என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்"
- எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை.
- காரசாரமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த 10-ந்தேதி முதல் பாராளுமன்ற தொகுதி வாரியாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டு உள்ளார்.
முதல் நாளில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 2 தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுநாளில் இருந்து தினமும் 3 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்மூலம் கடந்த 6 நாட்களில் 17 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசித்து தோல்விக்கான காரணங்கள் பற்றி அலசி ஆராய்ந்தார்.
நேற்று ராமநாதபுரம் நெல்லை, விருதுநகர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் காரசாரமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி யுள்ளன.
ராமநாதபுரம் போன்ற தென்மாவட்ட தொகுதிகளில் முக்குலத்தோர் அதிகம் இருப்பதால் அவர்களது வாக்குகள் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை கட்சியினர் முன் வைத்திருக்கிறார்கள்.
எனவே சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சி யில் சேர்ப்பது பற்றி ஆலோசிக்க வேண்டும். அவர்களை கட்சியில் சேர்த்தால் அ.தி.மு.க. மீண்டும் வலுப்பெறும் என்கிற பேச்சு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பரவலாகவே உள்ளது எனவும் ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் வற்புறுத்தி கூறியுள்ளனர்.
இவர்கள் 3 பேரும் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதால் முக்குலத்தோர் சமுதாய மக்களிடமிருந்து அ.தி.மு.க. விலகியே நிற்பதாகவும் வெளியில் பேசப்படுகிறது என்றும் நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளின் இந்த கருத்தை பொறுமையுடன் கேட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பற்றி நீங்கள் இங்கே குறிப்பிட்டீர்கள். அவர்களை எல்லாம் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்வது பற்றி தனியாக குழு அமைத்து ஆலோசிக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் சசிகலா-ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க.வின் தொடர் தோல்வியால் எடப்பாடி பழனிசாமி முதன் முறையாக தனது பிடிவாதத்தை தளர்த்தி இறங்கி வந்திருப்பதாகவும் ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் கூறி உள்ளனர்.
பாராளுமன்ற தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி நாளை மற்றும் நாளை மறுநாளும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
வருகிற 19-ந்தேதியுடன் இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைகிறது. இதன் பின்னர் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க அ.தி.மு.க. மேலிடம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
- மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. பங்கேற்பு
- 18 நபர்கள் கொண்ட பூத் கமிட்டியை அமைக்க வேண்டும்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் ஒன்றிய,நகர,பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்.ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் வருகிற மே 12-ந் தேதியன்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் , தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு கிளை மற்றும் வட்டங்களில் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்,
வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பூத்திற்கும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று 18 நபர்கள் கொண்ட பூத் கமிட்டியை அமைக்க வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பூத்திற்கும் பூத் வாரியாக பெண்கள் குழு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
அதில் நிர்வாகிகள் 9 பேர் செயற்குழு உறுப்பினர்கள் 9 பேர் மற்றும் உறுப்பினர்கள் என 25 நபர்களை நியமிக்க வேண்டும் என்பது உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட பொருளாளர் ஷாபூதீன், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் பூண்டி பிரகாஷ் உள்பட நகர , ஒன்றிய , பேரூர் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
- மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பொன்விழா நிறைவு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சமரசம், முனிவெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் சாகுல் அமீது, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், இந்திராணி மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம்சில் யாதவ் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது. அ.தி.மு.க., பொன்விழா நிறைவு மற்றும் 51-&ம் ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள தி.மு.க., அரசை கண்டிப்பது. அண்ணாவின் கொள்கைக்கு எதிராக இந்துக்களை இழிவாக பேசி வரும் தி.மு.க., எம்.பி., ராசாவை வன்மையாக கண்டிப்பது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வாக்குச் சாவடி முகவர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலாளர் ராஜசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மாவட்ட மகளிரணி செயலாளர் கல்பனா, மாவட்ட மாணவரணி செயலாளர் சரவணன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் மக்பூல், மாவட்ட மீனவரணி செயலாளர் புகழேந்தி, மாவட்ட பால்வளத் தலைவர் குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்