என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொட்டிகளுக்கு"
- தேனி மாவட்டம் பண்ண–புரம் பேரூராட்சியில் பொது கழிப்பிட கழிவுத்–தொட்டியில் தவறி விழுந்து 2 பேர் பலியாகினர்.
- உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க, பொது கழிப்பிடத் தொட்டிகளைச் சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்க வேண்டும் என, பேரூராட்சிகள் துறை மாநில ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
வாழப்பாடி:
தேனி மாவட்டம் பண்ணபுரம் பேரூராட்சியில் பொது கழிப்பிட கழிவுத்–தொட்டியில் தவறி விழுந்து 2 பேர் பலியாகினர். இதனையடுத்து மற்ற பேரூராட்சி பகுதிகளிலும், இது போன்ற விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க, பொது கழிப்பிடத் தொட்டிகளைச் சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்க வேண்டும் என, பேரூராட்சிகள் துறை மாநில ஆணையர் செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கணேஷ்ராம் வழிகாட்டுதலின்படி, வாழப்பாடி பேரூராட்சியில், மக்கள் பயன்பாட்டில் உள்ள, 15 பொது கழிப்பிடங்களிலும் கழிவுத்தொட்டிகளை சுற்றியும், கல்தூண் நிறுத்தி இரும்பு கம்பி வேலி அமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை வாழப்பாடி பேரூராட்சி தலைவர் கவிதா சக்கரவர்த்தி செயல் அலுவலர் கணேசன், உதவி பொறியாளர் தினேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.