கோடி என்ற அளவுக்கு வெறும் 2 அல்லது 2½ ஆண்டு காலத்தில் அதிகரித்தது எப்படி என்றுதான் கேட்கிறோம்.பா.ஜ.க. எம்.பி.க்கள்தான் பெரும்பான்மையாக பங்கு வகிப்பார்கள் என்ற நிலையிலும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த எதற்காக பயப்படுகிறீர்கள்? ஒன்றும் புரியவில்லை, குழப்பமாக இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் அதானி விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. மாறாக இங்கிலாந்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி கவனத்தை திசை திருப்பினார்கள்.
அதானி விவகாரத்தில் ஆவணங்களைப் பார்ப்பதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்கிறோம்.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி மின்னல் வேகத்தில் பறிக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. எம்.பி.க்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து 16 நாட்களான பின்னும் எம்.பி. பதவி பறிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுடனும் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
- காங்கிரஸ் தலைவர் கார்கேயிடம் சில திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவாலை உருவாக்கி இருக்கிறது. கடந்த 2 பொதுத் தேர்தல் களில் பா.ஜனதாவிடம் படு தோல்வியை தழுவிய காங்கிரஸ் கட்சி 3-வது முறையாக பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
கடந்த 2 தேர்தல்களில் ஏற்பட்ட மோசமான தோல்வி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலகி நிற்கும் நிலையில், கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே காங்கிரசுக்கு தலைமை பொறுப்பேற்று அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டினால் மட்டுமே பா.ஜனதாவை வீழ்த்த முடியும் என்ற நிர்ப்பந்தமான நிலையில் காங்கிரஸ் கட்சி சிக்கியுள்ளது. கார்கே பொறுப்பேற்றதும், இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் அவருக்கு சாதகமான பதிலை சொல்லவில்லை.
இதனால் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒன்று திரளுமா? என்பதில் கேள்வி குறி எழுந்தது. இந்நிலையில் சமீபத்தில் ராகுல் காந்தியிடம் இருந்து எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக 19 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பாராளுமன்றத்திலும், பாராளுமன்ற வளாகத்திலும் போராட்டங்கள் நடத்தின.
ராகுல் பதவி பறிப்பு விவகாரத்தில் கைகோர்த்த எதிர்க்கட்சிகளை அப்படியே பாராளுமன்றத் தேர்தல் வரை ஒருங்கிணைத்து கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் 2 தினங்களுக்கு முன்பு தொடங்கின.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேசத் தொடங்கி உள்ளார். குறிப்பாக மாநிலங்களில் பலத்த செல்வாக்குடன் இருக்கும் கட்சிகளுடன் கார்கே பேசி இப்போதே ஒரு முடிவுக்கு வர திட்டமிட்டுள்ளார். அதன்படி அவர் இந்த வார தொடக்கத்தில் இருந்து பேச்சு வார்த்தையை தொடங்கி உள்ளார்.
தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுடனும் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நாடு முழுவதும் உள்ள எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும்போது ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கார்கே விவாதித்ததாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, தெலுங்கானா கட்சிகளை எப்படி பேசி சமாளிப்பது என்றும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் கார்கேயிடம் சில திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. எனவே எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் காங்கிரசுக்கு மிக முக்கிய பலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்வார் என்று கருதப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேசிய பிறகு பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோருடனும் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். விரைவில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய கூட்டம் நடத்த கார்கே ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.
- கே.எஸ்.அழகிரி மகள் திருமணம் நாளை காலை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
- மல்லிகார்ஜூன கார்கே இன்று மாலை தனி விமானத்தில் புறப்பட்டு இரவு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மகள் காஞ்சனா அழகிரி-ரங்கநாத் திருமணம் நாளை காலை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு அதே மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வரவேற்பு நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
இதற்காக மல்லிகார்ஜூன கார்கே மங்களூருவில் இருந்து இன்று மாலை தனி விமானத்தில் புறப்பட்டு இரவு 7 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து காரில் திருவான்மியூர் செல்கிறார். திருமண வரவேற்பில் கலந்துவிட்டு இரவே மங்களூரு புறப்பட்டு செல்கிறார்.
- காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புதிய ஆழத்துக்கு சரிந்து கொண்டிருக்கிறது என பாஜக தலைவர் தெரிவித்தார்.
- பாஜகவின் சித்தாந்தத்தை ஆதரித்தால் மரணம் நிச்சயம் என்று கார்கே கூறினார்.
