என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசாணை வெளியீடு"
- விவசாய நிலங்களை கையகப்படுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- பரந்தூரை சுற்றி உள்ள 20 கிராமங்களில் மொத்தம் 5746 ஏக்கர் நிலம் கையக்கப்படுத்தப்பட உள்ளன.
சென்னை:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு சுற்றி உள்ள கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
விவசாய நிலங்களை கையகப்படுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டு உள்ளது.
பரந்தூரை சுற்றி உள்ள 20 கிராமங்களில் மொத்தம் 5746 ஏக்கர் நிலம் கையக்கப்படுத்தப்பட உள்ளன. இதற்காக அரசு ரூ.19.24 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
- விபத்து நிவாரணத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் மகன் மற்றும் மகள் கல்வி பயில வருடாந்திர உதவித் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை:
மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித் தொகையினை உயர்த்தி வழங்க இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விபத்தினால் இறக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஒரு லட்ச ரூபாய் நிவாரணத்தொகை, இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கை அல்லது கால் இழப்பு, இரு கண்பார்வை இழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக அதிகரித்து வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் மகன் மற்றும் மகள் கல்வி பயில வருடாந்திர உதவித் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி பத்தாம் வகுப்பு பயிலும் மகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ஆயிரத்திலிருந்து இரண்டாயிரமாக வழங்கப்படும்.
12-ம் வகுப்பு பயிலும் மகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தியும், விடுதியில் தங்கி பயிலும் மகன் மகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.1200-லிருந்து ரூ.2500-ஆக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- அரசு இதற்காக இப்போது ரூ.3 கோடியே 24 லட்சத்து 32 ஆயிரத்தை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை:
சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் பணிபுரியும் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம், காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இதுபற்றி சட்டசபையில் அறிவித்திருந்த நிலையில், அரசு இதற்காக இப்போது ரூ.3 கோடியே 24 லட்சத்து 32 ஆயிரத்தை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
- தூய்மை காவலர்கள் இல்லம்தோறும் திடக்கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
- தூய்மை காவலர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும்.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மையாக வைத்திருக்க தூய்மை காவலர்கள் இல்லம்தோறும் திடக்கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
தூய்மை காவலர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக மாதாந்திர மதிப்பூதியம் 3600 ரூபாயிலிருந்து, 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிக்க பெற்றோர், மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
- விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கப்படும்.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக சென்னையில் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். மேலும் பல்வேறு ஊர்களில் உள்ள பிற மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானவர்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்க் கிழமை அவர்கள் அனைவரும் சென்னை உள்பட பணி செய்யும் இடங்களுக்கு திரும்ப வேண்டிய சூழல் உள்ளது. இதற்காக நாளை இரவே அவர்கள் புறப்பட வேண்டும். அதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோரும் மாணவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், தீபாவளிக்கு மறுநாளான 25-ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதர பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு 45-ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும்.
சென்னை:
ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40-ல் இருந்து 45 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதர பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு 45-ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும்.
- அரசாணை வழங்கி தமிழக அரசு தலைமை தணிக்கை இயக்குநர்
- அரசாணை வழங்கி தமிழக அரசு தலைமை தணிக்கை இயக்குநர்
சேலம்:
கூட்டுறவு நிறுவனங்க ளில் மகளிர் சுய உதவிக்கு ழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு 31.03.2021 தேதியில் நிலுவையில் உள்ள தொகையில் அபராத வட்டி மற்றும் இதர செலவினங்களை தவிர்த்து, அசல் மற்றும் வட்டி தொகைகளை தள்ளுபடி செய்து, ஆணை வழங்கப்பட்டது. இந்த அரசாணையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 3.12.2021 வரையிலான வட்டி தள்ளுபடியினை அரசே வழங்கும் என ஆணையிட்டது.
இந்த அரசாணையின்படி கூட்டுறவு துறையின் சரிபார்ப்புக் குழுவால் சரிபார்க்கப்பட்ட சுய உதவிக்குழு கடன்களுக்கான பயனாளிகள் பட்டியல் வெளி மாவட்ட தணிக்கையாளர்கள் மூலம் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
தணிக்கை நடைமுைறகள் வெளியீடு
இந்த சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட ஏதுவாக வெளி மாவட்ட தணிக்கையாளர்கள் ஒதுக்கீடு மற்றும் சிறப்பு தணிக்கை குறித்தான நடைமுறைகள் குறித்து அரசாணை வழங்கி தமிழக அரசு தலைமை தணிக்கை இயக்குநர் ெஜயசங்கர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி பட்டியலை சிறப்பு தணிக்கை குழு தலைவர் கட்டுப்பாட்டில் தணிக்கையாளர் பணி மேற்கொள்ள வேண்டும். தணிக்கையாளர்களுக்கு இச்சிறப்பு தணிக்கையின் முக்கியத்துவம் கருதி எவ்வித விடுப்பும் அனுமதிக்கப்பட மாட்டாது.சிறப்பு பணியில் 10 நாட்களுக்குள் தணிக்கை யாளர்கள் நிறைவு செய்வதற்கு போதிய தணிக்கையாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை மண்டல இணை இயக்கு நர்கள் கண்காணிப்பு செய்யவும், தணிக்கைக்கு தேவைப்படும் நாட்கள் அடிப்படையில், கூடுதல் நாட்கள் தேவைப்படும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு தணிக்கையாளர்களை மறு ஒதுக்கீடு செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சுய உதவிக்குழு கடன்களுக்கான தள்ளுபடி பெறுவதற்கு உண்டான தகுதிகளை நிறைவு செய்தோருக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்ப டுவதை உறுதி செய்யும் வகையிலும், தள்ளுபடிக்கு முழு தகுதியுள்ள பயனாளிகள் விடுபட்டு விடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
சிறப்பு தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கும்போது நிர்வாக அலுவலர், மேலாளர் சான்றிதழ் மற்றும் சிறப்பு தணிக்ைக மேற்கொள்ளும் தணிக்கையாளரின் சான்றிதழ் ஆகியவை இணைக்கப்பட வேண்டும். சரக உதவி இயக்குநர்கள், கட்டுபாட்டு அலுவலர்கள் சிறப்பு பணி மேற்கொள்ள ஏதுவாக ஒதுக்கீடு செய்யப்படும் அனைத்து தணிக்கையாளர்களையும், வருகிற 17-ந்தேதி பிற்ப கலில் சம்பந்தப்பட்ட பணியிடங்களில் இருந்து விடுவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சேலம், நாமக்கல்
ேசலம், நாமக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தணிக்கை யாளர் எண்ணிக்கை விபரம் வருமாறு:-உதவி இயக்குநர் சரகங்களான திருவண்ணா மலையில் இருந்து 22 பேர், கோவையில் இருந்து 16 பேர், கிருஷ்ணகிரியில் இருந்து 7 பேர் சேலம் உதவி இயக்குநர் சரகத்திற்கு தணிக்கையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் திருச்சியில் இருந்து 5 பேர், தஞ்சாவூரில் இருந்து 5 பேர், சேலம் மண்டலத்தில் இருந்து 2 பேர், கோவையில் இருந்து 18 பேர் நாமக்கல் உதவி இயக்குநர் சரகத்திற்கு தணிக்கையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்