என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் கூட்டுறவு சங்கம்"

    • காடையாம்பட்டி அருகே வேளாண் கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
    • அவர்களிடம் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் குண்டுக்கல் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.

    இந்த சங்கத்தில் அப்பகுதி விவசாயிகள், கடந்த 6 ஆண்டு காலமாக பயிர் கடன், நகை கடன், மாடு வாங்க கடன் ஆகிய எந்த லோன் கேட்டாலும் இன்று, நாளை என்று அதிகாரிகள் காலம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து ஊர் மக்கள், விவசாயிகள் ஆகியோர் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரகள், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • ஏலத்தில் 1, 931 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.50 லட்சத்து 26 ஆயிரம் என்று விற்பனைக்கூட கண்காணிப்பாளா்கள் தெரிவித்தனா்.

    அவிநாசி:

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.50 லட்சத்து 26 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 1, 931 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.இதில், ஆா்.சி.எச். பி.டி.ரகப்பருத்தி குவிண்டால் ரூ.8,000 முதல் ரூ.9,362 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ரூ.2, 000 முதல் ரூ.4, 000 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.50 லட்சத்து 26 ஆயிரம் என்று விற்பனைக்கூட கண்காணிப்பாளா்கள் தெரிவித்தனா். 

    ×