கடாக்:
கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் மாநிலம் முழுவதும் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஆளுங்கட்சியான பாஜகவை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுக்கின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடாக் மாவட்டம் ரான் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசினார். இது பாஜகவினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. கார்கேவுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
கார்கே பேசியபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவை பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது டுவிட்டரில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
'காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் மோடியை 'விஷப் பாம்பு' என்று அழைக்கிறார். இப்படி பேசியது எப்படி முடிந்தது என்பது நமக்குத் தெரியும். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புதிய ஆழத்துக்கு சரிந்து கொண்டிருக்கிறது. இந்த விரக்தியானது, கர்நாடகாவில் காங்கிரஸ் தோல்வி அடைவதை காட்டுகிறது' என அமித் மால்வியா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, பாஜக பாம்பு போன்றது என்றும், அந்த கட்சியின் சித்தாந்தம் விஷம் போன்றது என்றும் தெரிவித்தார். அந்த சித்தாந்தத்தை ஆதரித்தால் மரணம் நிச்சயம் என்றும் அவர் கூறினார். நான் அவருக்கு (மோடி) எதிராக பேசவில்லை என்றும் கார்கே கூறினார்.
- கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
- பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது.
ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடாக் மாவட்டம் ரான் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டுப் பேசினார். இது பா.ஜ.க.வினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. கார்கேவுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது கருத்துகள் யாரையாவது புண்படுத்தி இருந்தாலோ, மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருந்தாலோ அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
- பிரதமர் மோடி மற்ற தலைவர்களை போன்றவர் அல்ல.
- பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
புதுடெல்லி :
கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடியை 'விஷப்பாம்பு' என்று காட்டமாக விமர்சித்தார். அக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கார்கே வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிலையில், அவருக்கு ரெயில்வே மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான அஸ்வினி வைஷ்ணவ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிரதமர் பற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் கருத்து, காங்கிரஸ் கட்சியின் கலாசாரத்தையும், மனப்பான்மையையும் காட்டுகிறது. தனிப்பட்ட விமர்சனம் செய்வதை காங்கிரஸ் கைவிடவில்லை என்று தெரிகிறது.
முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ஒரு தடவை பிரதமர் மோடியை 'பிறர் வாழ்க்கையுடன் விளையாடுபவர்' என்று கூறினார்.
தார்மீக அதிகாரம் என்று வரும்போது, பிரதமர் மோடி மற்ற தலைவர்களை போன்றவர் அல்ல. அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் சரியான திசையில் நாட்டை அழைத்துச் செல்கிறார் என்று மக்களுக்கு தெரியும்.
தனது வீட்டை அழகுபடுத்த ரூ.45 கோடி செலவிட்ட டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மக்களுக்கு துரோகம் செய்துள்ளார். தான் வாக்குறுதி அளித்ததற்கு நேர் எதிரான காரியத்தை அவர் செய்கிறார். தனது விருப்பத்தை நிறைவேற்ற அவர் எந்த எல்லைக்கும் செல்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் சமூகத்தில் சாதி விஷத்தை விதைத்து வருகிறார்கள்.
- பிரதமர் மோடி பற்றி மல்லிகார்ஜூன கார்கே சர்ச்சை கருத்து கூறியுள்ளார்.
ஹாசன் :
சிவமொக்கா தொகுதியில் தனக்கும், தனது மகனுக்கும் பா.ஜனதா டிக்கெட் கொடுக்கவில்லை என்றாலும், கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் ஈஸ்வரப்பா மாநிலம் முழுவதும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று அவர் ஹாசனில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் எங்களை குடும்ப கட்சி என்று குறை கூறுகிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அந்த கட்சியில் தான் தந்தை, மகன்கள், பேரன்கள் என அனைவரும் அரசியலில் உள்ளனர்.
அந்த கட்சியை நாங்கள் எப்படி கூற வேண்டும் என்று எச்.டி.குமாரசாமி சொல்ல வேண்டும். நிலைமை இவ்வாறு இருக்க ஹாசனில் போட்டியிட பவானி ரேவண்ணா டிக்கெட் கேட்டார். அப்படி கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமா?.
ஜனதாதளம் (எஸ்) கட்சியில் ஒரே குடும்பத்தினர் இருப்பதால் தான், வேறு முகம் இருக்கட்டும் என சி.எம்.இப்ராகிமை கட்சி தலைவர் பொறுப்பு வழங்கி கட்சியில் வைத்து இருக்கிறார்கள்.
கனகதாச ஜெயந்தியை அரசு விழாவாகவும், அந்த சமுதாய மக்கள் நலன் காக்க காகினேலே நலவாரியத்தையும் எடியூரப்பா அறிவித்தார். நாங்கள் வாக்கு வங்கிக்காக இவ்வாறு அறிவிக்கவில்லை. கனகதாசரின் சித்தாந்தம் அனைவரையும் சென்றடைய வேண்டும். அதுபோல் தான் அனைத்து சமுதாய மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை பா.ஜனதா செய்து வருகிறது. ஆனால் டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் சமூகத்தில் சாதி விஷத்தை விதைத்து வருகிறார்கள்.
பிரதமர் மோடி பற்றி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சர்ச்சை கருத்து கூறியுள்ளார். இதுபோன்று பேசிய பிறகு மல்லிகார்ஜுன கார்கே கட்சி பொறுப்பில் இருப்பது சரியல்ல. அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.