search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷ வாயு"

    • அடுத்தடுத்து உள்ள சிறிய வீடுகளில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர்.
    • மேன்ஹோலில் உருவான விஷ வாயு கழிவறை வழியாக வெளியேறி உயிரிழப்பு.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகரில் வீட்டு கழிவறையில் வெளியேறிய விஷ வாயுவால் தாய், மகள், சிறுமி என 3 பேர் இறந்தனர்.

    வீட்டு கழிவறையில் விஷ வாயு பரவியது எப்படி? என பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுவை நகர் மற்றும் நகரை அடுத்துள்ள புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் பாதாள சாக்கடையில் இணைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வெளியேறும் கழிவுநீர், குழாய்கள் வழியாக பாதாள சாக்கடையின் மேன்ஹோலுக்கு செல்கிறது. அங்கிருந்து கழிவுநீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்கிறது.

    அங்கு திட கழிவுகளை தனியாக பிரித்து கழிவுநீரை சுத்திகரித்து வாய்க் காலில் விடுகின் றனர். சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை உறிஞ்சி எடுக்கும் போது, குழாயில் சில இடங்களில் காற்று வெற்றிடம் உருவாகும்.

    அங்கு விஷ வாயு உருவாகி வெற்றிடத்தை நிரப்பும். சில நேரம் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்படும்போது மேன்ஹோலில் தேங்கி நிற்கும் கழிவுகளால் மீத்தேன், நைட்ரஜன் சல்பைடு, அமோனியா போன்ற வாயுக்கள் உருவாகும்.

    ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் அடுத்தடுத்து உள்ள சிறிய வீடுகளில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்கு கழிப்பறை கட்டவே இடம் போதாத நிலை உள்ளது. அதோடு பலர் கழிவறையில் இருந்து பாதாள சாக்கடைக்கு செல்லும் குழாயில் வாயு வெளியே வராதபடி எஸ் அல்லது பி பென்ட் வடிவ அமைப்பை ஏற்படுத்த வில்லை.

    இதனால் மேன்ஹோலில் உருவான விஷ வாயு கழிவறை வழியாக வெளியேறி உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

    ஒவ்வொரு வீட்டிலும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க பொதுப்பணித்துறையிடம் தகவல் தெரிவித்து, அங்கீகரிக்கப்பட்ட பிளம்பர் மூலம் பணிகளை செய்ய வேண்டும். இணைப்புகள் சரியாக கொடுக்கப்பட்டுள்ளதா? துர்நாற்றம், விஷவாயு வெளியேறாமல் இருக்க எஸ் அல்லது பி பென்ட் அமைக்கப் பட்டுள்ளதா? என சரி பார்க்க வேண்டும்.

    கழிப்பறையில் இருந்து செல்லும் குழாய்க்கும், பாதாள சாக்கடையில் இணைக்கும் குழாய்க்கும் உள்ள இடைவெளியில் சிறிய சதுர தொட்டி கட்டி காற்று வெளியேற வென்ட் அமைத்தால் இதுபோன்ற விஷ வாயு தாக்கத்தை தவிர்க்கலாம்.

    பாதாள சாக்கடை மென்ஹோலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்ள வேண்டும். கழிவுநீர் குழாய்களில் நாப்கின், துணி, பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட மக்காத குப்பைகளை போடக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஹைட்ரஜன் சல்பைடு வாயு

    விஷ வாயு தாக்கி உயிரிழப்பு ஏற்பட்ட புதுநகர் பகுதியில் புதுவை மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமையிலான நிபுணர்கள், பாதாள சாக்கடை மேன்ஹோல், உயிரிழப்பு ஏற்பட்ட வீட்டின் கழிவறையில் விஷ வாயு தாக்கம் எவ்வளவு உள்ளது என நவீன எந்திரங்கள் மூலம் அளவீடு செய்தனர்.

    வீட்டின் கழிவறைகளில் விஷ வாயு ஏதும் இல்லை. மேன்ஹோலில் வழக்கமான அளவை விட ஹைட்ரஜன் சல்பைடு வாயு அதிகமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. உயிரிழப்பு ஹைட்ரஜன் சல்பைடு வாயு மூலம் ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த வாயு வெளியேற மேன்ஹோல்கள் உடனடியாக திறந்து வைக்கப்பட்டது.

    • சர்க்கரை ஆலை பாகு கழிவுகளை அகற்றும் பணியில் இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
    • விஷவாயு கசிவால் தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் புகளூரில் தனியாருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் கரும்புகள் இந்த ஆலையில் அரவைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது

    இந்நிலையில் இந்த சர்க்கரை ஆலையில் பாகு காய்ச்சி அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குழாய்கள் மூலம் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது தற்போது பொங்கல் விடுமுறை தினத்தை ஒட்டி தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.

    இன்று மீண்டும் சர்க்கரை ஆலையில் அரவைப் பணிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக தேங்கி கிடந்த சர்க்கரை ஆலை பாகு கழிவுகளை அகற்றும் பணியில் இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    ஒரு வாரமாக தேங்கியிருந்த கழிவுகளில் இருந்து திடீரென்று வாயு கசிவு ஏற்பட்டது. இதையடுத்து பணியில் இருந்த இரண்டு தொழிலாளர்களும் திடீரென மயங்கி விழுந்தனர். உடனடியாக அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வேலாயுதம் வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பள்ளி வளாகத்திற்குள் விஷ வாயு பரவியதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜர் காலனியில் உள்ள அரசு பள்ளியில் இன்று மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். அடுத்தடுத்து மாணவர்கள் மயங்கி விழுந்ததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓசூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    பள்ளி வளாகத்திற்குள் விஷ வாயு பரவியதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் மருத்துவமனை முன்பாக கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×